என் மலர்tooltip icon

    விளையாட்டு

    யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு கொடுத்துள்ளது பார்சிலோனா.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பார்சிலோனா ஏற்கனவே லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

    கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர் மிலானை எதிர்கொள்கிறது. இத்தாலியில் நடைபெறும் இந்த போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு வழங்கியுள்ளது பார்சிலோனா. மேலும், ஜெரார்டு பிக்காய், செர்ஜி ரொபெர்ட்டோ ஆகியோருக்கும் ஓய்வு அளித்துள்ளது.

    லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அன்சு ஃபட்டி ஆகியோர் விளையாடுகிறார்கள். ‘எஃப்’ பிரிவில் பார்சிலோனா ஐந்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்டர் மிலான், டாட்ர்மண்ட் அணிகள் தலா 7 புள்ளிகள்  பெற்றுள்ளன.
    அறுவை சிகிச்சைக்குப்பின் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன், என்றாலும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப அவசரம் காட்டமாட்டேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. முகுது வலியால் அவதிப்பட்ட அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உடனடியாக கிரிக்கெட் விளையாட அவசரம் காட்டமாட்டேன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான வேலை மிகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

    அறுவை சிகிச்சைக்குப்பின் அணிக்கு திரும்புவது எளிதாக காரியம் அல்லை. அனைத்து வகையிலும் சரியாகி விட்டதா? என்பதை உறுதி செய்ய முயற்சி செய்கிறேன்.

    உடல் அளவில் நான் எப்போது வேண்டுமென்றாலும் திரும்பலாம். ஆனால், மனதளவில் வலிமை பெறுவது முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. மனதளவில் நான் வலுவானவனாக மாறியுள்ளேன்.

    அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது. உங்களது உடல் தயாராகவில்லை என்றால், எந்தவித தயார் நிலையின்றி தற்போது நீங்களே உங்களை வலுக்கட்டாயமாக தள்ளினால், மீண்டும் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.

    காயம் எளிதானதல்ல ஆனால், பொறுமை முக்கியமானது. பேட் கம்மின்ஸ் காயத்திற்குப் பிறகு மிகவும் வலிமையான வீரராக திரும்பியுள்ளதை பார்த்துள்ளேன். மூட்டு காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா தற்போது எப்படி விளையாடி வருகிறார் என்று பார்கிறோம்’’ என்றார்.
    அஸ்வின் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த கர்நாடகாவை முதல் இன்னிங்சில் 336 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது தமிழ்நாடு.
    ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் முதல் சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 43 ரன்கள் சேர்த்தார். 3-வது வீரராக களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் 75 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 65 ரன்கள் அடிக்க கர்நாடகா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கே கவுதம் 39 பந்தில் 51 ரன்கள் விளாச கர்நாடகா 336 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.

    தமிழ்நாடு அணி சார்பில் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டும், விக்னேஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று டி20 போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் நாளை (11-ந்தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்லப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடர்ச்சியாக 2 தொடரை (3-0, 3-0) கைப்பற்றி இருந்தது. தற்போது ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா வகையிலும் கடும் சவாலாக இருக்கும்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கும் இந்தியா பீல்டிங்கில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்வது மிகவும் அவசியமானது.

    அதிரடி வீரரான ரோகித் சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சோபிக்க தவறிவிட்டார். ஒரு சிக்சர் கூட அவரால் அடிக்க முடியாமல் போனது பரிதாபமே. அவர் 23 ரன்களே எடுத்துள்ளார். சொந்த மண்ணில் நாளை விளையாடுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    புதுமுக வீரர் ஷிவம் டுபே கடந்த போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கி தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பண்ட் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    திருவனந்தபுரம் போட்டியில் சொதப்பியதால் நாளைய ஆட்டத்துக்கான வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் இடத்தில் மாற்றம் கொண்டு வரலாம். ஆடுகள தன்மையை பொறுத்து மாற்றம் முடிவு செய்யப்படும். வெஸ்ட் இண்டீசை வீழ்த்த இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தொடக்க வீரர்களான லென்டில் சிம்மன்ஸ், லிவிஸ் மற்றும் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.

