search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pep Guardiola"

    மான்செஸ்டர் சிட்டி அணியின் தலைமை பயிற்சியாளரான குவார்டியோலாவின் பதவிக்காலம் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Mancity
    ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெப் குவார்டியோலா 2008-ம் ஆண்டு முதல் 2012 வரை பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் 2013 மற்றும் 2016 வரை பேயர்ன் முனிச் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்தார்.

    2016-ம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2016-17 சீசனில் மான்செஸ்டர் சிட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அனால், தற்போதைய 2017-18 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 புள்ளிகள் வித்தியாசத்தில் ப்ரீமியர் லீக் கோப்பையை தட்டிச் சென்றது. ப்ரீமியர் லீக்கில் 106 கோல்கள் அடித்ததுடன், அதிக வெற்றி, சிறந்த கோல் வித்தியாசம் என அசத்தியது.



    2016-ம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டிக்கு வரும்போது மூன்று வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன்படி அவரது பதவிக்காலம் 2019-ம் ஆண்டோடு முடிவடைகிறது. தற்போது அவரது செயல்பாட்டில் திருப்தியடைந்துள் மான்செஸ்டர், குவார்டியோலா உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளது.
    ×