search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் பெய்ன், விராட் கோலி
    X
    டிம் பெய்ன், விராட் கோலி

    அப்போதைய அணி வேறு, தற்போதுள்ள அணி இரக்கமற்றது- இந்தியாவுக்கு சவால் விடும் ஆஸி. கேப்டன்

    இந்திய அணி கடந்த முறை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இருந்து தற்போதுள்ள அணி முற்றிலும் மாறுபட்டது என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கடந்த 2018 கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

    ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் இல்லை. தற்போது அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் 3-வது இடத்திற்கு மார்னஸ் லாபஸ்சான்னே கச்சிதமாக பொருந்தியுள்ளார். பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மிகமிக உட்சத்தில் இருக்கிறார்.

    இந்த கோடைக்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்டிலும் விளையாடியது. இரண்டு அணிகளையும் ஒயிட் வாஷ் செய்தது.

    இந்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நாங்கள் தற்போது இரக்கமற்ற அணியாக திகழ்கிறோம். இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்த கோடைக்காலத்தில் ஐந்து போட்டிகளையும் வெல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். நாங்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்து உண்மையிலேயே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என நம்புகிறேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிகமான மேட்ச் வின்னர் வீரர்களை பெற்றுள்ளோம். கடந்த 12 மாதங்களில் சுமாராக விளையாடிய வீரர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    டிம் பெய்ன், விராட் கோலி

    நாங்கள் விரும்பிய வகையில் தற்போது மிகவும் இரக்கமற்ற அணியாக மாறியுள்ளோம். எங்கள் அணி முழுவதும் தரமான வீரர்கள்.

    கடந்த முறை விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.

    எங்களுடைய ஆட்டம் இப்படியே தொடரும் என்றால், உலகின் முதல் இரண்டு அணிகளில் டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன என்று பேசும் நிலையில், தொடர் அற்புதமானதாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×