என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு சீன் வில்லியம்ஸ் மற்றும் சமு சிபாபா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்த மசகட்சா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இயக்குனராக பதவி ஏற்றார். ஜிம்பாப்வே கிரிக்கெட்டை திருத்தி அமைப்பதற்காக இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் இவரது பரிந்துரையின் அடிப்படையில் சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபாபா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேவிட் முட்டேன்டேரா தலைமையிலான கவின் எவிங், ஷெப்பெர்டு மகுனுருா, பிரோஸ்பெர் உட்செயா ஆகியோரை கொண்ட தேர்வுக்குழுவையும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அறிவித்துள்ளது.
    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் 928 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தொடரில் சதம் அடிக்காக ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு சதங்களும், நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதத்துடன் இரண்டு சதங்களும் விளாசிய மார்னஸ் லாபஸ்சாக்னே முதன்முறையாக 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார். ரகானே 9-வது இடத்தில் உள்ளார்.

    பந்து வீச்சில் பும்ரா 6-வது இடத்திலும், அஸ்வின் 9-வது இடத்திலும், முகமது ஷமி 10-வது இடத்திலும் உள்ளனர். பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், நீல் வாக்னர் 2-வது இடத்திலும், ஜேசன் ஹோல்டர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    செனகல் நாட்டைச் சேர்ந்த சேடியோ மானே, முகமது சாலாவை பின்னுக்கு தள்ளி 2019-ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார்.
    எகிப்து நாட்டு கால்பந்து அணி வீரர் முகமது சாலா. செனகல் நாட்டு வீரர் சேடியோ மானே. இருவரும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்கள் இடம் பிடித்துள்ள லிவர்பூல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2018-19 யூரோ சாம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றியது. அத்துடன் நான்கு கோப்பைகளை வென்றது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்தவருக்கு இந்த வருடத்திற்கான ஆப்பிரிக்க வீரர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

    2017 மற்றும் 2018-ல் முகமது சாலா இந்த விருதை வாங்கினார். இந்த முறையில் விருதை பெற்று ஹாட்ரிக் படைப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சேடியோ மானே தென்ஆப்பிரிக்கா வீரர் விருதை வென்றார்.

    விருது பெற்ற மானேவுக்கு முகமது சாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் கிறிஸ் கிரீன் பிக் பாஷ் டி20 லீக்கில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிறிஸ் க்ரீன். இவர் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடி வருகிறது.

    சுழற்பந்து வீச்சாளரான இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக விளையாடும்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அப்போது பந்து வீச்சு ஆக்சன் வரையறுக்கப்பட்ட விதிக்கு எதிராக இருந்தது. இதனால் மூன்று மாதங்கள் பந்து வீச ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தடைவிதித்துள்ளது.

    ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆப்கானிஸ்தானின் தலைசிறந்த டி20 சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், பிக் பாஷ் டி20 லீக்கில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 135 ரன்னில் சுருண்டது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் பேட்டிங் செய்தது.

    11-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேம்ஸ் வின்ஸ் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் எட்வர்ட்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார்.

    13-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சில்க் க்ளீன் போல்டானார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். என்றாலும் சிட்னி சிக்சர்ஸ் 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரஷித் கான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை கிரிக்கெட் அணி படுதோல்விகளை சந்தித்துள்ள நிலையில், ரோகித் சர்மா உத்வேகம் அளிக்கும் வகையில் வீரர்களிடையே பேசினார்.
    இந்தியாவின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. 40-க்கும் அதிகமான முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி தற்போது திணறி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் பரோடாவை வீழ்த்தியது. ஆனால், 2-வது ஆட்டத்தில் சர்வீசஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் கர்நாடகா அணிக்கெதிராகவும் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மும்பை அணி வீரர்கள் சோர்ந்து காணப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மத்தியில் பேசும்படி ரோகித் சர்மாவை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி ரோகித் சர்மா நேற்று வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது வான்கடே மைதானத்திற்கு சென்று அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

    2006-07 சீசனில் மும்பை அணி முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு புள்ளிகள் கூட பெறவில்லை. அதன்பின் அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது என்பதை நினைவு கூர்ந்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.

