search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபாபா, சீன் வில்லியம்ஸ்
    X
    சிபாபா, சீன் வில்லியம்ஸ்

    ஜிம்பாப்வே அணிக்கு இரண்டு கேப்டன்கள்: டெஸ்டுக்கு சீன் வில்லியம்ஸ்

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு சீன் வில்லியம்ஸ் மற்றும் சமு சிபாபா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்த மசகட்சா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இயக்குனராக பதவி ஏற்றார். ஜிம்பாப்வே கிரிக்கெட்டை திருத்தி அமைப்பதற்காக இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் இவரது பரிந்துரையின் அடிப்படையில் சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபாபா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேவிட் முட்டேன்டேரா தலைமையிலான கவின் எவிங், ஷெப்பெர்டு மகுனுருா, பிரோஸ்பெர் உட்செயா ஆகியோரை கொண்ட தேர்வுக்குழுவையும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அறிவித்துள்ளது.
    Next Story
    ×