என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

    மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. ஜோ டென்லி, 4. கிராவ்லி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பட்லர், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. மார்க் வுட், 10, ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. டொமினிக் பெஸ்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜான் கேம்ப்பெல், 2 கிரேக் பிராத்வைட், 4. ஷமர்த்  ப்ரூக்ஸ், 5. ஷாய் ஹோப், 6. ராஸ்டன் சேஸ், 7. பிளாக்வுட், 8. டவ்ரிச், 9. ஜேசன் ஹோல்டர், 10, அல்ஜாரி ஜோசப், 11. கேமர் ரோச், 11. கேப்ரியல்.

    முதல் ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரில் ரோரி பேர்ன்ஸ் ரன் எடுக்கவில்லை. 2-வது ஓவரை கேப்ரில் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் 4-வது பந்தில் சிப்லி க்ளீன் போல்டானார்.

    இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
    இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.
    லண்டன்:

    3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு சென்றது. வொர்செஸ்டரில் உள்ள ஓட்டலில் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் பாகிஸ்தான் அணியினர் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்விரு அணிகள் இடையிலான போட்டி தொடர் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் ரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் போட்டி நடைபெறும் தேதி இறுதி செய்யப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் ஆகஸ்டு 5-ந் தேதியும், 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் முறையே ஆகஸ்டு 13 மற்றும் 21-ந் தேதியும் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மான்செஸ்டரில் முறையே ஆகஸ்டு 28-ந் தேதி, ஆகஸ்டு 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி சவுதம்டனில் வருகிற 30-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.
    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இரண்டு பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. இவர் அவ்வப்போது இந்திய வீரர்களை விமர்சனம் செய்வதுண்டு. அதற்கான தக்க பதிலடியையும் பெற்று விடுவார்.

    சமீபத்தில் கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை கிரிக்கெட்டில் பலமுறை துவம்சம் செய்திருக்கிறது என்றார். இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில் சச்சின் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆக்தர் பந்தையும், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்லமாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர்.

    மிட்-ஆஃப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும்போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும். ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் தெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும்போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது.

    உலக கோப்பையின்போது சச்சின் தெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார். இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும்போது, எதிர்கொள்ளவது கடினமானதாகிவிடும்.

    அப்ரிடி இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, ‘‘நான் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்தபோது, சோயிப் அக்தர் பந்து வீசும்போது சச்சின் கால்கள் நடுங்கியதை நான் பார்த்தேன்’’ எனக் கூறியிருக்கிறார்.
    செரி-ஏ கால்பந்து லீக்கில் 0-2 என பின்தங்கிய நிலையில், ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்து ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது.
    இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான செரி-ஏ லீக்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திற்கான ஆட்டம் தொடங்கியதும் 47-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஆட்ரியன் ரேபியோட் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 53-வது நிமிடம்) நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவென்ஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    அதன்பின் ஏ.சி. மிலன் அணி வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 62-வது நமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இப்ராஹிமோவிச் அதை கோலாக்கினார். அதன்பின் 66-வது நிமிடத்தில் பிரான்ங் கெஸ்சி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ரபேல் லியோ கோல் அடித்தார். ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்ததால் 3-2 என ஏ.சி. மிலன் முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் 80-வது நிமிடத்தில் ஆன்டே ரெபிக் மேலும் ஒரு கோல் அடிக்க ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது.
    கேப்டன் பொறுப்பில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரிதான் ஜோ ரூட்டின் அட்வைஸ் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3 மணிக்கு சுண்டப்பட வேண்டிய டாஸ் மழையால் தடைபட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். வழக்கமான கேப்டன் ஜோ ரூட் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரியைத்தான் அட்வைஸாக கூறினார் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘நேற்று போட்டோ எடுக்கும் முன் ஜோ ரூட்டிடன் சிறந்த தகவலை பெற்றேன். ஜோ ரூட் அந்த மெசேஜில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்று கூறியிருந்தார்.

    ஜோ ரூட்டின் தனிப்பட்ட காரணத்தால், அவர் இல்லாமல் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் அவருடன் இருக்க முடியாத சூழ்நிலை. இருந்தாலும் அவர் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார். எனக்குத் தேவை என்றால் எப்போது வேண்டுமென்றாலும் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பது எனக்குத் தெரியும்.

