search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா
    X
    ஹர்திக் பாண்டியா

    மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப அவசரம் காட்டமாட்டேன்: ஹர்திக் பாண்டியா

    அறுவை சிகிச்சைக்குப்பின் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன், என்றாலும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப அவசரம் காட்டமாட்டேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. முகுது வலியால் அவதிப்பட்ட அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

    தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உடனடியாக கிரிக்கெட் விளையாட அவசரம் காட்டமாட்டேன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான வேலை மிகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

    அறுவை சிகிச்சைக்குப்பின் அணிக்கு திரும்புவது எளிதாக காரியம் அல்லை. அனைத்து வகையிலும் சரியாகி விட்டதா? என்பதை உறுதி செய்ய முயற்சி செய்கிறேன்.

    உடல் அளவில் நான் எப்போது வேண்டுமென்றாலும் திரும்பலாம். ஆனால், மனதளவில் வலிமை பெறுவது முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. மனதளவில் நான் வலுவானவனாக மாறியுள்ளேன்.

    அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது. உங்களது உடல் தயாராகவில்லை என்றால், எந்தவித தயார் நிலையின்றி தற்போது நீங்களே உங்களை வலுக்கட்டாயமாக தள்ளினால், மீண்டும் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.

    காயம் எளிதானதல்ல ஆனால், பொறுமை முக்கியமானது. பேட் கம்மின்ஸ் காயத்திற்குப் பிறகு மிகவும் வலிமையான வீரராக திரும்பியுள்ளதை பார்த்துள்ளேன். மூட்டு காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா தற்போது எப்படி விளையாடி வருகிறார் என்று பார்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×