என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிராக நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
    புனே:

    மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இரு அணிகள் இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    வங்காளதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. தற்போது இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்தனர்.

    ‌ஷர்துல் தாகூர் இந்தூரில் அடுத்தடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். அதற்குள் ஓவர் முடிந்ததால் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

    காயத்தில் இருந்து திரும்பிய ஜஸ்பிரித் பும்ராவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவரில் அதிக விக்கெட்டை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பெறுவார்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம்.

    பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சமநிலையை பயன்படுத்தினால்தான் இலங்கையை மீண்டும் வீழ்த்த முடியும்.

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இலங்கை இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இலங்கை அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது. குஷால் பெரைராவை தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் இதை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இசுரு உதனா நாளைய போட்டியில் ஆடமாட்டார்.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    போர்ட் எலிசபேத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 189 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.

    3-வது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 4-வது டெஸ்ட் 24-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கிலும் தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டிலும் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் ஆட மாட்டார். இடது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகியுள்ளார். இது இங்கிலாந்துக்கு பின்னடைவாகும்.

    37 வயதான ஆண்டர்சன் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீரர் ஆவார். அவர் 151 டெஸ்டில் ஆடி முத்திரை பதித்து உள்ளார்.
    ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில், நடுவரின் முடிவை அவமதித்ததற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப்-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மொகாலியில் கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் செய்ததால் நடுவர் முகமது ரபி, சுப்மான் கில் ‘அவுட்’ என்று அறிவித்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்று நடுவருடன் வாக்குவாதம் செய்த சுப்மால் கில் களத்தை விட்டு வெளியேற மறுத்தார்.

    இதனை அடுத்து லெக் அம்பயருடன் ஆலோசனை நடத்திய நடுவர் தனது முடிவை மாற்றி சுப்மான் கில் அவுட் இல்லை என்று அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி அணியினர் வெளிநடப்பு செய்ய முயற்சித்தனர். 10 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இந்திய அணிக்காக விளையாடியவரான சுப்மான் கில் நடுவரின் முடிவை அவமதித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரங்கநாதன், சுப்மான் கில்லுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தார். அத்துடன் போட்டியின் உத்வேகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட டெல்லி அணி வீரர் துருவ் ஷோரேய்க்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 
    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, சாய்னா வெற்றி பெற்றனர்.
    கோலாலம்பூர்:

    மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பாிசுத்தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையா் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் எவ்ஜெனியா கோசெட்ஸ்கயாவை பந்தாடி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறார். இந்த ஆட்டம் 35 நிமிடம் மட்டுமே நடந்தது. சிந்து 2-வது சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-15, 21-17 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் லியான் டானை வெறும் 36 நிமிடங்களில் விரட்டியடித்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சாய் பிரனீத் 11-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் வீழ்ந்தார்.

    மற்றொரு இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 17-21, 5-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் சோவ் டைன் சென்னுடன் (சீனதைபே) வெறும் 30 நிமிடங்களில் பணிந்தார்.

    முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனும், சாய்னா நேவாலின் கணவருமான் காஷ்யப், நம்பர் ஒன் வீரரும், உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவிடம் மோதினார். எதிர்பார்த்தது போல வே மோமோட்டா 21-17, 21-16 என்ற நேர் செட்டில் சுலபமாக வெற்றி பெற்றார்.

    அதே சமயம் இந்தியாவின் சமீர் வர்மா 21-16, 21-15 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் வாங்சாரோயனையும், இந்தியாவின் பிரனாய் 21-9, 21-17 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சுனியாமாவையும் வீழ்த்தி 2-வதுசுற்றை எட்டினர்.
    கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது எப்.சி. கோவா.
    பனாஜி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவாவின் பனாஜியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி கோவா மற்றும் கவுகாத்தி அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் எந்த அணியினரும் கோல் போடவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோவா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் மிஸ்லாவ் கோமோர்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, மற்றொரு வீரர் பெரான் கொராமினஸ் 82-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், கோவா அணி 2-0 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதன்மூலம், கோவா அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 24 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

