என் மலர்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கரை, டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் ஆலோசகராக நியமிக்க ஆலோசித்து வருகிறது வங்காளதேசம்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். உலக கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் இவரது பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை. இந்நிலையில் வங்காளதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆலோசகராக செயல்படு இவரை அணுகியுள்ளது.
இதனால் வங்காளதேசம் அணிக்கு ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘நாங்கள் சஞ்சய் பாங்கருடன் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவது குறித்து பேசியுள்ளோம். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. மேலும் சில பேரிடம் இந்த பதவி குறித்து பேசி வருகிறார்கள்’’ என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக துருக்கி எல்லையை மூட இருப்பதால் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அவசரமாக இந்தியா திரும்புகிறார்.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. 22 வயதான சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியின்போது 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக துருக்கியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மனிதர்கள் தன்னிச்சையாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்று அவர் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மற்றொரு வீரரான ஷிவ்பால் சிங் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார்.

இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி தயாராகி வருகின்றன. துருக்கி இன்றோடு தனது நாட்டு எல்லையை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நாளையில் இருந்து துருக்கிக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முடியாது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்று அவர் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மற்றொரு வீரரான ஷிவ்பால் சிங் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், தென்ஆப்பிரிக்கா அணி சொந்த நாடு திரும்பியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. கடந்த 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த நாள் 2-வது போட்டிக்காக தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் லக்னோ சென்றடைந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சொந்த திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் இன்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.
இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள். இதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைமை மருத்துவ அதிகாரி மஜ்ரா கூறுகையில் ‘‘இந்தியாவில் இருந்து திரும்பிய வீரர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியில் 14 நாட்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க சரியான வழிமுறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த காலக்கட்டத்தில் அவர்களில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் அல்லது கவலை அளிக்கும்படி இருந்தால், அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’’ என்றார்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று கூறியுள்ள அவர் கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை செயல் விளக்கம் காட்டியுள்ளார். மேலும் அவர் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க வேண்டும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
சிந்துவின் சவாலை உடனடியாக ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தானும் கைகழுவது போல் உள்ள வீடியோ காட்சியை டுவிட்டரில் வெளியிட்டு பிறகு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, பிரபல பாடகர் அதனன் சாமி ஆகியோருக்கு விழிப்புணர்வு சவால் விடுத்துள்ளார்.

டோனி இனி இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று முன்னாள் வீரர் ஷேவாக் கூறியுள்ளார்.
ஆமதாபாத்:
ஆமதாபாத்தில், புதிய விளையாட்டு உபகரணங்கள் கடை ஒன்றை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை மூத்த வீரரான விக்கெட் கீப்பர் டோனி ஐ.பி.எல். மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு, மாற்று வீரரை அடையாளம் காணும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினம்.
ஒருவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடினாலும் கூட, தற்போதைய இந்திய அணியில் யாருக்கு பதிலாக அவரை சேர்ப்பார்கள்? லோகேஷ் ராகுல், விக்கெட் கீப்பிங் பணியோடு மிக அற்புதமாக விளையாடி வருகிறார். எனவே அவருக்கு பதிலா டோனி என்பது சாத்தியமில்லை. இதே போல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கும் மாற்ற வீரராகவும் அவரை நினைக்க முடியாது.
இந்திய கேப்டன் விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து கேட்கிறீர்கள். விராட் கோலி நம்மை போன்று மனிதர் தான். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. நீண்ட காலமாக அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் (2014-ம் ஆண்டு) நடந்த டெஸ்ட் தொடரிலும் சமீபத்தில் நியூசிலாந்து தொடரிலும் அவர் ரன் குவிக்காமல் தடுமாறினார். இது எல்லோருக்கும் நடக்கக்கூடியது தான். ஜாம்பவான்கள் ரிக்கிபாண்டிங், ஸ்டீவ் வாக் போன்றவர்களும் இது போன்று குறிப்பிட்ட காலம் சோடை போனது உண்டு. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடக்கும் போதோ அல்லது ஐ.பி.எல். போட்டியின் போதோ அவர் நிச்சயம் பார்முக்கு வந்து விடுவார். அவரது பேட்டிங் தொழில்நுட்பத்திலோ, மனஉறுதி அல்லது அணுகுமுறையிலோ எந்த தவறும் இருப்பது போல் தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கேட்கிறீர்கள். சூப்பர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா திரும்ப இருப்பது, இந்தியாவுக்கு மேலும் வலு சேர்க்கும். அவரது வருகை அணி சரியான கலவையில் அமைவதற்கு உதவுகிறது.
அதே சமயம் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று உறுதியாக சொல்ல முடியாது. இதில் தனிப்பட்ட வீரர் கூட அபாரமாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி விட முடியும்.
இவ்வாறு ஷேவாக் கூறினார்.
38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2021-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
லாசானே:
கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) ஆகும்.
24 அணிகள் இடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. யூரோ கால்பந்து போட்டி 2-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா வைரசின் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் யூரோ போட்டி திட்டமிட்ட காலத்தில் நடக்குமா? என்று சந்தேகம் கிளம்பியது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் தான் கொரோனாவின் ருத்ரதாண்டவம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அலெக்சாண்டர் செப்ரின் தலைமையில் சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்தது. இதில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கிளப், வீரர்களின் சங்க நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர். இதன் முடிவில் யூரோ கால்பந்து போட்டியை அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது 2021-ம் ஆண்டு இதே ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை நடத்துவது என்றும், போட்டி நடைபெறும் நகரங்களில் மாற்றமில்லை, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, உலக சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, ரஷியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி, பெல்ஜியம் உள்பட 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் எவை என்பதை உறுதி செய்ய பிளே-ஆப் சுற்று இந்த மாதத்தில் நடக்க இருந்தது. அது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் பிளே-ஆப் சுற்று போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி அர்ஜென்டினா மற்றும் கொலம்பியாவில் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் யூரோ போட்டி நடக்கும் அதே காலக்கட்டத்தில் (ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை) இந்த போட்டியும் நடைபெறும் என்று தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரீஸ்:
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொடர் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நாக்அவுட் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆறு அணிகள் பங்கேற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியதால் லீக் சுற்றோடு தொடர் ரத்து செய்யப்பட்டது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி 10 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
லீக் ரத்தானதால் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்ரிடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது ‘‘பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முடிவு கவலை அளிக்கிறது. என்றாலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முக்கியமானது. வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடு திரும்புவது அவசியம். இந்த முடிவை முன்னதாக எடுத்திருக்க வேண்டும். டிராபியை பொறுத்த வரையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அணிக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.

