என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    X
    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

    ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் ரத்து

    கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி தொடங்குவதாக இருந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×