என் மலர்
விளையாட்டு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளாது.
சென்னை:
இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானமாகும்.
2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டது. 12 புதிய ஸ்டாண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்.சி.சி.) இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் 9 ஸ்டாண்டுகளே கட்டப்பட்டது. எம்.சி.சி. ஸ்டாண்டு புதுப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.
எம்.சி.சி. ஸ்டாண்டோடு, அண்ணா பெவிலியன் பிளாக்கும் புதுப்பிக்கப்படுகிறது. இங்குதான் வீரர்கள் தங்கும் அறை மற்றும் கார்ப்பரேட் பாக்ஸ்கள் உள்ளன.
மே மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் இந்த புதுப்பிக்கும் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பதால் புதுப்பிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
இதில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தில் இந்த டெஸ்ட் நடைபெறும்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்வசமாக்கியுள்ளார்.
இந்தூர்:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி இரவு நடக்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி கைவிடப்பட்டது.
இதையடுத்து, இந்தூரில் நேற்று நடந்த 2 வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.
77 போட்டிகளில் (71 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள விராட் கோலி 2,663 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 94 (நாட்-அவுட்) ஆகும். 24 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி 248 பவுண்டரிகளும், 73 சிக்சர்களும் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 2,633 (104 போட்டிகள்) ரன்களுடன் இரண்டாமிடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2,436 ரன்களுடன் (83 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தூர்:
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது.
குசால் பெரைரா அதிகபட்சமாக 28 பந்தில் 34 ரன் (3 சிக்சர்) எடுத்தார். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
லோகேஷ் ராகுல் 32 பந்தில் 45 ரன்னும் (6 பவுண் டரி), ஷிரேயாஸ் அய்யர் 26 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 29 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி ), கேப்டன் விராட் கோலி 17 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த தொடரில் இருந்து பலத்துக்கு மேல் பலம் பெற்று திகழ்கிறது.
ரோகித் சர்மா இல்லாமல் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. இது அணிக்கு நல்ல அறிகுறியாகும்.
நவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகவும் பவுன்ஸ் ஆகும்.
உள்ளூர் போட்டியில் பிரதீஷ் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிக்கும் ஏற்றவர்கள். உலக கோப்பை அணிக்கு அவரை எதிர்பார்க்கிறேன். அணிக்கு மீண்டும் திரும்பிய பும்ரா திறமையுடன் பந்து வீசுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் புனேயில் 10-ந்தேதி நடக்கிறது.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகவும் பவுன்ஸ் ஆகும்.
உள்ளூர் போட்டியில் பிரதீஷ் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிக்கும் ஏற்றவர்கள். உலக கோப்பை அணிக்கு அவரை எதிர்பார்க்கிறேன். அணிக்கு மீண்டும் திரும்பிய பும்ரா திறமையுடன் பந்து வீசுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் புனேயில் 10-ந்தேதி நடக்கிறது.
இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. என்றாலும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.
இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குணதிலகாவை (20) நவ்தீப் சைனி வீழ்த்தினார். குசால் பெரேரா 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.
பும்ரா வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
பின்னர் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும், தவானும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் குவித்தனர். ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 45 ரன்னிலும், தவான் 32 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 34 ரன் எடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கோலியும், ரிஷப் பந்தும் ஆடினர். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 144 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 30 ரன்னுடனும், ரிஷப் பந்து 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் சோதித்த போதிலும் இங்கிலாந்து சோர்வடையாமல் பந்து வீசி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாச, சிப்லி ஆட்டமிழக்காமல் 133 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. போட்டியை எப்படியாவது டிராவில் முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தென்ஆப்பிரிக்காவின் பீட்டர் மாலன், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சோதிக்கும் அளவிற்கு பொறுமையாக விளையாடினர். 22.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட தென்ஆப்பிரிக்கா, 40.6 ஓவரில்தான் 100 ரன்னைத் தொட்டது. டீன் எல்கர் 78 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பீட்டர் மாலன் உடன் ஹம்சா ஜோடி சேர்ந்தார். இவரும் முடிந்த அளவிற்கு பந்துகளை எதிர்கொண்டார்.
பீட்டர் மாலன் 144 பந்தில் அரைசதம் அடித்தார். நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு முந்தைய ஓவரில் ஹம்சா 59 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து நைட் வாட்ச்மேனாக மகாராஜ் களம் இறங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 56 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர் மாலன் 63 ரன்னுடனும், மகாராஜ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மகாராஜ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளிசிஸ் 19 ரன்னில் வெளியேறினார்.
5-வது விக்கெட்டுக்கு மாலன் உடன் வான் டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகப்பெரிய அளவில் தடுப்பாட்டத்தை கடைபிடித்தனர். ஆனால் 288 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் பீட்டர் மாலன் ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் கடைசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 137.4 ஓவர்களை எதிர்கொண்டு 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் 189 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 565 நிமிடங்கள் போராடியது.
தென்ஆப்பிரிக்கா அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன், டென்லி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் 16-ந்தேதி தொடங்குகிறது.