    பந்து வீச்சில் காட்ரெல், வில்லியம்ஸ், ஹைடன் வால்ஷ், ஹோல்டர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் டி20 போட்டியில்16 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 9-ல், வெஸ்ட் இண்டீஸ் 6-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

    நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ்.

    வெஸ்ட் இண்டீஸ் : பொல்லார்ட் (கேப்டன்), சிம்மன்ஸ், விவிஸ், ஹேட்மையர், நிக்கோலஸ் பூரன், பிரண்டன் கிங், ஹோல்டர், ஹைடன் வால்ஷ், வில்லியம்ஸ், பியர், காட்ரெல், ராம்தின், கீமோ பால், பேபியன் ஆலம்.
    சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
    லாசானே:

    2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷிய வீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக 2016-ம் ஆண்டில் பிரச்சினை எழுந்தது. மெக்லரன் கமிட்டி அளித்த அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    இதனை அடுத்து ரஷிய வீரர்-வீராங்கனைகள் சர்வதேச போட்டியில் ரஷிய நாட்டு கொடியின் கீழ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கொடியின் கீழ் பொதுவான வீரர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த தடையை நீக்க கடந்த ஆண்டில் எடுத்த முடிவு சர்ச்சையானது.

    இந்த நிலையில் ரஷியா மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை விசாரணை நடத்தியது. ரஷிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஊக்க மருந்து சோதனை மையத்தில் உள்ள மாதிரிகளை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மாதிரிகளில் ரஷிய ஊக்க மருந்து சோதனை மையம் குளறுபடி செய்ததாக கூறப்பட்டது.

    உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் மறுஆய்வு கமிட்டி இந்த ஊக்க மருந்து பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்தது. அந்த மறு ஆய்வு கமிட்டி சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்க பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் செயற்குழு அப்படியே ஒருமனதாக ஏற்று கொண்டு இருக்கிறது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022-ம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷியா பங்கேற்க முடியாது. ஊக்க மருந்து சோதனையில் தேறும் ரஷிய வீரர், வீராங்கனைகள் பொதுவான வீரர்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் தான் பங்கேற்க முடியும். அத்துடன் ரஷிய அரசு அதிகாரிகள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தடை காலத்தில் ரஷியா எந்தவித சர்வதேச போட்டியும் நடத்த முடியாது. சர்வதேச போட்டிகளை நடத்த விண்ணப்பமும் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியா கலந்து கொள்ள முடியுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தடையை எதிர்த்து ரஷியா 21 நாட்களில் அப்பீல் செய்யலாம். அப்பீல் செய்தால் அதனை விளையாட்டு தீர்ப்பாயம் விசாரிக்கும்.

    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அடித்த கோலால் சென்னையுடனான ஆட்டம் சமனானது
    ஜாம்ஷெட்பூர்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 26வது நிமிடத்தில் சென்னை அணியின் வர்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் சென்னை வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். சென்னை அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஐசக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம், ஜாம்ஷெட்பூர் அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வி என 12 புள்ளிகள் பெற்று4வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 6 புள்ளிகள் பெற்றது.
    தெற்காசிய போட்டியில் நேபாளத்தை 2-0 என வீழ்த்தி இந்திய பெண்கள் கால்பந்து அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது.

    இன்று பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 18-வது நிமிடத்தில் பாலா தேவி முதல் கோலை பதிவு செய்தார். 56-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
    2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி 30 பந்தில் 54 ரன்கள் விளாசிய ஷிவம் டுபே, எந்த மைதானத்திலும் சிக்ஸ் அடிக்கும் திறமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் டுபே 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார். கேப்டன் விராட் கோலி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காமல் 30 பந்தில் 54  ரன்கள் விளாசினார்.

    ஆனால் ஷிவம் டுபே அளித்த உத்வேகத்தை மற்ற வீரர்கள் சரியாக பயன்படுத்தாததால் இந்தியாவால் 170 ரன்களே அடிக்க முடிந்தது.

