என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சனில் தவறு ஏதும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கமிட்டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
    காலே மைதானத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அப்போது ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.

    ஏற்கனவே 2014-ல் இதுபோன்று புகார் எழுப்பப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா வெஸ்ட் இண்டீஸ் சென்று அணியுடன் இணைகிறார்.
    இந்திய பெண்கள் டி20 கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஸ்மிரிதி மந்தனா. கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும்போது இவரது கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியுடன் இவர் செல்லவில்லை.

    இவருக்குப் பதிலாக மாற்று வீராங்கனை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரது காயம் குணமடைந்ததால் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியுடன் வருகிறது 3-ந்தேதி இணைகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
    தியோதர் டிராபியில் இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் சதம் அடிக்க இந்தியா ‘சி’ 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையில் தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின.

    இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 38.3 ஓவர்களில் 226 ரன்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

    மயங்க் அகர்வால் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 142 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 72 ரன்கள் அடிக்க இந்தியா ‘சி’ 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது.

    பின்னர் 367 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங் செய்தது. சக்சேனாவின் அபாரமான பந்து வீச்சில் இந்தியா ‘ஏ’ 29.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பி  232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  சக்சேனா 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது. அந்த அணியின் பெரேரா அதிகபட்சமாக 57 ரன்கள் விளாசினார். ராஜபக்சே 17 ரன்களும், பெர்னாண்டோ 20 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 57 ரன்கள் விளாச 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மிட்செல் ஸ்டார்க்

    ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததால் இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
    ஹாங்காங் அணியின் முன்னாள் கேப்டனும், இளம் வீரருமான அன்ஷுமான் ராத், விதர்பா அணியின் உள்ளூர் வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
    ஹாங்காங் அணியின் முன்னாள் கேப்டன் அன்ஷுமான் ராத். இளம் வீரரான இவருக்கு இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பது தீராத ஆசையாக உள்ளது. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் விதர்பா அணியில் தனது பெயரை உள்ளூர் வீரராக பதிவு செய்துள்ளார்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட 286 ரன்கள் சேஸிங்கை ஹாங்காங் நெருங்கி வந்தது. ராத் தொடக்க வீரர் நிஜாகத் கான் உடன் இணைந்து 178 ரன்கள் சேர்த்தார்.

    ஒரு கட்டத்தில் இந்தியா தோல்வியடைந்து விடும் நிலை இருந்து. இறுதியில் ஹாங்காங் 26 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதுதான் இந்தியாவில் உள்ள அணியில் சேர உத்வேகமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    நான் வேடிக்கையாக கூறிய கருத்தை பெரிதாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர் என பரூப் என்ஜினீயர் அனுஷ்கா சர்மா குறித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர். இவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ‘‘இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் வாங்கி கொடுக்கும் வேலையை பார்த்தனர்’’ என்று கூறினார். அத்துடன் தேர்வுக்குழுவை கடுமையாக சாடினார்.

    ஆனால், அனுஷ்கா சர்மாவுக்கு தேர்வுக்குழு உறுப்பினர் தேனீர் கோப்பை சுமந்ததாக வெளியான செய்தி கடும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த விமர்சனத்திற்கு அனுஷ்கா சர்மா நீண்ட கடிதம் மூலம் விளக்கம் அளித்து, கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நான் வேடிக்கையாக கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. மனம் புண்படுவதாக அனுஷ்கா சர்மா உணர்ந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பரூக் என்ஜினீயரிங் தனது விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    பரூப் என்ஜினீயர் தனது விளக்க உரையில் ‘‘நான் பேசிய கருத்து உண்மைதான். ஆனால் நான் அனுஷ்கா சர்மாவை விமர்சனம் செய்யவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான பெண். அவர் நல்ல மனிதர். அவரும், விராட் கோலியும் ரோல் மாடலாக உள்ளனர். நான் அவருக்கு எதிரானவர் அல்ல.

    புண்படுவதாக அவர் உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிகவம் மோசமானதாக உணர்ந்தால், அதற்காக வருந்துகிறேன். தேர்வாளர்கள் அவர்களுடைய வேலையை சரியாக செய்யாததால், கடுமையாக விமர்சனம் செய்தேன். அனுஷ்கா சர்மா அல்லது விராட் கோலிக்கு எதிராக ஏதும் இல்லை.

    நான் வேடிக்கையாக சொன்ன ஒரு சிறிய கருத்து மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
    டெல்லியில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளதால் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
    இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், திட்டமிட்டபடி முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில்தான் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி  நேற்று தெரிவித்தார்.

    வங்காளதேச வீரர்

    இதையடுத்து, இருநாட்டு வீரர்களும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக, வங்காளதேச வீரர்கள் சிலர் மாஸ்க் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.
    முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுவதால், ஆட்டத்தை பார்க்க பிரபலமான வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இப்போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி முயற்சியால் பகல்-இரவு போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு முக்கிய பிரமுகர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி முதல்நாள் ஆட்டத்தை நேரில் காண வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜெக்தீப் தன்கார், கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோரும் போட்டியை நேரில் காண அழைக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் 2-வது வெற்றிக்காக கவுகாத்தி - கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இன்று கவுகாத்தியில் நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் இரண்டு ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

    இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்தது.
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் ஐந்து ஆட்டம் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் 2 ரன்னிலும், முன்ரோ 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் டிம் சிபர்ட் (32 ரன்), ராஸ் டெய்லர் (44 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 17 பந்தில் 30 ரன் எடுத்தார்.

    நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் 11 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    அதன்பின் ஜேம்ஸ் வின்சி (59 ரன்), கேப்டன் மோர்கன் (34 ரன்) ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி வெலிங்டனில் நடக்கிறது.
    டெல்லி காற்றுமாசால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

    தற்போது டெல்லியில் காற்று மாசு நிலவுகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசுகளும், விவசாய கழிவுகளை கொளுத்துவதாலும் காற்றின் மாசு மிக அதிகமாகி விட்டது.

    இதனால் முதல் 20 ஓவர் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதே கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வலியுறுத்தினார்.

    ஆனால் டெல்லியில் முதல் 20 ஓவர் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

    இதற்கிடையே வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது லிட்டன் தாஸ் முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, “ டெல்லியில் 3-ந் தேதி போட்டி நடக்கும் என்பதை அறிவேன். இதனால் அங்கு விளையாடுவோம். இதற்கு முன்பு டெல்லியில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி போது எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அதுபற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. டெல்லியில் காற்றுமாசு பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

    கேப்டன் பதவி என்பது நமது கையில் இல்லை. ஒரு ஆட்டமோ அல்லது 100 ஆட்டமோ கேப்டனாக இருப்பது கவுரவமாகும்.

    நான் எவ்வளவு நாளுக்கு கேப்டனாக இருப்பேன் என்பதை பற்றி சிந்திக்க வில்லை. எப்போதெல்லாம் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கிறதோ அதை அனுபவித்து, வெற்றிக்காக விளையாடுகிறேன்.

    வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். மற்றவர்களை நான் எதுவும் சொல்ல முடியாது.

    இதற்கு முன்பு துலீப் டிராபியில் ஒருமுறை இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடி இருக்கிறேன். அது நல்ல அனுபவமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேரில் ஆஜராக நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். 

    ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் டிராவிட் துணை தலைவர் பதவியில் இருந்து வருகிறார். எனவே அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினையாகும் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் தெரிவித்து இருந்தார். 

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் டிராவிட்டிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு டிராவிட் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். 

    அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட விடுப்பில் இருக்கிறேன் என்றும் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் மீண்டும் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×