    2015-ம் உலக கோப்பைக்குப்பின் நாங்கள் ஒருநாள் அணியை எப்படி கட்டமைக்க திட்டமிட்டமோ அதேபோல், டெஸ்ட் அணியையும் ஆஷஸ் மற்றும் இந்தியா தொடருக்காக கட்டமைக்க இருக்கிறோம்’’ என்றார்.
    சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நடைபெறவில்லை. அதன்பின் 117 நாட்களுக்குப் பின் இன்று இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு 3.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.

    டாஸ் சுண்டப்படுவதற்கு முன்னதாக மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது, மகிழ்ச்சியை வெளிப்படுத்த கட்டிப்பிடிக்கக் கூடாது, ரசிகர்கள் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுடன் நடைபெற இருக்கும் போட்டியை உலகமே பார்க்க ஆவலாக இருக்கிறது.
    வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் என்ற பேச்சு பிசிசிஐ-யின் கடைசி கட்ட முயற்சி என்று பொருளாளர் துமல் தெரிவித்துள்ளார்.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மார்ச் 29-ந்தேதி முதல் மே மாதம் 23-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) காலவரையின்றி ஒத்திவைத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பி.சி.சி.ஐ. இருக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல்.லை நடத்த பி.சி.சி.ஐ. தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஐ.சி.சி. முடிவு எடுப்பதில் தாமதித்துள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவை அறிவிக்கிறது. 20 ஓவர் உலககோப்பை தள்ளிவைக்கப்பட்டு ஐ.பி.எல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐ.பி.எல். லை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் ஐ.பி.எல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.20 ஓவர் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது கடைசி கட்ட முயற்சி மட்டுமே என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே விரும்புகிறோம். இங்குதான் முழு முன்னுரிமை. அதன் பிறகுதான் வெளிநாடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். 3 நாடுகள் இதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளன.

    வெளிநாடுகளில் ஐ.பி.எல்.ஐ நடத்துவது என்பது கடைசி கட்ட முயற்சி மட்டுமே. அடுத்த ஐ‌.பி.எல் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

    20 ஓவர் உலக கோப்பை குறித்து இன்னும் முடிவு தெரியவில்லை. இந்த நிச்சயமற்ற நிலையால் ஒவ்வொருவரும் மன அழுத்தத்தில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ‘இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது’ என்று டோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்புக்குரியவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுகிறார். ஆனாலும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாததால் அவரால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதற்கு மத்தியில் டோனி நேற்று தனது 39-வது பிறந்த நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு சக, முன்னாள் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ‘டோனி உடல் ஆரோக்கியத்துடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்’ என்று சச்சின் தெண்டுல்கர், இந்திய கேப்டன் கோலி வாழ்த்து கூறியுள்ளனர். டோனியை இளம் வீரர், அதிரடி ஜாம்பவான் என்று வர்ணித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

    டோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்தியாசமான வாழ்த்து செய்தியில், ‘மேலும் ஓராண்டு உங்களுக்கு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால் அழகாகவும், இனிமையானவராகவும் மாறிவிட்டீர்கள். அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது. மெழுகுவர்த்தி பற்ற வைத்து, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவோம். வாழ்த்துகள் கணவா!!!’ என்று குறிப்பிட்டுள்ளதோடு டோனி தனது வீட்டில் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதும், குடும்பத்தினருடன் இருப்பதும் போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
    கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
    சவுதம்டன்:

    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    கொரோனாவின் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 2-வது உலக போருக்கு பின்னர் அதாவது 1946-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலக்கட்டமாக இது அமைந்துள்ளது.

    இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பல கட்ட கொரோனா பரிசோதனை என்று மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

    இதனால் வெறிச்சோடிய மைதானத்தில் வித்தியாசமான சூழலில் வீரர்கள் விளையாடப்போகிறார்கள். அது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது. பந்தை ஒரு பக்கம் தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்காவிட்டால் ‘ஸ்விங்’ செய்வது கடினம். இது பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எச்சிலுக்கு தடை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

    இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜோ ரூட் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையில் பலவீனத்தை ஏற்படுத்தும். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரைத் தான் அந்த அணி மலைப்போல் நம்பி உள்ளது. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிரட்டுவார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும்.

