என் மலர்
டென்னிஸ்

ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
- ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது.
- தகுதிச் சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