அதன்பின் தென்ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு ஆட்டத்தில் தடை ஏற்பட்டது. துஸ்சென் 140 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 107 பந்தில் 50 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் கடைசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 137.4 ஓவர்களை எதிர்கொண்டு 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் 189 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 565 நிமிடங்கள் போராடியது.
தென்ஆப்பிரிக்கா அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன், டென்லி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் 16-ந்தேதி தொடங்குகிறது.
இந்திய பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பான வகையில் பந்து வீச, இலங்கை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. என்றாலும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.
இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குணதிலகாவை (20) நவ்தீப் சைனி வீழ்த்தினார். குசால் பெரேரா 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.
பும்ரா வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இந்தூரில் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
தவான், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஷிவம் துபே, 7. பும்ரா, 8. ஷர்துல் தாகூர், 9. நவ்தீப் சைனி, 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர்.

இந்திய அணி கடந்த முறை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இருந்து தற்போதுள்ள அணி முற்றிலும் மாறுபட்டது என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடந்த 2018 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் இல்லை. தற்போது அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் 3-வது இடத்திற்கு மார்னஸ் லாபஸ்சான்னே கச்சிதமாக பொருந்தியுள்ளார். பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மிகமிக உட்சத்தில் இருக்கிறார்.
இந்த கோடைக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்டிலும் விளையாடியது. இரண்டு அணிகளையும் ஒயிட் வாஷ் செய்தது.
இந்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நாங்கள் தற்போது இரக்கமற்ற அணியாக திகழ்கிறோம். இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் விரும்பிய வகையில் தற்போது மிகவும் இரக்கமற்ற அணியாக மாறியுள்ளோம். எங்கள் அணி முழுவதும் தரமான வீரர்கள்.
கடந்த முறை விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.
எங்களுடைய ஆட்டம் இப்படியே தொடரும் என்றால், உலகின் முதல் இரண்டு அணிகளில் டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன என்று பேசும் நிலையில், தொடர் அற்புதமானதாக இருக்கும்’’ என்றார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்த கோடைக்காலத்தில் ஐந்து போட்டிகளையும் வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். நாங்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்து உண்மையிலேயே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என நம்புகிறேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிகமான மேட்ச் வின்னர் வீரர்களை பெற்றுள்ளோம். கடந்த 12 மாதங்களில் சுமாராக விளையாடிய வீரர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நாங்கள் விரும்பிய வகையில் தற்போது மிகவும் இரக்கமற்ற அணியாக மாறியுள்ளோம். எங்கள் அணி முழுவதும் தரமான வீரர்கள்.
கடந்த முறை விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.
எங்களுடைய ஆட்டம் இப்படியே தொடரும் என்றால், உலகின் முதல் இரண்டு அணிகளில் டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன என்று பேசும் நிலையில், தொடர் அற்புதமானதாக இருக்கும்’’ என்றார்.
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். டோனிக்குப் பதிலாக இவரை நீண்ட கால வீரராக தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் ரிஷப் பண்ட் சில தொடர்களில் சொதப்பியதால் விமர்சனம் எழும்பியது.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். இன்னும் அணி நிர்வாகம் அவர் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்துள்ளது.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட்-ஐ அணிக்கு தேர்வு செய்வது தேர்வுக்குழு விவகாரம். அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், ரிஷப் பண்ட் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால், முடிவில் தேர்வுக்குழுவுதான் முடிவு எடுக்கும்’’ என்றார்.

டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்கும் ஐசிசி பரிசீலனைக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ளது.
சர்வதேச ஐசிசி தொடர்களுக்கு நெருக்கடி இல்லாமல் நாட்கள் எளிதாக கிடைப்பதற்கும், வருமானத்திற்காக அதிக அளவில் சர்வதேச தொடர்களை நடத்துவதற்காகவும் ஐசிசி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. அடுத்த ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தது.
ஐசிசி-யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மூன்று போர்டுகளில் ஒன்றான இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உடனடியாக ஆதரவு தெரிவித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசி-யின் பரிசீலனையை முழுவதுமாக பார்த்த பின்னர் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி ஜாம்பவான்கள் நான்கு நாள் டெஸ்ட் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் தென்ஆப்பிரிக்கா ஐசிசி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த செய்து பொய்யானது. நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா ஏற்கனவே ஜிம்பாப்வே அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பரிட்சார்த்த முறையில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ள லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதுமில்லை எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள லாபஸ்சாக்னே (வயது 25), அபார ஆட்டத்தால் தலைசிறந்த நட்சத்திர வீரராக உருவாகியுள்ளார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் சதம் அடித்து அசத்தினார். விரைவாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான சிட்னி போட்டியில் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போடடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லாபஸ்சாக்னே, இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட கடினமானது ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘இந்தியாவில் எப்போதெல்லாம் விளையாடுகிறமோ, அப்போதெல்லாம் அது கடினமான தொடராக இருக்கும். ஏனென்றால், அவர்கள் மிகவும் கடினமாக எதிரணி. அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளனர். ஆகவே, இந்த தொடர் சவாலானதாக இருக்கும்.
ஆனால் ஒரு வீரர், அவரை பரிசோதனை செய்து கொள்ள கடினமான சூழ்நிலையில் சிறந்த எதிரணியை எதிர்த்து விளையாட விரும்புவார்கள். இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதை விட கடினம் ஏதும் இல்லை’’ என்றார்.

யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் இவர், இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று செர்ரி ஏ-யில் நடைபெற்ற போட்டியில் யுவென்டஸ் - காக்லியாரி அணிகள் மோதின. இதில் யுவென்டஸ் 4-0 என வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 49, 67 (பெனால்டி), 82-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.
இந்த ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்தில் 10 வெவ்வேறான தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.