    இங்கிலாந்தின் 81-வது டெஸ்ட் கேப்டனாக அடியெடுத்து வைக்கும் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறுகையில், ‘உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யும்படி ஜோ ரூட் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் எப்போதும் மற்ற வீரர்களிடம் ஆலோசனை கேட்பார். அதை நானும் பின்பற்றுவேன். தேவைப்பட்டால் அவரிடமும் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பேன். 6 அல்லது 7 பந்து வீச்சாளர்கள் அணிக்கு தேர்வு செய்வதற்குரிய நிலையில் உள்ளனர். யாரை சேர்ப்பது, யாரை விடுவது என்பது தலைவலி தான். ஆனால் ஒரு அணியாக நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மயர் ஆகியோர் கொரோனா பீதியால் விலகியது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். இருப்பினும் பேட்டிங்கில் ஷாய் ஹோப், ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், பிராத்வெய்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு வலுவுடன் காணப்படுகிறது. அதனால் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘கெமார் ரோச், ஹோல்டர், கேப்ரியல் ஆகியோர் எங்களது முன்னணி பவுலர்கள் என்பதை அறிவோம். ஆனால் அல்ஜாரி ஜோசப்பும் நன்றாக பந்து வீசுகிறார். இந்த தொடரில் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். எங்களது பேட்டிங் குறித்து நான் கவலைப்படவில்லை. பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைத்து வருகிறார்கள். இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறையிலும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்பதை மனதில் கொண்டுள்ளோம். எல்லோரும் சரியான மனநிலையுடன் தொடரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 157 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49-ல் இங்கிலாந்தும், 57-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 51 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 32 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜாக் கிராவ்லி, ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், சோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் அல்லது மார்க்வுட், டாம் பெஸ்.

    வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரஹீம் கார்ன்வால் அல்லது ஜெர்மைன் பிளாக்வுட், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் 2 நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    உலக கோப்பை போன்ற ஐசிசி தொடருக்கு செல்லும்போது ‘ஏ’ திட்டத்துடன் மட்டும் செல்லக்கூடாது, ‘பி’ திட்டத்தை வைத்திருக்க வேண்டும் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் தடுமாற்றம் அடைந்துள்ளது. 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலக கோப்பை, 2014 டி20 உலக கோப்பை ஆகியவற்றில் தோல்வியை சந்தித்துள்ளது.

    இதற்கு இந்தியா சரியான அணியுடன் செல்லாததுதான் முக்கிய காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘ஐசிசி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு சரியானதாக அமையவில்லை என்பதை நான் உறுதியாக சொல்வேன். கண்டிசனுக்கு ஏற்ப அவர்கள் சற்று தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐசிசி கிரிக்கெட் தொடர் என்பது ஒரு போட்டிக்கான திட்டமல்ல.

    யுவராஜ் சிங் 2014 உலக கோப்பை டெத் ஓவரில் சொதப்பியதால் இந்தியா தோல்வியடைந்தது. 2019 உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது.

    பந்து லேசாக ஸ்விங் ஆனால் அதற்கு ஏற்றபடி திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பந்து லேசாக ஸ்விங் ஆனது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தபின், இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எங்கே சென்றார்கள்.

    அவர்கள் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெற்றுள்ளனர். ஆடுகளம் பிளாட்டாக இருக்கும் போது கோலி சதம், ரோகித் சர்மா சதம் என்பது சிறந்ததுதான், ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இது எப்போதுமே இந்திய அணிக்கு பாதிப்பாகத்தான் முடிந்துள்ளது.

