search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிங்க் பந்து பகல் இரவு ஆட்டம்
    X
    பிங்க் பந்து பகல் இரவு ஆட்டம்

    பிங்க் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும்: தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு உனத்கட் எச்சரிக்கை

    பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் என தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு உனத்கட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. டெஸ்ட் போட்டியில் பொதுவாக ரெட் பந்து பயன்படுத்தப்படும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது.

    தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகா ஆகியோர் மட்டுமே பிங்க் பந்தில் விளையாடியுள்ளனர். விராட் கோலி உள்பட மற்ற வீரர்கள் விளையாடியதில்லை.

    உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் பிங்க் பந்தில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உனத்கட் கூறுகையில் ‘‘டெஸ்டில் பயன்படுத்தப்படும் ரெட் பந்தில் இருந்து முற்றிலுமாக மாறி பிங்க் பந்தை பயன்படுத்துவதால், அது எல்லோருக்கும் சவாலானதாக இருக்கும்.

    எஸ்.ஜி. ரெட் பந்தை போன்று பிங்க் பந்து முன்னதாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு முன் பந்தை தரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். உள்ளூர் போட்டிகளுக்கு தயார் செய்யப்படும் ஆடுகளத்தை விட தரமான ஆடுகளத்தை தயார் செய்வார்கள். பிங்க் பந்து போட்டி சிறந்த ஆட்டமாக இருக்கும்.

    புதிய பிங்க் பந்து முன்னதாகவே ரெட் பந்தை காட்டிலும் அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் புதுப்பந்தை எதிர்கொள்ளுவது பேட்ஸ்மேன்களும்’’ என்றார்.
    Next Story
    ×