search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல், மிக்கி ஆர்தர்
    X
    கேஎல் ராகுல், மிக்கி ஆர்தர்

    இளைஞர்களை எப்படி வளர்த்துள்ளது என்பதை இந்தியாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்- மிக்கி ஆர்தர்

    இந்தியா இளைஞர்களை எப்படி வளர்த்துள்ளது என்பதை சர்வதேச அணிகள் அதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக இளம் வீரர்களான ஷர்துல் தாகூர் (3 விக்கெட்), நவ்தீப் சைனி (2 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

    அதேபோல் பேட்டிங்கில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அசத்தினர். ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத போதிலும் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க அற்புதமாக இருந்தது என இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘இந்திய அணி இளம் வீரர்களை உருவாக்கி, அவர்களை முக்கியமான நேரத்தில் பொறுப்புகளை கையில் எடுக்கச் சொல்வதை பார்க்க ஆர்வமாக உள்ளது. இளம் வீரர்கள் சிறப்பான பங்களிப்பு அமேசிங். தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் மிக மிக சிறப்பான வடிவம் பெற்றுள்ளது. கேஎல் ராகுலின் சில ஷாட்டுகளை பார்க்கையில் மிகவும் அற்புதமானதாக உள்ளது.

    இந்தியா சிறந்த கிரிக்கெட் அணி. அந்த அணியிடம் வெளிப்படையான எந்த பலவீனங்களும் இருப்பதாக தெரியவில்லை’’ என்றார்.
    Next Story
    ×