    திடீரென இந்தியா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருக்கும்போது மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், ஆகியோர் பந்து வீசிக் கொண்டிருக்கும்போது, மற்ற வீரர்கள் உடனடியாக அவர்களை எதிர்கொள்வது கடினம். அப்போது நான்கு விக்கெட் வீழ்ந்து விட்டால், அதன்பின் எப்படி எதிர்கொள்வீர்கள். இதனால் ‘பி’ திட்டம் தேவை. ‘ஏ’ என்ற ஒரு திட்டத்தை மட்டுமே வைத்து செல்லக்கூடியாது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்’’ என்றார்.
    லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.
    மாட்ரிட்:

    20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா கிளப், வில்லார் ரியல் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பார்சிலோனா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் கிரிஸ்மான் கோலை நோக்கி அடித்த பந்தை வில்லார் ரியல் அணி வீரர் பாய் டாரெஸ் பதற்றத்துடன் தடுக்க அது சுய கோலாக மாறியது. 14-வது நிமிடத்தில் வில்லார் ரியல் அணி வீரர் ஜெரார்டு மொரினோ பதில் கோல் திருப்பினார்.

    20-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் லூயிஸ் சுவாரஸ் பந்தை கோலுக்குள் திணித்தார். 45-வது நிமிடத்தில் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் கிரிஸ்மான் கோலாக மாற்றினார். முதல் பாதியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    பின்பாதியிலும் பார்சிலோனா அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. 87-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் அன்சு பாட்டி கோல் அடித்தார். முடிவில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வில்லார் ரியலை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. கடந்த 2 ஆட்டங்களில் ‘டிரா‘ கண்டதால் சரிவை சந்தித்து இருந்த பார்சிலோனா அணி இந்த வெற்றியின் மூலம் எழுச்சி பெற்றுள்ளது. முன்னதாக நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தியது.

    நேற்றைய லீக் ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 34 ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடருகிறது. பார்சிலோனா அணி 34 ஆட்டங்களில் ஆடி 22 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 73 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. வில்லார் ரியல் அணியை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றதன் மூலம் பார்சிலோனா கிளப் அணி சாம்பியன் பட்ட வாய்ப்பில் நீடிக்கிறது.

    இதற்கிடையில் அடுத்த ஆண்டுடன் பார்சிலோனா கிளப்பில் இருந்து அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி விலக முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவலை பார்சிலோனா கிளப்பின் தலைவர் ஜோசப் மரியா பார்டோமி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பார்சிலோனா அணியோடு தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்வேன் என்று ஏற்கனவே மெஸ்சி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறார். அத்துடன் இந்த கிளப்புடன் தான் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்ளவும் ஆசைப்படுகிறார். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் எஞ்சி இருக்கின்றன’ என்றார்.

    இங்கிலாந்தில் மண்ணில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை களம் இறங்குகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதன்பின் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்டில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரசிகர்கள் இன்றி, உயிர் பாதுகாப்பு சூழ்நிலையில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலகமே உற்று நோக்க இருக்கிறது.

    பலம்பொருந்திய அணியாக திகழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 1995-ம் ஆண்டுக்குப்பின் பலவீனம் ஆனது. அதன்பிறகு அணியை எப்படி கட்டமைக்க முயற்சி செய்தாலும் முந்தைய காலம் போன்று ஜொலிக்க முடியவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இங்கிலாந்தில் மண்ணில் 1988-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன்பின் 32 ஆண்டுகளாக தொடரை கைப்பற்றவில்லை.

    2017-ல் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது 1-2 எனத் தோல்வியடைந்தது. ஆனால் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் யாரும் எதிர்பார்க்க வகையில் 2-1 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்க இருக்கிறது.

    இந்த தொடரை வெல்ல ஜாம்பவான் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தத் தொடர் குறித்து லாரா கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி மிக விரைவாக நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. எப்போதுமே அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    போட்டியை ஐந்து நாட்கள் வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே, நான்கு நாட்களில் முடிக்க விரும்புவார்கள். அவர்கள் முன்னிலைப் பெற்று அதை தக்கவைத்துக் கொள்வார்கள்.

    இந்தத் தொடரை உலகமே பார்க்க ஆவலாக உள்ளது. இது போட்டித் தொடராக இருக்கும் என்று ஒவ்வொருவரும் நம்புகிறோம்.

    இந்தத் தொடரை வென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏராளமான அர்த்தத்தை ஏற்படுத்தும். தொடரின் முதல் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்று காண்பித்தால், அது முக்கிய விஷயமாக இருக்கும்’’ என்றார்.
    ×