என் மலர்
விளையாட்டு
இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேரில் ஆஜராக நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
புதுடெல்லி:
பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் டிராவிட் துணை தலைவர் பதவியில் இருந்து வருகிறார். எனவே அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினையாகும் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் டிராவிட்டிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு டிராவிட் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார்.
அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட விடுப்பில் இருக்கிறேன் என்றும் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் மீண்டும் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய ஒடிசா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒடிசா வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் ஒடிசா அணி 3-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இறுதியில், மும்பை சிட்டி அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவுசெய்த ஒடிசா எப்.சி. அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸில் ஆஷ்லே பார்ட்டி, பெலிண்டா பென்சிக் அரையிறுதிக்கு முன்னேறினர்.
சீனாவில் உள்ள ஷென்சென்னில் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஷ்லே பார்ட்டி பெட்ரோ கிவிட்டோவை 6-4, 6-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெலிண்டா பென்சிக்கு எதிராக கிகி பெட்டென்ஸ் 5-7, 0-1 என பின்தங்கிய நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் வெளியேறியதால், பென்சிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜப்பானில் நடந்த குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டியில் இந்தியாவின் சிவா மற்றும் ராணி தங்க பதக்கங்களை வென்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் அடுத்த வருடம் நடைபெற உள்ளன. இதற்கான சோதனை போட்டிகள் நடந்து வருகின்றன.

இதேபோன்று மகளிருக்கான குத்து சண்டை போட்டி ஒன்றில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி - ஆஸ்திரேலிய நாட்டின் கெய்ட்லின் பார்க்கர் மோதினார்கள். ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான ராணி இந்த போட்டியில் கெய்ட்லினை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதில் இன்று நடந்த குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டி ஒன்றில் ஆடவருக்கான 63 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான சிவா தபா, கஜகஸ்தான் நாட்டின் தேசிய சாம்பியன் மற்றும் ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான சனடாலி தொல்டாயேவ் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில், 4 முறை ஆசிய பதக்கம் வென்றவரான தபா 5-0 என்ற புள்ளி கணக்கில் சனடாலியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதேபோன்று மகளிருக்கான குத்து சண்டை போட்டி ஒன்றில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி - ஆஸ்திரேலிய நாட்டின் கெய்ட்லின் பார்க்கர் மோதினார்கள். ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான ராணி இந்த போட்டியில் கெய்ட்லினை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக அளவில் தலையிடலாம் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்ற பின், உள்ளூர் கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் முன்னேற்ற ஆர்வம் காட்டி வருகிறார்.
கிரிக்கெட் வீரர்களை சிறந்த முறையில் உருவாக்க பிசிசிஐ, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறது. இதன் தலைவராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கங்குலி ராகுல் டிராவிட் உடன் சந்தித்து பேசினார். அப்போது கிரிக்கெட் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி , அவரது பதவிக் காலம் முடியும் வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக அளவில் கவனம் செலுத்தலாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் என்ஜீனியர் விமர்சனத்திற்கு விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா காட்டமான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மீது சமீப காலமாக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறன.
அவர்களை பற்றி விமர்சனம் எழுப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் என்ஜினீயர், ‘‘இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலிக்கு தேனீர் வாங்கிக் கொடுத்தனர். அதை நான் பார்த்தேன்’’ என்று கூறினார்.
பரூக் என்ஜினீயரின் இந்த கருத்துக்கு ஆனுஷ்கா சர்மா கடும் காட்டமான வகையில் நீண்ட கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அவர் தனது கடிதத்தில் ‘‘நான் உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்தேன். அப்போது ஃபேமிலி பாக்ஸில் உட்கார்ந்து போட்டியை பார்த்தேன். தேர்வாளர்கள் இருக்கும் பகுதியில் நான் இருக்கவில்லை.
இப்படி இருக்கும்போது, நீங்கள் உண்மையான செய்தியை சொல்ல விரும்பினால் அதைபற்றி சொல்லுங்கள். தேர்வுக்குழு மற்றும் அவர்களின் தகுதி பற்றி பேச விரும்பினால், உங்களுடைய தனிப்பட்ட கருத்தை நீங்கள் கூறலாம். ஆனால், என்னுடைய பெயரை உள்ளே இழுத்து விடக்கூடாது. இதுபோன்ற விஷயத்தில் என்னுடைய பெயரை பயன்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.
நான் விராட் கோலியின் காதலியாக இருக்கும்போதும், தற்போது மனைவியாக இருக்கும்போதும் நான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறேன். அப்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தேன்.
என்னுடைய பாதுகாப்பு மற்றும் டிக்கெட் விஷயத்தில் கிரிக்கெட் போர்டு உடன் என்னை இணைத்து பேசுகிறார்கள். உண்மை என்னவென்றால், விமானம் மற்றும் போட்டி ஆகியவற்றிற்கான டிக்கெட் என்னுடைய சொந்த பணத்தில் வாங்கியது. இதில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் நான் இருந்ததை பற்றி விமர்சனம் செய்தார்கள். தூதர அதிகாரியின் மனைவி கேட்டுக்கொண்டதனால்தான் நான் அதில் கலந்து கொண்டேன். அப்போது கூட எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இது மிகப்பெரிய விமர்சனமாக எழுந்தது. என்னை விருந்துக்கு முறைப்படி அழைத்திருந்தார்கள். என்றாலும், நானாகவே காலந்து கொண்டதாக கூறினார்கள். அப்போதும் அமைதியாக இருந்தேன்.

