என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை பெறுவதற்காக ஜப்பானில் இருந்து சிறப்பு விமானம் கிரீஸ் சென்றுள்ளது.
    32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. கொரோனா வைரசின் கோரப்பிடி உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை உருவாக்கி விட்டதால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று அவ்வப்போது சர்ச்சை கிளம்புகிறது.

    ஆனால், ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் உறுதியுடன் இருக்கிறோம். இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எந்த கடினமான முடிவும் (ரத்து அல்லது தள்ளிவைப்பது) எடுக்கப்போவதில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    ஆனாலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    வழக்கமாக ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக ஒலிம்பிக் தீபம் அது பிறந்த நாடான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி கடந்த 12-ந்தேதி ஒலிம்பிக் தீபம் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பிறகு ஒலிம்பிக் தீபம் ஒரு வாரம் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் ஓரிரு நாட்களுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் சிறப்பு விமானம் நேற்று கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டது. முதலில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பயத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை.

    ஏற்கனவே கிரீசுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்று தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு திரும்புகிறார்கள்.

    இதற்கிடையே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தாக்கத்தால் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. அதை சமாளிக்க அசாத்தியமான தீர்வு தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் வீரர்கள் இடையே எதிர்மறை எண்ணம் ஏற்படாத வகையில் அதற்குரிய தீர்வு காண ஒலிம்பிக் கவுன்சில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் போட்டியின் ஒருமைப்பாட்டுக்கும், வீரர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் வராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப தெளிவான ஒரு தீர்வு கிடைக்கவில்லை’ என்றார்.

    ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனை கேத்ரினா ஸ்டீபானிதி கூறுகையில், ‘‘ஒலிம்பிக் கவுன்சில் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்களின் சுகாதார விஷயத்தில் தொடர்ந்து ரிஸ்க் எடுக்க விரும்புகிறது. இப்போது எங்களை அபாயகட்டத்துக்கு தள்ளுகிறார்கள்.

    ஒருவேளை ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் அடுத்து என்ன முடிவு செய்வீர்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில்தான் பயிற்சி எடுத்து வருகிறோம்’ என்றார்.
    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளஸ் மட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் கோரதாண்டவம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், பலத்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீடுகளில் முடங்கி கிடக்கும் வீரர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த போட்டி தொடரில் புரூக்ளின் நெட்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் கெவின் டுரன்ட் உள்பட அந்த அணியில் இடம் பிடித்திருந்த 4 வீரர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புரூக்ளின் நெட்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அந்த அணியுடன் சமீபத்தில் விளையாடிய எதிரணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் வீரர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 வயதான கெவின் டுரன்ட் உள்ளிட்ட 4 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்த அணியின் மற்ற வீரர்களும் தங்களை தானே தனிமைப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இத்தாலியை சேர்ந்த கால்பந்து கிளப்பான யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் நடுகள வீரர் பிளஸ் மட்டுடியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். 2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 32 வயதான பிளேஸ் மாட்டுடிக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று யுவென்டஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே யுவென்டஸ் அணி வீரர் டேனியல் ருகானிக்கு (இத்தாலி) முதலில் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறது.
    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.
    லாசானே:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரசால் உலகம் முழுக்க பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுத் துறையையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு அந்த போட்டி நடைபெறுமா என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. இந்த போட்டி ரத்தானால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும்.

    இதேபோல சர்வதேச அளவில் கால்பந்து, டென்னிஸ் போட்டிகள், உள்ளூர் லீக் போட்டிகள் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கிறது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் தற்போதைய நிலையில் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறி இருந்தது.

    ஐ.ஓ.சி.யின் இந்த முடிவுக்கு வீரர், வீராங்கனைகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.

    கிரீஸ் போல்வால்ட் வீராங்கனை கேத்ரினா ஸ்டெபானிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வீரர், வீராங்கனைகளின் உடல்நலத்தில் அக்கரை செலுத்தவில்லை. குழு போட்டிகளில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக பங்கேற்க வேண்டி இருக்கும்.

    ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளில் பலர் தொடக்கூடிய பொருட்களை தொட இருக்கும். இதை ஒலிம்பிக் கவுன்சில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பிரான்சை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் மார்டினேட் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். கொரோனா வைரசால் ஒரு சில நாடுகள் அதிகமாகவும், ஒரு சில நாடுகள் குறைவாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சில நாடுகளில் பயிற்சி மைதானங்கள் கிடைப்பதில்லை. அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வீரர், வீராங்கனைகளின் எதிர்ப்பு தொடர்பாக ஐ.ஓ.சி.யின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடல் நலத்தில் நாங்கள் அக்கறை கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்” என்றார்.
    கொரோனா நிலைமை கட்டுக்குள் வந்ததும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என்று இந்திய வீரர் விஹாரி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் 26 வயதான ஹனுமா விஹாரி இதுவரை 9 டெஸ்டில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 552 ரன்கள் சேர்த்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த சீசனில் இங்கிலாந்தில் நான் 4 கவுண்டி ஆட்டங்களில் விளையாட உத்தேசித்து இருந்தேன். எந்த அணிக்காக களம் இறங்கி இருப்பேன் என்பதை ஒப்பந்த நடைமுறைகள் முடிந்த பிறகே தெரிவிக்க இயலும். கொரோனா பிரச்சினையால் அதுவும் தடைபட்டு விட்டது. செப்டம்பர் மாதம் வரை கவுண்டி போட்டி நடைபெறும் என்பதால், நிலைமை கட்டுக்குள் வந்ததும் என்னால் அந்த போட்டிகளில் விளையாட முடியும். அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவம் கிடைக்கும்.

    கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 70 பந்துகளில் 55 ரன்கள் எடுத்ததை எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லமாட்டேன். நான் நன்றாக ஆடினேன். ஆனால் எனது பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவாமல் போய் விட்டது. மிகவும் கடினமான ஆடுகளத்தில் எடுக்கப்பட்ட அது நல்ல ஸ்கோர் தான். இருப்பினும் அணி வெற்றி பெறும் போதே அதற்கு மதிப்பு அதிகம்.

    நான் தன்னம்பிக்கை மிக்க ஒரு வீரர். அணி நிர்வாகமும் வெளிநாட்டு சூழலில் வெற்றிகரமாக செயல்படக்கூடிய பேட்டிங் தொழில்நுட்பம் என்னிடம் இருப்பதாக நம்புகிறது. அதற்கு ஏற்ப நானும் வெளிநாட்டு மண்ணில் கணிசமாக ரன்கள் குவித்து இருக்கிறேன். வெளிநாட்டில் ஆடும்போது, அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நம்மை சீக்கிரமாகவே மாற்றிக்கொள்வது முக்கியம். என்னால் உலகின் எங்கு விளையாடினாலும் அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும், அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை திறம்பட செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ஹனுமா விஹாரி கூறினார்.

    விராட் கோலி ஆக்ரோசத்தை குறைக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று மதன் லால் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷனமாக செயல்படக் கூடியவர். அவரது செயல்பாட்டை இதுவரை நடுவர்கள் கண்டித்தது இல்லை. என்றாலும், ரசிகர்கள் அவருக்கு இவ்வளவு ஆக்ரோஷம் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் தலைவராக இருக்கும் மதன்லால் விராட் கோலியின் ஆக்ரோஷம் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘விராட் கோலி ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஏன் கேட்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமான கேப்டன் தேவை என்று விரும்பினார்கள். தற்போது விராட் கோலி அவரது ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டும் என்கிறார்கள். மைதானத்தில் விராட் கோலியின் செயலை நான் ரசிக்கிறேன்.

    முன்னதாக இந்திய வீரர்கள் ஆக்ரோஷமானவர்கள் அல்ல என்று கூறினார்கள். தற்போது வீரர்கள் ஆக்ரோஷமானவர்களாக இருக்கும்போது கேள்வி எழுப்புகிறார்கள். விராட் கோலியின் ஆக்ரோஷத்தை நான் சந்தோசமாக அனுபவிக்கிறேன். நமக்கு அவரை போன்ற கேப்டன் தேவை’’ என்றார்.
    அஷ்வின், ஜடேஜாவுக்குப் பிறகு அடுத்த கட்ட சுழற்பந்து வீச்சாளர்களை தயார் படுத்த வேண்டும் என எல். சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியில் தற்போது அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் பந்தை விரல்களால் சுழற்றக் கூடியவர்கள். இருவருக்கும் அடுத்து குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை தயார் செய்தனர். ஆனால் இருவராலும் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

    அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை என்றால் விரல்களால் பந்தை சுழற்றக்கூடிய திறமையான அடுத்த கட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை.

