search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுண்டரி கோடு அருகே ரென்ஷா பிடித்த கேட்ச்
    X
    பவுண்டரி கோடு அருகே ரென்ஷா பிடித்த கேட்ச்

    இது அவுட்டா?.... கிரிக்கெட் விதிமுறையை சாடும் ரசிகர்கள்

    பிக் பாஷ் டி20 லீக்கில் பவுண்டரி லைன் அருகே பிடித்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    ஆஸ்திரேலியாவில் 2019-2020 சீசன் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதலில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் மேத்யூ வடே சிறப்பாக விளையாடினார்.

    பெட் கட்டிங் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே ரென்ஷா ஓடி வந்து பந்தை பிடித்தார். அப்போது தடுமாறி பவுண்டரி லைனுக்கு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது பந்தை பவுண்டரி லைனுக்கு உள்ளே வீச முயன்றார். அப்போது பந்து பவுண்டரி லைனுக்கு வெளியே அந்தரத்தில் இருந்தது.

    உடனடியாக வெளியில் நின்ற ரென்ஷா துள்ளி பந்தை உள்ளே தள்ளினார். அதன்பின் காலை பவுண்டரி லைனுக்கு வெளியில் ஊன்றினார். அந்த சமயத்தில் டாம் பாண்டன் பந்தை பிடித்தார். இதனால் நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் 46 பந்தில் 61 ரன்கள் சேர்த்த வடே நடுவரின் முடிவை ஏற்றுக் கொண்டு வெளியேறினார். இருந்த போதிலும் ரசிகள் கிரிக்கெட் விதிமுறை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    கிரிக்கெட் விதியில் ‘‘ஒரு பீல்டர் பந்தை முதல்முறை தொடும்போது பவுண்டரி கோட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும். இல்லையெனில் பவுண்டரி வழங்க வேண்டும். பந்தை உடலில் எதாவது ஒரு பாகத்தை தொட்டு கொண்டிருக்கும்போது வீரர் உடலின் ஏதாவது ஒரு பகுதி பவுண்டரி லைனுக்கு வெளியே மைதானத்தில் இருந்தால் பவுண்டரி வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×