ஒருவருடைய அமைதியை பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்தான் தற்போது பேசியுள்ளேன். உண்மையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு மனிதரோ, கிரிக்கெட் போர்டோ, அல்லது எனது கணவரோ எனது பெயரை தேவையில்லாமல் இழுத்து பேசக்கூடாது. என்னை விட்டுவிடுங்கள்.
நான் என்னுடைய சொந்த கேரியர் மூலம் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இந்த விஷயத்தில் நான் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது’’ என்றார்.

தற்போது இதுபோன்ற செய்திகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் என்னுடைய அமைதியை முறித்திக் கொண்டு பதில் அளிக்க முடிவு செய்தேன்.

ஒருவருடைய அமைதியை பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்தான் தற்போது பேசியுள்ளேன். உண்மையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு மனிதரோ, கிரிக்கெட் போர்டோ, அல்லது எனது கணவரோ எனது பெயரை தேவையில்லாமல் இழுத்து பேசக்கூடாது. என்னை விட்டுவிடுங்கள்.
நான் என்னுடைய சொந்த கேரியர் மூலம் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இந்த விஷயத்தில் நான் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது’’ என்றார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘வலுவான அணியுடன் வங்காளதேசம் இந்தியா வந்துள்ளது. இதனால் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு இது கடினமான தொடராக இருக்கும். என்றாலும், இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றும்’’ என்றார்.

பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடக்க இருப்பது குறித்து சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
இந்தியா முதன்முறையாக பகல்-இரவு போட்டியில் விளையாடுவது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல்-இரவு ஆட்டம் என்பது அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம்.
ஆனால், பனி முக்கிய காரணமாக அமைந்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
கெய்க்வார்டு, பாபா அபரஜித் ஆகியோரின் சதத்தால் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அபார வெற்றி பெற்றது.
தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா ‘பி’ அணியின் கெய்க்வார்டு, பன்சால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பன்சால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெய்ஸ்வால் 34 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கெய்க்வார்டு உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தது. கெய்க்வார்டு 113 ரன்களும், பாபா அபரிஜித் 101 பந்தில் 101 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
இருவரின் சதங்களால் இந்தியா ‘பி’ 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. இந்தியா ‘பி’ அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ அணி ரன்கள் சேர்க்க திணறியது.
கேப்டன் விஹாரி மட்டும் தாக்குப்பிடித்து 59 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தியா ‘ஏ’ 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. இந்தியா ‘பி’ 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா ‘பி’ அணி சார்பில் கலாரியா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் என தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு உனத்கட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. டெஸ்ட் போட்டியில் பொதுவாக ரெட் பந்து பயன்படுத்தப்படும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது.
தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகா ஆகியோர் மட்டுமே பிங்க் பந்தில் விளையாடியுள்ளனர். விராட் கோலி உள்பட மற்ற வீரர்கள் விளையாடியதில்லை.
உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் பிங்க் பந்தில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உனத்கட் கூறுகையில் ‘‘டெஸ்டில் பயன்படுத்தப்படும் ரெட் பந்தில் இருந்து முற்றிலுமாக மாறி பிங்க் பந்தை பயன்படுத்துவதால், அது எல்லோருக்கும் சவாலானதாக இருக்கும்.
எஸ்.ஜி. ரெட் பந்தை போன்று பிங்க் பந்து முன்னதாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு முன் பந்தை தரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். உள்ளூர் போட்டிகளுக்கு தயார் செய்யப்படும் ஆடுகளத்தை விட தரமான ஆடுகளத்தை தயார் செய்வார்கள். பிங்க் பந்து போட்டி சிறந்த ஆட்டமாக இருக்கும்.
புதிய பிங்க் பந்து முன்னதாகவே ரெட் பந்தை காட்டிலும் அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் புதுப்பந்தை எதிர்கொள்ளுவது பேட்ஸ்மேன்களும்’’ என்றார்.

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர். டெல்லி காற்றில் மூன்று நான்கு மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், அதிரடிக்கு பெயர் போனவர். அசாத்திய ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள மேக்ஸ்வெல், சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குறிப்பிடும்படியாக ஆடவில்லை.
தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘மேக்ஸ்வேல் மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருக்க உள்ளார். தனது பிரச்சினையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை மேக்ஸ்வெல் விளாசித்தள்ளியது குறிப்பிடத்தக்கது.