என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வீரர் பிலாண்டரை ஆபாசமாக திட்டிய ஜோஸ் பட்லருக்கு 15 சதவீதம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. போட்டியின் ஐந்தாவது நாளில் தென்ஆப்பிரிக்கா போட்டியை டிரா செய்ய போராடியது.

    கடைசி விக்கெட்டாக பிலாண்டர் களம் இறங்கினார். அவரை இங்கிலாந்து கீப்பர் ஜோஸ் பட்லர் ஆபாசமாக திட்டினார். இது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

    விசாரணையில் ஜோஸ் பட்லர் அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
    டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லாபஸ்சாக்னேவால் ஒருநாள் போட்டியில் சாதிக்க முடியும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபஸ்சாக்னே. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது  அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

    அதை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டியில் நிரந்த இடத்தை பிடித்தார். கடைசி ஐந்து டெஸ்டில் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு உயர்ந்தார்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, ஆஷ்டோன் டர்னர், ஸ்மித், டி'ஆர்கி ஷார்ட் ஆகியோர் இருந்ததால் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. சீன் அப்போட் காயம் அடைந்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    டெஸ்ட் போட்டியில் அசத்திய லாபஸ்சாக்னேவால் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும் என் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    லாபஸ்சாக்கே குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்ட பின், அணிக்கு திரும்பினார். அதன்பின் நம்ப முடியாத வகையில் விளையாடினார். ஆகவே, அவரால் தொடர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    டெஸ்ட் போட்டியின் ஃபார்ம் லிஸ்ட் ஏ போட்டியிலும் தொடர்ந்தது என்பதை உள்ளூர் தொடரில் காண்பித்துள்ளார். 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடும் அவர், சராசரி 40 வைத்துள்ளார். உள்ளூர் தொடரில் பாரம்பரியமாக பேட்டிங் செய்ய கஷ்டமாக இருக்கும் இடத்தில் குயின்ஸ்லாந்து அணிக்காக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

    அதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு அவரால் மாறமுடியாது என்று என்னால் பார்க்க முடியவில்லை’’ என்றார்.
    சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, விரைவில் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டில் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஐசிசியின் அனைத்து வகை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் (50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    ஜூன், ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.

    மீண்டும் எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என்ற கேள்வி ரசிகர்களுக்குள் இருந்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில் எம்எஸ் டோனி அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடித்துக் கொள்வார் என்று தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் டோனி ஒருநாள் கிரிக்கெட் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘நான் எம்எஸ் டோனியுடன் பேசினேன். அவர் டெஸ்ட் கேரியரை முடித்துக் கொண்டார். ஒருநாள் கேரியரையும் விரைவில் முடித்துக் கொள்வார்.

    தற்போது அவரது வயதில் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாட விரும்பலாம். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

    அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார். ஒரு விஷயம் எனக்கு தெரியும், அது என்னவென்றால், அவராகவே அணிக்கு திரும்ப நினைக்கமாட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால்...’’ என்றார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் பவுண்டரி லைன் அருகே பிடித்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    ஆஸ்திரேலியாவில் 2019-2020 சீசன் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதலில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் மேத்யூ வடே சிறப்பாக விளையாடினார்.

    பெட் கட்டிங் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே ரென்ஷா ஓடி வந்து பந்தை பிடித்தார். அப்போது தடுமாறி பவுண்டரி லைனுக்கு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே வீச முயன்றார். அப்போது பந்து பவுண்டரி லைனுக்கு வெளியே அந்தரத்தில் இருந்தது.

    உடனடியாக வெளியில் நின்ற ரென்ஷா துள்ளி பந்தை உள்ளே தள்ளினார். அதன்பின் காலை பவுண்டரி லைனுக்கு வெளியில் ஊன்றினார். அந்த சமயத்தில் டாம் பாண்டன் பந்தை பிடித்தார். இதனால் நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் 46 பந்தில் 61 ரன்கள் சேர்த்த வடே நடுவரின் முடிவை ஏற்றுக் கொண்டு வெளியேறினார். இருந்த போதிலும் ரசிகள் கிரிக்கெட் விதிமுறை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    கிரிக்கெட் விதியில் ‘‘ஒரு பீல்டர் பந்தை முதல்முறை தொடும்போது பவுண்டரி கோட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும். இல்லையெனில் பவுண்டரி வழங்க வேண்டும். பந்தை உடலில் எதாவது ஒரு பாகத்தை தொட்டு கொண்டிருக்கும்போது வீரர் உடலின் ஏதாவது ஒரு பகுதி பவுண்டரி லைனுக்கு வெளியே மைதானத்தில் இருந்தால் பவுண்டரி வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    டி20 உலக கோப்பையில் பினிஷர் ரோலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும், அதேவேளையில் எம்எஸ் டோனியை இடத்தை நிரப்ப முடியாது எனவும் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

    இந்திய அணியில் பினிஷர் ரோலை திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். அதேவேளையில் எம்எஸ் டோனி இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘பினிஷிங் ரோலில் எம்எஸ் டோனியின் இடத்தை என்னால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆகவே, அதுபற்றி நான் நினைக்கவே இல்லை. அந்த சவாலை எதிர்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

    நான் செய்தாலும் அது அணியின் வெற்றிக்காகத்தான் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். நான் ஏணியில் ஒரு அடி எடுத்து வைத்தாலும், அதை மெது மெதுவாகத்தான் வைப்பேன். ஏனென்றால், கோப்பை அங்கு இருக்கிறது’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இன்னும் ஏராளமான இடங்களை நிரப்ப வேண்டும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் கடைசியில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான சிறந்த அணியை தேர்வு செய்யும் பணியை நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    வரும் போட்டிகளில் வீரர்களை பரிசோதித்து சிறந்த வீரர்களை தேர்வு செய்வார்கள். ஏறக்குறைய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே இன்னும் நிரப்பப்பட வேண்டும் என ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் ஏராளமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘உலக கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. நாங்கள் அதற்கு தயாராகி கொண்டிருக்கிறோம். ஏராளமான வீரர்கள் உலக கோப்பையில் விளையாட தயாராக உள்ளனர்.

