என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்தது எது? என்பதை விவரித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 31 வயதாகும் இவர் இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இந்திய அணி இக்கட்டான நிலையில் தவிக்கும்போதெல்லாம் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர்.

    தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 103 ரன்கள் விளாசியது, 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் அடித்தது சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் ரகானே 154 பந்தில் 103 ரன்கள் விளாசினார். இந்தியா ஒரு கட்டத்தில் திணறியபோது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. தவான் 137 ரன்கள் அடித்த போதிலும், ரகானே 60 பந்தில் 79 ரன்கள் விளாசினார். தவான் - ரகானே ஜோடி 125 ரன்கள் குவித்தது. பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் சுருண்டது.
    லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் புஜாரா பேட்மிண்டன் விளையாடுவதுடன் அவரது மனைவிக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
    கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இளம் வீரர்கள் தங்களது தாயார்களுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலைகளில் உதவி செய்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு வீட்டிவேலை செய்வதில் உதவி செய்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.

    புஜாரா அவரது மனைவியுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார். புஜாரா மனைவி பூஜாவிற்கு பேட்மிண்டன் விளையாட தெரியவில்லை என்றாலும், சேர்-ஐ நெட்டாக மாற்றி பயிற்சி கொடுத்து தேற்றியுள்ளார்.
    ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி தொடர்களை எட்டு மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என துணை தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தடகள பிரிவில் ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்து ஜூன் வரை நடைபெறும் போட்களில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகும்பெறும் வகையில் தகுதிச்சுற்றுக் நடைபெற இருந்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நவம்பர் 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாதிப்படைவார்கள் என துணைத் தலைமை பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில் ‘‘உலக தடகளம் நவம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தது தேஜிந்தர் பால் சிங் தூர் (குண்டு எறிதல்), அனு ராணி (ஈட்டி எறிதல்), எம். ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் ஆகியோருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஏராளமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்களா? என்பது தெரியவில்லை. மேலும் தடகளத்திற்கான தகுதிக் காலம் ஏறக்குறைய இரண்டு வருடம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல’’ என்றார்.

    நவம்பர் 30-க்கு முன் நடைபெறும் எந்த போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் அது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியாக எடுத்துக் கொள்ளமாட்டாது. உலக தரவரிசைக்கான புள்ளிகளில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் மற்றொரு ஓட்டப்பந்த வீராங்கனை ஹிமா தாஸ் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), 4X400 கலப்பு ரிலே அணி, கே.டி. இர்பான் (ஆண்களுக்கான 20 கி.மீட்டர் நடை ஓட்டம்), பாவ்னா ஜாட் (பெண்களுக்கான 20 கி.மீட்டர் நடை ஓட்டம்), அவினாஷ் சேபில் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்) ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்கும். அந்த வகையில் 2019-2020 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ஆஷஸ் தொடரை டிரா ஆவதற்கும், இங்கிலாந்து 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் அவரை விஸ்டன் சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது.

    பிளின்டாஃப் 2005-ம் ஆண்டு சிறந்த விஸ்டன் விருதை வென்றிருந்தார். அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் தற்போது வென்றுள்ளார்.

    இவருடன் ஜாப்ரா ஆர்சர், பேட் கம்மின்ஸ், மார்னஸ் லாபஸ்சேன், வீராங்கனைகள் எலிஸ் பெர்ரி, சிமோன் ஹார்மர் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தது.

    ஜாப்ரா ஆர்சர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ், லாபஸ்சேன், பெண்கள் அணியின் எலிஸ் பெர்ரி ஆகியோர் மிகப்பெரிய அளவில் சோபித்தனர்.
    பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பராகுவே நாட்டில் ஜெயின் தண்டனை அனுபவித்து வந்தார்.
    பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலக கோப்பையை கைப்பற்றியபோது இவர் அணியில் இருந்தவர். மேலும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், பார்சிலோனா, ஏசி மிலன் போன்ற உலக புகழ்பெற்ற கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