    மைதானம் மிகப்பெரிய அளவில் இருந்த போதிலும் எளிதாக சிக்சர்கள் விளாசிய அவர், அதுதான் அவருடைய பலம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்தது மிகப்பெரியது. எனக்கு கொஞ்சம் நெருக்கடி இருந்தது. ரோகித் சர்மா என்னிடம் வந்து, உன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்றார், இது என்னை நிதானமாக விளையாட உதவியது.

    ஒரு சிக்ஸ் அடித்த பின்னர், நான் உத்வேகத்தை பெற்றேன். அதன்பின் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தேன். எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற எனது திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பேன். அதுதான் என்னுடைய பலம்.

    திருவனந்தபுரம் மைதானம் கொஞ்சம் பெரியதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது. அதுதான் என்னுடைய பலம். எப்போது இந்த எண்ணத்தோடுதான் செல்வேன்.

    கேட்ச்-ஐ விட்டதுதான் போட்டியின் முக்கியமானது. போட்டியின் ஒரு அங்கம்தான் அது. அவர்களும் சில கேட்ச்களை விட்டனர். நாங்கள் நல்ல ஸ்கோர்தான் அடித்திருந்தார். ஆனால் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். சிறந்த அணி என்பதால் தொடரை வெல்வதற்கான உத்வேகத்திற்கு திரும்புவோம்’’ என்றார்.
    2-வது போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளரின் குறிக்கோள், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதுதானாம்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ். அதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெய்டன் வால்ஷ் முக்கிய காரணம்.

    அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹெய்டன்  வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்... எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.
    டோனிக்கு மாற்று வீரராக கருதப்பட்ட ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ரிஷப் பண்ட். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக கருதப்பட்டார். ஆனால் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.

    ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாரா கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை உருவாக்கி அணிக்கு வந்தவர். மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ஒருவர் விரைவில் கிடைப்பாரா? என்று சிலர் எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ அப்படி பார்த்தார்கள். ஆனால், அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்.

    உலகக்கோப்பைக்கு இன்னும் 8 அல்லது 9 மாதங்களே உள்ளதால், இது இக்கட்டான காலம் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு விக்கெட் கீப்பரை வைத்துக் கொண்டு கூட இந்திய அணி செல்லலாம். ஆனால் ரிஷப் பண்ட் மீதான அதிகப்படியான நெருக்கடி தேவையில்லாதது.

    மிகவும் வெற்றிக்கரமான அணியாக திகழும் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

    30 வருடத்திற்கு முந்தைய வெஸ்ட் இண்டீஸ் அணியை நான் மீண்டும் திரும்பி பார்க்கிறேன். சில வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்படவில்லை. என்றாலும் அணியில் நீடித்தார்கள். ஏனென்றால், அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தலைசிறந்த சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால், கஸ் லூகி அல்லது ஹார்ல் ஹூப்பர் பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அவர்கள் முத்திர்ச்சி அடைய அனுமதிக்கப்பட்டார்கள். அதேபோல், ரிஷப் பண்ட் முதிர்ச்சி அடைய அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.
    எங்கள் மண்ணில் இரண்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் இயன் சேப்பல்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடு வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்துவது, அதற்கே பாதகமாக அமைந்து விடும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி 2020-21-ல் ஆஸ்திரேலியா வரும்போது இரண்டு போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. எனினும், தந்திரம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக உள்ளது. தற்போது இந்திய அணி வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. விராட் கோலி உலகின் சிறந்த கேப்டன் என்பதை காண்பித்து வருகிறார். இதனால் தந்திரம் தங்கள் பக்கமே திரும்பி பாதகமாக வாய்ப்புள்ளது’’ என்றார்.
    ரஞ்சி டிராபியில் ஆந்திரா - விதர்பா இடையிலான போட்டியின்போது பாம்பு மைதானத்திற்குள் புகுந்தததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    இந்தியாவின் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபியின் முதல் சுற்று இன்று தொடங்கியது. விஜயவாடாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் விதர்பா - ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி வீரர்கள் பீல்டிங் செய்ய தயாராகும்போது, திடீரென பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதான ஸ்டாஃப் வந்து பாம்பை விரட்டியதும் ஆட்டம் நடைபெற்றது.
    ×