    கவுகாத்தி அணி தான் ஆடிய 10 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி மற்றும் 5 ஆட்டங்களில் டிரா செய்து 11 புள்ளிகளை பெற்று எட்டாம் இடத்தில் உள்ளது.
    ஐபிஎல் 2020 சீசனின் இறுதிப் போட்டி மே 24-ந்தேதி நடத்தப்பட இருக்கிறது. போட்டி 8 மணிக்குப் பதிலாக 7.30 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    ஐபிஎல் 2020 சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு செய்து வருகிறது. போட்டியை எத்தனை நாட்கள் நடத்தலாம், என்னைக்கு தொடங்கலாம், இறுதிப் போட்டியை எப்போது நடத்தலாம் ஆகியவற்றை பற்றி யோசித்து வருகிறது.

    மேலும் போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆவதால் போட்டியை முன்கூட்டியே தொடங்கலாமா என்பது குறித்தும் அணி உரிமையாளர்கள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஆலோசிக்கிறது.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் 57 நாட்கள் நடைபெற இருப்பதாகவும், மார்ச் 29-ந்தேதி ஐபிஎல் சீசன் தொடங்க இருப்பதாகவும், மே 24-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    போட்டி 7.30 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளதால் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்படாது. அதனால்தான் 45 நாள் தொடரில் இருந்து 57 நாட்களாக நீடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    கேப் டவுன் டெஸ்ட் ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது காயம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் போர்ட் எலிசபெத் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்களை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (18), ஸ்டூவர்ட் பிராட் (23), பென் ஸ்டோக்ஸ் (23.4), சாம் கர்ரன் (16) ஆகியோர்  81 ஓவர்கள் வீசினர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 2-வது செசனின் போது அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக உணர்ந்தார். இதனால் தேனீர் இடைவெளிக்குப்பின் பந்து வீசவில்லை.

    இதனால் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க இருக்கிறார்கள. காயத்தின் தன்மை வீரியமாக இருந்தால் போர்ட் எலிசபெத் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலில் ஏற்பட்ட காயம் குணடைந்த பின் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாகூர், கடந்த இரண்டு ஆண்டுகள் திறமையை வளர்த்து கொண்டு சிறந்த டி20 பந்து வீச்சாளராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 டிராபிக்குப் பிறகு 22 மாதங்கள் கழித்து நேற்றுதான் சர்வதேச டி20-யில் களம் இறங்கியுள்ளார்.

    இரண்டு வருடங்களாக திறமையை வளர்த்ததன் மூலம் சிறந்த டி20 பந்து வீச்சாளராகியுள்ளேன் என்று ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போன்ற குறுகிய வகை கிரிக்கெட்டில் ஏற்றம் மற்றும் தாழ்வு இருக்கத்தான் செய்யும். அதிகமான போட்டிகளில் விளையாடும்போது அதிக அனுபவம் கிடைக்கும். அதேபோல் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும். முதல்-தர கிரிக்கெட் மற்றும் டெஸ்டில் உங்களுடைய ஆட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிக்கும் அளவிற்கு நேரம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் நேரம் இருக்காது.

    பயிற்சியில் ஈடுபடும்போதெல்லாம் உங்களுடைய வலிமையை கூட்டுவது, திறமையை சிறப்பாக வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது அவசியம். பயிற்சியின்போது நான் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர்களில் விளையாடியதன் மூலம் நான் சிறந்த பவுலராகியுள்ளேன்’’ என்றார்.
    இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுலை ஷாட்டுகளை பார்த்த கவுதம் காம்பிர், அவரால் டெஸ்டில் 50 பந்தில் 100 ரன்கள் அடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்ற நடைபெற்றது. இதில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 32 பந்தில் 45 ரன்கள் அடித்தார். அரைசதத்தை தவற விட்டாலும் சில ஷாட்டுகள் நம்ப முடியாத வகையில் இருந்தது.

