என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஹாமில்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் இரட்டை சதமும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெரின் அபார பந்து வீச்சும் (மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்) நியூசிலாந்துக்கு இமாலய வெற்றியை தேடித்தந்தன. இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் நேற்று விலகினர். இதையடுத்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல், லோக்கி பெர்குசன், டாட் ஆஸ்டில் ஆகியோர் அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் உள்ள நியூசிலாந்து அணி ஹாமில்டன் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 6 டெஸ்டுகளில் (5-ல் வெற்றி, ஒன்றில் டிரா) தோல்வி கண்டதில்லை. அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து படையினர் ஆயத்தமாக உள்ளனர்.
தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து கேப்டன் 28 வயதான ஜோ ரூட் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். சமீப காலமாக அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2, 11 ரன் மட்டுமே எடுத்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 முறை டக்-அவுட் ஆனார். இந்த ஆண்டில் அவரது ரன்சராசரி 30-க்கும் குறைவாக (27.40) உள்ளது. கேப்டன் பதவியால் அவரது ஆட்டத்தின் திறன் பாதிப்புக்குள்ளாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பழைய நிலைக்கு திரும்புவதுடன், நியூசிலாந்துக்கும் பதிலடி கொடுத்தால் தான் அவர் சிக்கலில் இருந்து விடுபட முடியும்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பது மிகப்பெரிய நெருக்கடியாகும். சக வீரர்கள், அணியின் உதவியாளர்கள், அணி நிர்வாகம் என்று அனைவரும் கேப்டன் ஜோ ரூட்டுக்கு ஆதரவாக இருக்கிறோம்.’ என்றார்.
முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் மீதான கண்காணிப்பை தீவிரமாக்க முடிவு செய்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதல் 4 ஆட்டங்களில் ஒரு டிரா, 3 தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இனிமேல் அவ்வளவு தான் என்று எல்லோரும் நினைத்த நிலையில் சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் (இஞ்சுரி டைமில்) 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஒடிசா அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (கேரளா, கொல்கத்தா அணிக்கு எதிராக) டிரா கண்டது. 2-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘எனது முன்கள வீரர்களின் திறமை குறித்து நான் ஒருபோதும் சந்தேகம் கொண்டதில்லை. பயிற்சியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் கோல் அடிக்கிறார்கள். ஆந்த்ரே ஸ்கெம்பிரி, நெர்ஜூஸ் வல்ஸ்கிஸ் ஆகியோர் எங்கள் அணிக்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறமை குறித்து எனக்கு நன்கு தெரியும். பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடிய அவர்கள் ஐ.எஸ்.எல். போட்டியில் திறமையை நிரூபிக்கவில்லை. இது கவலை அளிப்பதாக இருந்தது. இருவரும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் தரத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் மீதான நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. அவர்களது திறமை இன்னும் நிறைய வெளியாகும் என்று நம்புகிறேன்’ என்றார்.
இதற்கிடையே, கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்- மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 4 கோல்களும் முதல் பாதியிலேயே அடிக்கப்பட்டது. பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை.

அசாமில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
கவுகாத்தி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9 மற்றும் 42-வது நிமிடங்களில் நார்த்ஈஸ்ட் அணியினர் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணியின் செர்மிடி 22, 32 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 2-2 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளீதரன் வடக்கு மாகாணம் கவர்னராக நியமனம் செய்யப்பட இருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே முரளீதரனை வடக்கு மாகாணம் கவர்னராக பொறுப்பேற்கும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர் கவர்னர் பதவியை ஏற்கலாம் எனத்தெரிகிறது.
47 வயதாகும் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 6-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என அம்மாநில போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் 6-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ந்தேதி நடைபெற இருக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், கிலியன் மப்பே, பப்லோ அடுத்தடுத்து கோல் அடிக்க பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பந்து கோல் கம்பம் அருகிலேயே சுழன்றது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். வலது பக்கம் கார்னர் பக்கத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ரியல் மாட்ரிட் வீரர் கோல் நோக்கி அடித்தார். பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்தது. அப்போது தயாராக இருந்த பென்சிமா அதை கோலாக மாற்றினார்.
முதல் கோல் அடித்த பின் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். என்றாலும் பிஎஸ்ஜி கோல் கீப்பர் சிறப்பான வகையில் தடுத்தார். அதேபோல் ரியல் மாட்ரிக் கோல் கீப்பரும் சிறப்பான வகையில் சில பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.

இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தன. அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்திற்குளம் பிஎஸ்ஜி அணியின் கிலியன் மப்பே (81), பப்லோ சராபியா (83) அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது.
கடைசி 7 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. ‘ஏ’ பிரிபில் பிஎஸ்ஜி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றியும், ஒன்றில் டிராவும் அடைந்துள்ளது. பிஎஸ்ஜி இரண்டு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி அடைந்துள்ளது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் நீண்ட நேரம் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் வலது பக்க கார்னர் பகுதியில் இருந்து மார்சிலோ கொடுத்த அருமையான பாஸை தலையால் முட்டி கோலாக்கினார் கரிம் பென்சிமா.

இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தன. அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்திற்குளம் பிஎஸ்ஜி அணியின் கிலியன் மப்பே (81), பப்லோ சராபியா (83) அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது.
கடைசி 7 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. ‘ஏ’ பிரிபில் பிஎஸ்ஜி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றியும், ஒன்றில் டிராவும் அடைந்துள்ளது. பிஎஸ்ஜி இரண்டு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி அடைந்துள்ளது.
ஹாமில்டனில் நாளைமறுநாள் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் விலகியுள்ளனர்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்டிற்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் போல்ட் நாளைமறுநாள் வெலிங்டனில் தொடங்கும் 2-வது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கொலின் கிராண்ட்ஹோமுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
ஆகையால், ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், லூக்கி பெர்குசன், டாட் ஆஸ்லே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு்ளளனர்.

எனது மனைவி எதை விரும்புகிறாரோ, அதையெல்லாம் செய்ய விட்டுவிடுவேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்.
எம்எஸ் டோனி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திருமணம் குறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘அனைத்து ஆண்களும் திருமணத்திற்கு முன் சிங்கங்களை போன்றவர்கள். திருமணத்தின் உண்மையான சாராம்சமே, நீங்கள் 55 வயதை கடக்கும்போதுதான்...

எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் கெய்ல், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ள இயலாது. சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, இளைஞர்களுடன் இணைந்து நான் விளையாட விரும்பியது. ஆனால், நான் இந்த வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.
பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாடமாட்டேன். மீண்டும் எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவேன் என்பதை உறுதியாக கூற முடியாது. வங்காளதேச லீக்கில் என்னை தேர்வு செய்துள்ளனர். வீரர்கள் வரைவு பட்டியலில் என்னுடைய பெயர் எப்படி சேர்ந்த என்று எனக்குத் தெரியாது’’ என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி டி20 லீக்கில் 0விளையாடிய பின்னர் சொந்த நாடு திரும்பினார். அப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் நான் விளையாடாமல் போனால், அணிக்கு சுமை என்று நினைக்கிறார்கள் என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்திருந்தார்.
தவான் சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஹேமில்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 3&2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ச்சர் பேட்டிங் செய்து விட்டு பெவிலியன் திரும்பிய போது இனவெறி சர்ச்சையை சந்தித்துள்ளார். வெஸ்ட்இண்டீசை பூர்வீகமாக கொண்ட அவருக்கு எதிராக ரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.
இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய ரசிகரை கண்டுபிடிக்க போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த ரசிகரை கண்டுபிடித்து விடுவோம். அவரை இனிமேல் மைதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.
ஹேமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனி களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 18 மற்றும் 21-ந் தேதிகளில் டாக்காவில் நடக்கிறது.
இந்த போட்டியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதனால் ஆசிய லெவன் அணிக்காக டோனி களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.