    இதனால் இரண்டாம் கட்ட சுழற்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என எல். சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எல். சிவராமகிருஷ்ணன் கூறுகையில் ‘‘அஷ்வின் கடின உழைப்பாளி. அணியில் அவருக்கான இடம் சும்மா கிடைக்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று சிறப்பான வருடங்கள் அவருக்கு உள்ளது. தற்போது நாம் அடுத்த நிலைக்கான இளம் சுழற்பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் வெளியேறும்போது, அவர்கள் தயாரான நிலையில் இருக்க வேண்டும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி தொடங்குவதாக இருந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு பிரபலங்களை வைத்து விழிப்புணர்வை செய்து வருகிறது. தற்போது முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை வைத்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.



    தெண்டுல்கர் கைகளை சுத்தமாக கழுவுவதை போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லாத ஐசிசி அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் வக்கார் யூனிஸ்.
    ஐசிசி புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    டெஸட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி கிடையாது. இந்த போட்டி அல்லாத சாம்பியன்ஷிப் எந்தவித அர்த்தத்தையும் ஏற்படுத்தாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் To கிரிக்கெட், மத்திய அரசு T20 மத்திய அரசு என்பதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடினமான சூழ்நிலை உள்ளது என்பது எனக்குத் தெரியும். சாம்பியன்ஷிப்பில் ஐசிசி இன்னும் அதிக அளவில் துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட்டு சில விஷயங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான ஆட்டம் இல்லை என்றால் சாம்பியன்ஷிப் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தாது.

    இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி எப்போதுமே சிக்கலாகவே உள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அறிமுகம் மறக்க முடியாததாக உள்ளது. இந்தியா கடந்த சில வருடங்களாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறது.

    கடந்த காலங்களில் இதுபோன்று பார்க்க முடியாது. தற்போது அது மாறியுள்ளது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதுதான் இந்தியா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறது’’ என்றார்.
    ருமேனியா டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த மக்களை காப்பாற்றும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் வழங்கி உதவியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியுள்ளது. ருமேனியாவில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹாலெப் மருத்துவ உபகரணங்கள் வாங்க பண உதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிமோனா ஹாலெப் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘துரதிருஷ்டவசமாக, நாம் கடினமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன் இப்படி ஒரு கட்டத்தை எட்டுவோம் என்று நினைதுக்கூட பார்த்திருக்கமாட்டோம்.

    மற்றொரு பக்கம், நம்முடைய மற்றும் நம்மை சுற்றி இருப்பவர்களின் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கான பொறுப்பு உள்ளது, அதற்கு ஆதரவாக இருப்பதற்கு இது சரியான வாய்ப்பு. நாம் வீட்டில் இருந்து கொண்டிருக்கும் வேளையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்ற மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபத்தி வருகிறார்கள்.

    அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும். இந்த பங்களிப்பை மிகப்பெரிய அளவிலான பேரழிவில் இருந்து பாதுகாக்க உதவும். அனைத்து நடவடிக்கைகளையும் தானாகவே எடுத்துக் கொண்டு பொறுப்புடனம், நேர்மறையாகவும் இருப்போம். கடவுள் துணை நிற்பார்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கரை, டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் ஆலோசகராக நியமிக்க ஆலோசித்து வருகிறது வங்காளதேசம்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். உலக கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் இவரது பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை. இந்நிலையில் வங்காளதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆலோசகராக செயல்படு இவரை அணுகியுள்ளது.

    இதனால் வங்காளதேசம் அணிக்கு ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘நாங்கள் சஞ்சய் பாங்கருடன் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவது குறித்து பேசியுள்ளோம். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. மேலும் சில பேரிடம் இந்த பதவி குறித்து பேசி வருகிறார்கள்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக துருக்கி எல்லையை மூட இருப்பதால் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அவசரமாக இந்தியா திரும்புகிறார்.
    இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. 22 வயதான சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியின்போது 87.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.

    ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக துருக்கியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மனிதர்கள் தன்னிச்சையாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி தயாராகி வருகின்றன. துருக்கி இன்றோடு தனது நாட்டு எல்லையை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நாளையில் இருந்து துருக்கிக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முடியாது.

    ஷிவ்பால் சிங்

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா பயிற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார். இன்று அவர் இந்தியா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் மற்றொரு வீரரான ஷிவ்பால் சிங் தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார்.
    ×