    இந்நிலையில் இவரது ஆட்டத்தை மிகவும் அதிக அளவில் கவுதம் காம்பிர் பாராட்டியுள்ளார். அவரால் டெஸ்ட் போட்டியில் 50 பந்தில் 100 ரன்கள் அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    கேஎல் ராகுல் குறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘கேஎல் ராகுல் நம்பமுடியாத வகையில் சிறந்த ஃபார்மில் உள்ளார். ஒவ்வொரு முறையும் அவரது பேட்டிங்கை பார்க்கும்போது, டெஸ்ட் போட்டியில் ஏன் இப்படி விளையாடவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

    இதுபோன்று அற்புதமான ஷாட்டுகள் விளையாடியதை வைத்து பார்க்கும்போது டெஸ்ட் போட்டியில் கூட அவரால் 50 பந்தில் 100 ரன்கள் அடிக்க முடியும். அவர் அடித்த சில ஷாட்டுகள் அற்புதமானது.

    ஐபிஎல்-ஐ சர்வதேச போட்டிகளுடன் ஒப்பிட முடியாது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும்போது, உங்களுடைய இடத்திற்காக யாரும் காத்திருக்க வில்லை என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் நாட்டிற்காக விளையாடும்போது, யாராவது ஒருவர் உங்கள் இடத்திற்காக இருப்பார்கள். ஆகவே நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். தற்போது யார் சூப்பர் ஃபார்மில் உள்ளார் என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்தியுள்ளது. கேஎல் ராகுல் மாறுபட்ட வீரர்’’ என்றார்.
    ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா நேரடியாக முதன்மை சுற்றில் பங்கேற்கும் வகையில், ‘வைல் கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. 32 வயதான இவர் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் கலந்து கொண்டார். அப்போது முதல் சுற்றில் செரீனா வில்லியம்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

    அந்த சமயத்தில் ஷரபோவா தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். அதனால் சுமார் ஆறு மாதங்கள் எந்தவொரு தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார்.

    இந்நிலையில் பிரிஸ்பேன் ஓபனில் மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக இந்த தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட அவருக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து முறை கிராணட் ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா இளைஞர்களை எப்படி வளர்த்துள்ளது என்பதை சர்வதேச அணிகள் அதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக இளம் வீரர்களான ஷர்துல் தாகூர் (3 விக்கெட்), நவ்தீப் சைனி (2 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

    அதேபோல் பேட்டிங்கில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தினர். ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத போதிலும் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க அற்புதமாக இருந்தது என இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘இந்திய அணி இளம் வீரர்களை உருவாக்கி, அவர்களை முக்கியமான நேரத்தில் பொறுப்புகளை கையில் எடுக்கச் சொல்வதை பார்க்க ஆர்வமாக உள்ளது. இளம் வீரர்கள் சிறப்பான பங்களிப்பு அமேசிங். தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் மிக மிக சிறப்பான வடிவம் பெற்றுள்ளது. கேஎல் ராகுலின் சில ஷாட்டுகளை பார்க்கையில் மிகவும் அற்புதமானதாக உள்ளது.

    இந்தியா சிறந்த கிரிக்கெட் அணி. அந்த அணியிடம் வெளிப்படையான எந்த பலவீனங்களும் இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு சீன் வில்லியம்ஸ் மற்றும் சமு சிபாபா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்த மசகட்சா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இயக்குனராக பதவி ஏற்றார். ஜிம்பாப்வே கிரிக்கெட்டை திருத்தி அமைப்பதற்காக இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் இவரது பரிந்துரையின் அடிப்படையில் சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபாபா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேவிட் முட்டேன்டேரா தலைமையிலான கவின் எவிங், ஷெப்பெர்டு மகுனுருா, பிரோஸ்பெர் உட்செயா ஆகியோரை கொண்ட தேர்வுக்குழுவையும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அறிவித்துள்ளது.
    ×