    ரோகித் சர்மாவின் பேச்சால் வீரர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
    காட்டுத்தீயால் மெல்போர்னில் காற்றுமாசு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் குறிப்பிட்ட நாளில் தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் வருகிற 20-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவின் கிழக்கே கிப்ஸ்லாண்ட் மண்டலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் புகைமூட்டத்தால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மெல்போர்னிலும் புகையால் காற்று மாசடைந்துள்ளதால் அங்கு திட்டமிட்ட நாளில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குமா? அல்லது வேறு நாளுக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    7 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீரரமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இது குறித்து தனது கவலையை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். ‘‘இதுபோன்ற சூழலில் விளையாடும் போது வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்திரேலிய ஓபனை தாமதமாக தொடங்குவதற்கு சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து வீரர்கள், போட்டி அமைப்பாளர்கள் சந்தித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க தலைமை நிர்வாகி கிரேக் டிலே, திட்டமிட்டபடி இந்த போட்டி தொடங்கி நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
    நியூசிலாந்து தொடரை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், ரஞ்சி போட்டியின்போது காயம் ஏற்பட்டதால் பிரித்வி ஷாவின் கனவு தகர்ந்துள்ளது.
    ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.

    நாளை மறுதினம் நியூசிலாந்துக்கு புறப்படும் இந்திய ‘ஏ’ அணியில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள காயத்தால் அங்கு 17, 19-ந்தேதிகளில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் அவர் ஆடுவாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    அறிமுக தொடரில் சிறப்பாக விளையாடியதால் கடந்த 2018 ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பயிற்சி ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

    அதன்பின் அவர் பயன்படுத்திய இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்ததாக தடைவிதிக்கப்பட்டது. தடைக்காமல் முடிந்து மும்பை அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணியில் இடம் பிடித்தார்.

    நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவருக்கு காயம் மிண்டும் தொல்லை கொடுத்துள்ளது.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளாது.
    சென்னை:

    இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானமாகும்.

    2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டது. 12 புதிய ஸ்டாண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்.சி.சி.) இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் 9 ஸ்டாண்டுகளே கட்டப்பட்டது. எம்.சி.சி. ஸ்டாண்டு புதுப்பிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.

    எம்.சி.சி. ஸ்டாண்டோடு, அண்ணா பெவிலியன் பிளாக்கும் புதுப்பிக்கப்படுகிறது. இங்குதான் வீரர்கள் தங்கும் அறை மற்றும் கார்ப்பரேட் பாக்ஸ்கள் உள்ளன.

    மே மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் இந்த புதுப்பிக்கும் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பதால் புதுப்பிக்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

    இதில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தில் இந்த டெஸ்ட் நடைபெறும்.
    சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்வசமாக்கியுள்ளார்.
    இந்தூர்:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி இரவு நடக்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி கைவிடப்பட்டது.

    இதையடுத்து, இந்தூரில் நேற்று நடந்த 2 வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.  

    77 போட்டிகளில் (71 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள விராட் கோலி 2,663 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 94 (நாட்-அவுட்) ஆகும். 24 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி 248 பவுண்டரிகளும், 73 சிக்சர்களும் விளாசியுள்ளார்.

    இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 2,633 (104 போட்டிகள்) ரன்களுடன் இரண்டாமிடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2,436 ரன்களுடன் (83 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது.

    குசால் பெரைரா அதிகபட்சமாக 28 பந்தில் 34 ரன் (3 சிக்சர்) எடுத்தார். ‌ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    லோகேஷ் ராகுல் 32 பந்தில் 45 ரன்னும் (6 பவுண் டரி), ஷிரேயாஸ் அய்யர் 26 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 29 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி ), கேப்டன் விராட் கோலி 17 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த தொடரில் இருந்து பலத்துக்கு மேல் பலம் பெற்று திகழ்கிறது.

    ரோகித் சர்மா இல்லாமல் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. இது அணிக்கு நல்ல அறிகுறியாகும்.

    நவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    பிரதீஷ் கிருஷ்ணா

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகவும் பவுன்ஸ் ஆகும்.

    உள்ளூர் போட்டியில் பிரதீஷ் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிக்கும் ஏற்றவர்கள். உலக கோப்பை அணிக்கு அவரை எதிர்பார்க்கிறேன். அணிக்கு மீண்டும் திரும்பிய பும்ரா திறமையுடன் பந்து வீசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் புனேயில் 10-ந்தேதி நடக்கிறது.
    இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. என்றாலும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

    இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குணதிலகாவை (20) நவ்தீப் சைனி வீழ்த்தினார். குசால் பெரேரா 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நவ்தீப் சைனி
    அதன்பின் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.

    பும்ரா வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும், தவானும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் குவித்தனர். ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 45 ரன்னிலும், தவான் 32 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

    அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 34 ரன் எடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கோலியும், ரிஷப் பந்தும் ஆடினர். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 144 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 30 ரன்னுடனும், ரிஷப் பந்து 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 
    ×