search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம்
    X
    டிரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டிரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்

    ஹாமில்டனில் நாளைமறுநாள் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் விலகியுள்ளனர்.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்டிற்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் போல்ட் நாளைமறுநாள் வெலிங்டனில் தொடங்கும் 2-வது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கொலின் கிராண்ட்ஹோமுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    ஆகையால், ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், லூக்கி பெர்குசன், டாட் ஆஸ்லே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு்ளளனர்.
    Next Story
    ×