    40 வயதாகும் ரொனால்டினோ 2015-ல் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம் 6-ந்தேதி பராகுவே நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது சகோதரர் ரொபேர்ட்டோ ஆஸ்சிஸ் உடன் தங்கியிருந்தார். அப்போது போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியபோது இருவரும் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் எனத் தெரியவந்தது. இதனால் சகோதரருடன் ரொனால்டோ ஜெயிலில் அடைக்கப்பட்டார். முதலில் கோர்ட் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் இருவரும் தலா 8 லட்சம் டாலர் பிணைத்தொகை கட்டி ஜாமின் பெற்றுள்ளனர். அத்துடன் இருவரும் விசாரணை முடியும் வரை வீட்டிக்காவலில் இருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் நட்சத்திர ஓட்டலில் காவலில் இருக்கின்றனர்.
    விளையாட்டுத்துறையைச் சேர்ந்த கவாஸ்கர், புஜாரா, பாருபள்ளி காஷ்யப் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
    இந்தியா கொரோனா வைரஸ் தொற்று என்ற கொடியை நோயை எதிர்த்து போரிட்டு வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநில அரசுகளும் தெரிவித்திருந்தன.

    இதனால் பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராட் கோலி, முன்னாள் வீரரும் தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பிர், யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர் உள்பட ஏராளமானோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிரா மாநில அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 24 லட்சமும் வழங்கியுள்ளார்.

    அதேபோல் டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான புஜாரா ஒரு குறிப்பிட்ட தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கும், குஜராத் மாநில முலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.

    பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் 3 லட்சம் ரூபாய் தெலங்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்மித்தின் மிகப்பெரிய இலக்கு, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதானாம்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்திய மண்ணில் டெஸ்டில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

    அதன்பின் இந்திய மண்ணில் 2017-ம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்தபோது முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா தொடரைக் கைப்பற்றியது. ஒரு போட்டி டிரா ஆனது.

    இந்தத் தொடரில் ஸ்மித் மூன்று சதங்களுடன் அதிக அளவில் ரன்கள் குவித்தாலும் தொடரை வெல்ல அவரது ரன்கள் உதவியாக இல்லை. இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் கைப்பற்றுவதை விரும்புவேன். ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசும்போது ஆஷஸ் தொடர், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிகப்பெரியது என்பார்கள். ஆனால், தற்போது இந்தியா நம்பர் ஒன் அணியாக உள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது மிகக்கடினம். ஆகவே, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதை விரும்புவேன்.

    தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் எனக்கு மிகப்பெரிய இலக்கு ஏதும் கிடையாது. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்ற இலக்கு உண்டு’’என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவில் வருமானம் ஈட்டும் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் என்ற டி20 லீக்கை அறிமுகம் படுத்தியது. இது கோடிக்கணக்கில் வீரர்களை ஏலம் எடுத்து 8 அணிகள் கலந்து கொள்ளும் தொடராக நடத்தப்படுகிறது.

    இந்தத் தொடர் உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறது. மேலும் தொலைக்காட்சி உரிமம் கோடிக்கணக்கில் கிடைத்தது. இதனால் ஐபிஎல் உலகின் அதிக வருமானம் ஈட்டும் டி20 லீக்காக உள்ளது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ-க்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    பிசிசிஐ 26 சதவிகித வருமானத்தை வீரர்களுக்கும், 13 சதவிகித வருமானத்தை சர்வதேச நட்சத்திரங்களுக்கும் கொடுக்கிறது. மீதமுள்ள பணத்தை உள்ளூர் கிரிக்கெட்டிற்கும், ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் செலவழிக்கிறது.

    சுமார் 150 கோடி ரூபாய் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், 70 கோடி ரூபாய் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் செலவிடுகிறது. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு வருமானம் இழப்பு ஏற்பட்டால் வீரர்கள் சம்பளம் பிசிசிஐ-யின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். ரவி சாஸ்திரிக்கு 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
    போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு திரும்பும் வாய்ப்புள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த பல வருடங்களாக லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்துள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு கடந்த 2018-ல் யுவென்டஸ் அணிக்கு மாறினார்.

    தற்போது வரை யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ 75 போட்டிகளில் 53 கோல்கள் அடித்துள்ளார்.

    உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் ஒவ்வொரு கிளப்புகளும் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகின்றன. இனிமேல் எப்போது கால்பந்து போட்டிகள் தொடங்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

    கிளப்புகள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருப்பதால் வீரர்கள் தங்களது சம்பளங்களை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. யுவென்டஸ் அணி ரொனால்டோவுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் 27.5 மில்லியன் பவுண்டு சம்பளமாக கொடுக்கிறது. இப்படி முன்னணி வீரர்களுக்கு கொடுக்க இருப்பதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என யுவென்டஸ் நினைப்பதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இதனால் ரியல் மாட்ரிட் அணி விரும்பினால் 50 மில்லியன் பவுண்டுக்கு கொடுக்க யுவென்டஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் ரொனால்டோ மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட முடியும். மெஸ்சி - ரொனால்டோ இடையிலான பலப்பரீட்சையை ரசிகர்கள் காணலாம்.

    ஆனால் யுவென்டஸ் வீரர்கள் சம்பளத்தை குறைக்க ஒப்புக் கொண்டதால் அந்த அணிக்கு நான்கு மாதங்களில் 80 மில்லியன் பவுண்டு வரை கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ரொனால்டோ 10 மில்லியன் பவுண்டு இழக்க நேரிடும்.
    மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருக்கும் பெப் குவார்டியோலாவின் தாயார் கொரோனாவுக்கு பலியானார்.
    ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெப் குவார்டியோலா இங்கிலாந்து பிரிமீயர் லீக்கின் நடப்பு சாம்பியன் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக உள்ளார். இவரது வீடு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் உள்ளது. தற்போது ஸ்பெயினில் கொரோனா வைரசின் தாக்கம் மிகத்தீவிரமாக உள்ளது. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில் பெப் குவார்டியோலாவின் தாயார் டோலோர்ஸ் சாலா கேரியோ (வயது 82) கொரோனா வைரஸ் தாக்கி பலியானார். பெப் குவார்டியோலாவின் தாயார் பலியான செய்தி அறிந்து மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், பார்சிலோனா அணிகள் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

    பெப் குவார்டியோலா கொரோனா வைரஸ் தொற்றை ஒடுக்கும் நடவடிக்கைக்காக ஒரு மில்லியன் யூரோ வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்பெயினைச் சேர்ந்த பெப் குவார்டியோலா (வயது 49) 2016-ல் இருந்து மான்செஸ்டர் சிட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதற்கு முன் பார்சிலோனா, பேயர்ன் முனிச் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களில் இருந்து தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை ஷேன் வார்னே தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
    மும்பை:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களில் இருந்து தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். இதில் சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கருக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. வார்னேவை கவர்ந்த இந்திய ஐ.பி.எல். அணி வருமாறு: ரோகித் சர்மா, ஷேவாக், விராட் கோலி, யுவராஜ்சிங், யூசுப் பதான், டோனி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், சித்தார்த் திரிவேதி, முனாப் பட்டேல்.

    ‘நான் 2008-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை ஐ.பி.எல்.ல் விளையாடினேன். அதன் அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்திருக்கிறேன்’ என்று வார்னே தெரிவித்தார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி அற்புதமானவர் என்று புகழாரம் சூட்டிய வார்னே, ‘யூசுப்பதான் மும்பை இந்தியன்சுக்கு எதிராக பிரமாதமாக சதம் அடித்தார். அத்துடன் 2008-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் அவர் அசத்தலாக ஆடினார். அதனால் அவருக்கு இடம் வழங்கினேன்’ என்றும் குறிப்பிட்டார்.

    இதே போல் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான சிறந்த லெவன் அணியையும் வார்னே தேர்வு செய்துள்ளார். அந்த அணி வருமாறு: ஷேவாக், சனத் ஜெயசூர்யா, தெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், சங்கக்கரா, ஆன்ட்ரூ பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, அக்தர், அம்புரோஸ்.
    கடந்த மாதம் நடக்கவிருந்த உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    லாசானே:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தென்கொரியாவின் புசான் நகரில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டி ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
    கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் ஜூன் மாதமும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் சம்மேளன நிர்வாக கமிட்டியின் ஆலோசனைக்கு பிறகு இந்த போட்டியை செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடத்துவது என்று நேற்று முடிவு செய்யப்பட்டது.

    ×