search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா - கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை
    X
    கோவா - கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை

    ஐ.எஸ்.எல். கால்பந்து: 2-வது வெற்றி யாருக்கு?- கவுகாத்தி - கோவா இன்று மோதல்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் 2-வது வெற்றிக்காக கவுகாத்தி - கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இன்று கவுகாத்தியில் நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் இரண்டு ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

    இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்தது.
    Next Story
    ×