    இன்னும் ஏராளமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கான வேலை நடைபெற்று வருகிறது. 15 முதல் 20 வீரர்கள் அணியில் இடம் பிடிக்க சிறப்பான ஃபார்ம் உடன் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் என்ன செய்ய வேண்டும், உலகக்கோப்பையை வெல்ல எப்படி விளையாட வேண்டும் என்பது பொறுத்து வீரர்கள் தேர்வு அமையும்’’ என்றார்.
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    அரசியல் தலையீடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு பல பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் ஐசிசி அந்த அணிக்கு தடைவிதித்தது. அதன்பின் தடையை விலக்கிக்கொண்டது.

    ஜிம்பாப்வே அணியின் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைக்க தீவிரம் காட்டப்பட்டது. இதனடிப்படையில்தான் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக சிபாபாவையும், டெஸ்ட் அணிக்கு சீன் வில்லியம்ஸையும் கேப்டனாகவும் நியமித்தது. முந்தைய கேப்டன் மசகட்சா இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயண்ம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

    முதல் போட்டி வரும் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், 2-வது போட்டி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் நடக்கிறது. இரண்டு போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடத்தப்படுகிறது.
    140 கி.மீட்டர் வேகத்தில் துல்லியமான யார்க்கர், குட் பவுன்ஸ் போன்று விதியாசமான பந்துவீச்சை பயன்படுத்துவது முக்கியமானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அபாரமாக பந்து வீசினார். நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    சர்வதேச போட்டிகளில் போதுமான அனுபவம் இல்லாவிடிலும், குட் லெந்தில் பந்தை தொடர்ச்சியாக பிட்ச் செய்ததுடன், திடீர் திடீரென 140 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கர் பந்துகளையும் வீசினார். அத்துடன் பவுன்சர் பந்துகளையும் வீசினார்.

    டி20 கிரிக்கெட்டில் இப்படி வித்தியாச வித்தியாசமான பந்துவீச்சை உபயோகிப்பது முக்கியமானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘ஒயிட் பால், ரெட் பால் ஆகிய இண்டிலும் நம்பிக்கையை வளர்த்து கொண்டு வருகிறேன். நான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனபோது வேகமாக பந்து வீச விரும்பினேன். ஆனால் தற்போது ஸ்லோ டெலிவரி பந்துகள் முக்கியமானது என்பதை தெரிந்து கொண்டேன்.

    நான் மிகவும் சிறப்பான பயிற்சியை மேற்கொண்டேன். நம்பிக்கை அதிகமானது. நம்பிக்கை அதிகரிப்பதும், ஒவ்வொரு பந்துகளிலும் வித்தியாசம் காட்டுவதும் முக்கியமானது. யார்க்கர் பந்தில் விக்கெட் கிடைத்தது அதிகமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’’ என்றார்.

    நவ்தீப் சைனி இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளிலும், ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
    நாங்கள் இந்தியா வருகிறோம், இந்திய ரசிகர்களை பார்க்கும் ஆவலில் உள்ளேன் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வருகிறது.

    முதல் போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியாவுக்கு வருவதற்காக விமானம் ஏறியுள்ளனர்.

    விமானம் ஏறுவதற்கு முன் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது படம் ஒன்றை போஸ்ட் செய்து ‘‘நாங்கள் இந்தியா வருகிறோம்... 3 போட்டிகள் கொண்ட தொடர் சிறப்பானதாக இருக்க போகிறது. எங்களுடைய அனைத்து இந்திய ரசிகர்களையும் பார்க்க ஆவலாக உள்ளோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    கடந்த முறை வார்னர் இல்லாமல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 3-2 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இந்த 15 பேருக்குதான் இடம் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை தயார் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் இந்த 15 பேர் இடம் பெற வேண்டும் என்று லக்‌ஷ்மண் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட லக்‌ஷ்மண் அறிவித்துள்ள இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. கேஎல் ராகுல், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஹர்திக் பாண்டியா, 7. பும்ரா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10. மணிஷ் பாண்டே, 11. ஷிவம் டுபே, 12. ஜடேஜா, 13. முகமது ஷமி, 14. தீபக் சாஹர், 15. புவனேஷ்வர் குமார்.
    இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தென் கொரியா வீரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த அன் சே யங்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 25-23, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சாய்னா நேவால் அன் சே யங்-ஐ முதன்முதலாக வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

    சாய்னா முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனையை 21-15, 21-17 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிராக நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
    புனே:

    மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இரு அணிகள் இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    வங்காளதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. தற்போது இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்தனர்.

    ‌ஷர்துல் தாகூர் இந்தூரில் அடுத்தடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். அதற்குள் ஓவர் முடிந்ததால் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

    காயத்தில் இருந்து திரும்பிய ஜஸ்பிரித் பும்ராவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவரில் அதிக விக்கெட்டை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை பெறுவார்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டத்திற்கான அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே. யசுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம்.

    பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சமநிலையை பயன்படுத்தினால்தான் இலங்கையை மீண்டும் வீழ்த்த முடியும்.

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இலங்கை இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இலங்கை அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது. குஷால் பெரைராவை தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் இதை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இசுரு உதனா நாளைய போட்டியில் ஆடமாட்டார்.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 12-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ×