search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷர்துல் தாகூர்
    X
    ஷர்துல் தாகூர்

    கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த டி20 பவுலராகியுள்ளேன்: ஷர்துல் தாகூர்

    இலங்கை அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாகூர், கடந்த இரண்டு ஆண்டுகள் திறமையை வளர்த்து கொண்டு சிறந்த டி20 பந்து வீச்சாளராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 டிராபிக்குப் பிறகு 22 மாதங்கள் கழித்து நேற்றுதான் சர்வதேச டி20-யில் களம் இறங்கியுள்ளார்.

    இரண்டு வருடங்களாக திறமையை வளர்த்ததன் மூலம் சிறந்த டி20 பந்து வீச்சாளராகியுள்ளேன் என்று ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போன்ற குறுகிய வகை கிரிக்கெட்டில் ஏற்றம் மற்றும் தாழ்வு இருக்கத்தான் செய்யும். அதிகமான போட்டிகளில் விளையாடும்போது அதிக அனுபவம் கிடைக்கும். அதேபோல் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும். முதல்-தர கிரிக்கெட் மற்றும் டெஸ்டில் உங்களுடைய ஆட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிக்கும் அளவிற்கு நேரம் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் நேரம் இருக்காது.

    பயிற்சியில் ஈடுபடும்போதெல்லாம் உங்களுடைய வலிமையை கூட்டுவது, திறமையை சிறப்பாக வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது அவசியம். பயிற்சியின்போது நான் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர்களில் விளையாடியதன் மூலம் நான் சிறந்த பவுலராகியுள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×