search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    கொரோனா குறித்த விழிப்புணர்வு- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சவால்

    கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று கூறியுள்ள அவர் கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை செயல் விளக்கம் காட்டியுள்ளார். மேலும் அவர் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க வேண்டும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

    சிந்துவின் சவாலை உடனடியாக ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தானும் கைகழுவது போல் உள்ள வீடியோ காட்சியை டுவிட்டரில் வெளியிட்டு பிறகு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, பிரபல பாடகர் அதனன் சாமி ஆகியோருக்கு விழிப்புணர்வு சவால் விடுத்துள்ளார்.

    Next Story
    ×