வெளிநாட்டு வீரர்களை இந்தியா வர அனுமதித்தால் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி20 லீக் தொடரை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை விசா கொடுக்க தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமை படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 31-ந்தேதி வரை இந்த நிலைமை நீடித்து மற்ற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டிக்கான வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என தொடரில் பங்கேற்கும் அணியைச் சேர்ந்த அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது ‘‘சில நாடுகளில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் இது நீடித்தால், அது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. அரசிடம் இருந்து அனுமதி பெற்று விசா வழங்கப்பட்டால், வீரர்களை தனிமைப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருக்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் அவர்களை இங்கே ஏப்ரல் முதல்வாரத்தில் வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடியும். ஆனால், முதலில் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்க வேண்டும். இதனால் மார்ச் 31-ந்தேதி வரை அரசின் முடிவிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

எனக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் பொய் செய்திகளை உடனடியாக நிறுத்துங்கள் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வாரமே உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டங்கள் மட்டும் ரசிகர்கள் ஏதுமின்றி மூடிய மைதானங்களில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வரை போட்டி நடைபெற்றது. இரண்டு அரையிறுதி போட்டிகள் இன்றும், இறுதிப் போட்டி நாளையும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று நாக்-அவுட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்தது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் அலெக் ஹெல்ஸ் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
டி20 தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அந்த வீரரின் பெயரை வெளியிடவில்லை.
ஆனால், அந்த வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ரமீஸ் ராஜா தெரிவித்தார். அதேபோல் கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டது. இது காட்டுத்தீ போன்ற மளமளவென பரவியது.
இந்நிலையில் இதுபோன்ற போலி செய்திகளை நிறுத்துங்கள் என அலெக்ஸ் ஹேல்ஸ் சாடியுள்ளார். விவகாரம் பிரச்சினையான பிறகு, அலெக்ஸ் ஹேல்ஸ் டெஸ்ட் செய்து கொள்ளவில்லை. தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என ரமீஸ் ராஜா தெரிவித்தார். கல்ஃப் நியூஸ் செய்தியாளர் டுவிட்டரை அழித்துள்ளார். ஆனால் முன்னதாகவே எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், டைமல் மில்ஸ், லியம் டவ்சன், லியம் லிவிங்ஸ்டோன், லெவிஸ் கிரேகோரி, ஜேம்ஸ் வின்ஸ், ஆகியோர் அவர்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நாங்கள் ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக உலகளில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முற்றிலுமாக தடுத்து நிறுத்த எவ்வளவு காலம் ஆகும்? என்பது குறித்த தெளிவான பார்வை இல்லை.
இதனால் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் கேன் ரிச்சர்ட்சன் உள்ள 17 வீரர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட இருந்தார்கள். தற்போது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் நடைபெறுமா? என்பது சந்தேகம். இதற்கிடையில் கேன் ரிச்சர்ட்சனுக்கு நியூசிலாந்து தொடரில் விளையாடும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துதான் பெரிய அளவில் நிலவி வருகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் சீராக முடியும். ஆகவே, நான் போனை வைத்துக் கொண்டு உள்ளேன். தற்போதுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக உள்ளேன்.
ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதுகுறித்து சாட்டிங் செய்து கொண்டிருக்கிறோம். ஐபிஎல் போட்டி முடியும் வரை நாங்கள் தனியாக இருக்கப் போகிறோம். தற்போது வீட்டில் இருக்கும் எங்களுக்கு அடுத்த கிரிக்கெட் போட்டி எப்போது என்ற எண்ணம் உண்மையிலேயே இல்லை. இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதை இது காட்டுகிறது.
தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரும்போது கூட நாங்கள் இந்த கொரோனா வைரஸ் குறித்து நினைக்கவில்லை. எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு வீட்டிற்குள் முடங்கி கிடப்பது கடினமாக விஷயம். ஆனால், செய்திகளை பார்க்கும்போது இது சரியான விஷயம்தான் என்பதை உறுதியாக காட்டுகிறது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் வெளிநாட்டிற்குச் சென்ற ஆஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்பினால் 15 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள். இதுதான் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்’’ என்றார்.

கொரோனா பீதி அச்சத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிரண்டு போட்டிகள் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றன. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் போட்டியை நடத்தி முடித்திட பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது.
இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் சொந்த நாடுகள் திரும்ப ஆரம்பித்தனர். லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்களும் வெளியேற ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றதன.
கொரோனா பீதியால் பிளே-ஆஃப் சுற்று முறையை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றப்பட்டன. இன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும், நாளை இறுதி போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மூன்று போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாக்-அவுட் சுற்று போட்டிகளை ரத்து செய்துள்ளது பாகிஸ்தான்.