search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மிரிதி மந்தனா
    X
    ஸ்மிரிதி மந்தனா

    காயம் குணமடைந்ததால் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா வெஸ்ட் இண்டீஸ் சென்று அணியுடன் இணைகிறார்.
    இந்திய பெண்கள் டி20 கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஸ்மிரிதி மந்தனா. கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும்போது இவரது கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியுடன் இவர் செல்லவில்லை.

    இவருக்குப் பதிலாக மாற்று வீராங்கனை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரது காயம் குணமடைந்ததால் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியுடன் வருகிறது 3-ந்தேதி இணைகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×