search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேன் ரிச்சர்ட்சன்
    X
    கேன் ரிச்சர்ட்சன்

    அடுத்த கட்டம் என்ன?: ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் கேன் ரிச்சர்ட்சன்

    வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நாங்கள் ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக உலகளில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முற்றிலுமாக தடுத்து நிறுத்த எவ்வளவு காலம் ஆகும்? என்பது குறித்த தெளிவான பார்வை இல்லை.

    இதனால் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் கேன் ரிச்சர்ட்சன் உள்ள 17 வீரர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட இருந்தார்கள். தற்போது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதன்பின் நடைபெறுமா? என்பது சந்தேகம். இதற்கிடையில் கேன் ரிச்சர்ட்சனுக்கு நியூசிலாந்து தொடரில் விளையாடும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற கருத்துதான் பெரிய அளவில் நிலவி வருகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் சீராக முடியும். ஆகவே, நான் போனை வைத்துக் கொண்டு உள்ளேன். தற்போதுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக உள்ளேன்.

    ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதுகுறித்து சாட்டிங் செய்து கொண்டிருக்கிறோம். ஐபிஎல் போட்டி முடியும் வரை நாங்கள் தனியாக இருக்கப் போகிறோம். தற்போது வீட்டில் இருக்கும் எங்களுக்கு அடுத்த கிரிக்கெட் போட்டி எப்போது என்ற எண்ணம் உண்மையிலேயே இல்லை. இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதை இது காட்டுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரும்போது கூட நாங்கள் இந்த கொரோனா வைரஸ் குறித்து நினைக்கவில்லை. எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு வீட்டிற்குள் முடங்கி கிடப்பது கடினமாக விஷயம். ஆனால், செய்திகளை பார்க்கும்போது இது சரியான விஷயம்தான் என்பதை உறுதியாக காட்டுகிறது.

    முக்கியமான விஷயம் என்னவென்றால் வெளிநாட்டிற்குச் சென்ற ஆஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்பினால் 15 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள். இதுதான் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்’’ என்றார்.
    Next Story
    ×