என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்  ஜோ ரூட். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் ஆடவில்லை. இதனால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பணியாற்றினார்.

    இந்த நிலையில் போட்டி தொடங்கிய நேற்று ஜோ ரூட் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அவருக்கு  ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். பிறந்த குழந்தையுடன் ஜோ ரூட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விமர்சனம் செய்துள்ளது.
    பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து என்று கங்குலி கூறியது நல்ல வரவேற்பு அல்ல என்று விமர்சித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் மீடியா டைரக்டர் சமியுல் ஹசன் புர்னி இதுகுறித்து கூறுகையில் ‘‘கங்குலியின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. இறுதி முடிவு ஆசிய கிரிக்கெட் கமிட்டியால் மட்டுமே எடுக்க முடியும். போட்டிகள் நடைபெற்றால் தற்போது கொரோனா தொற்றால் பாதித்துள்ள பொருளாதார இழப்பிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

    கங்குலியின் கருத்து ஆசிய கோப்பைக்கான நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் ஒவ்வொரு வாரமும் கூறும் கருத்துக்கள், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆசிய கிரிக்கெட் கமிட்டிதான் ஆசிய கோப்பை குறித்து முடிவு செய்யும். ஆசிய கமிட்டியின் தலைவர் நஸ்முல் ஹசன்தான் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். எங்களுடைய அறிவுக்கு எட்டிய வகையில், ஆசிய கிரிக்கெட் கமிட்டி கூட்டத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை 2020-க்கான வேலைகளை ஆசிய கிரிக்கெட் கமிட்டியின் நிர்வாகம் செய்து வருவதாக கருதுகிறேன். திட்டமிட்டபடி சரியான காலத்தில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், சாதகமான மற்ற வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்கள்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று விளையாடுவது உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியம் என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் நடைபெறாமல் உள்ளது. 117 நாட்களுக்குப்பின் இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த மாதம் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர்கள் நடைபெற இருக்கின்றன. செப்டம்பர் மாதம் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் நடைபெற இருக்கிறது.

    அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. உலக கோப்பையுடன் ஆஸ்திரேலியா அணி மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்க இருந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலக கோப்பையை நடத்த சாத்தியம் இல்லை என்று தெரிவித்து விட்டது.

    இதனால் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா கட்டாயம் இங்கிலாந்திற்கு செப்டம்பர் மாதம் செல்ல வேண்டும். இது உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானது. அதேபோல் நட்சத்திர வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் இங்கிலாந்து சென்று விளையாடுவோம் என்று நினைக்கிறேன். அதில் ஏராளமான சவால்கள் உள்ளன. ஆனால், வாய்ப்பு இருந்தால் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை தேட வேண்டும். இங்கிலாந்துக்கு செல்வது கிரிக்கெட் உலகிற்கு ஆரோக்கியமானது. அதேபோல் இந்தியா ஆஸ்திரேலியா வந்து விளையாட விரும்புகிறோம்.

    ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்புவது நல்லெண்ண சைகையாக இருக்கும். அது இந்தியா ஆஸ்திரேலியா வரும் தொடரை மேலும் உறுதிப்படுத்தும்.

    ஐபிஎல் தொடரை பற்றி நான் வெளிப்படையாக பேசியாக வேண்டும். தற்போது ஐபிஎல் திட்டம் குறித்து ஒவ்வொரு நாளும் மாறுபட்ட கருத்துக்களை கேட்டு வருகிறேன். நாம் எப்படி அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். அதனால் உள்ளூர் சீசன் பாதிக்கப்படுமா?, வீரர்களை எப்படி பாதிக்கும், தனிமைப்படுத்துதல் விவகாரம் குறித்து ஒரு தெளிவு கிடைக்க வேண்டும்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தி யூகம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட இருப்பதால் அந்த நேரத்தில் நடத்த பிசிசிஐ விரும்புகிறது.

    ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படைய எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தன.

    கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று எதிர்த்து வெற்றி கண்ட நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

    அப்போதுதாதான் இலங்கை, ஐக்கிய அமீரகம், நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் தொடரை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கடைசி கட்ட முயற்சிதான் வெளிநாடு என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்தார். பிசிசிஐ தலைவர் கங்குலியும் அதை உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில் நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகள் யூகத்தின் அடிப்படையானது என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ‘‘நாங்கள் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தோம் என்ற செய்தி யூகமானது. நாங்கள் அப்படி ஒரு விருப்பத்தை தெரிவிக்கவும் இல்லை. அப்படியான அணுகுமுறை எண்ணமும் இல்லை’’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டடின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி சிறந்த டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் டாம் மூடி. இவர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது. பயிற்சியாளர் பதவியில் நல்ல அனுபவம் பெற்றவர்.

    இவர் சிறந்த டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்வு செய்துள்ள டாம் மூடி டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோருக்கு தொடக்க பேட்ஸ்மேன் இடத்தை கொடுத்துள்ளா்.

    அதற்கு அடுத்தப்படியாக விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். இருவரும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கான அணிகளுக்காகவும், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

    நிக்கோலஸ் பூரனை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். அவரிடம் அதிரடி காட்டும் திறமை உள்ளது. கரீபியன் பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தேர்வு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    சுழற்பந்து வீச்சில் சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுனில் நரைன் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். சூப்பர் ஓவரை மெய்டனாக வீசிய ஒரே பந்து வீச்சாளர். ரஷித் கான் டி20 தொடருக்கான திறமையை பெற்றுள்ளார்.

    விராட் கோலி, பும்ரா

    ஆந்த்ரே ரஸலை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஜாஃப்ரா ஆர்சன் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளார்.

    டாம் மூடி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. ரோகித் சர்மா (கேப்டன்), 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. நிக்கோலஸ் பூரன், 6. அந்த்ரே ரஸல், 7. சுனில் நரைன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. ரஷித் கான், 10. பும்ரா, 11. ஜாஃப்ரா ஆர்சர்.
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட காத்திருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நடைபெறவில்லை. அதன்பின் 117 நாட்களுக்குப் பின் நேற்று இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்காளை ஏற்பாடு செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    நீண்டநாள் கழித்து சர்வதேச கிரிக்கெட் நடவடிக்கைக்கு திரும்பிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரகானே ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:- மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள் எனவும் மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

    ரோகித் சர்மா கூறியதாவது:- கிரிக்கெட் மீண்டும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நேர்மறையான காட்சிகள். இறுதியாக கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் சிறந்த வாழ்த்துக்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 
    உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மாட்ரிட்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. ஆனால் நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் உலகின் 2-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

    ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு நேற்று 48-வது வயது பிறந்தது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர்கள் ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

    ‘களத்துக்கு உள்ளே அமைந்தது போன்று நமது கூட்டணி களத்துக்கு வெளியேயும் வலுவாக தொடரும் என்று நம்புகிறேன். இது சிறப்பான வருடமாக உங்களுக்கு அமைய வாழ்த்துகள்’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

    பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்றி இந்த ஆண்டை (2020) நிறைவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்துவது தான் எங்களது முன்னுரிமையாகும். 35 முதல் 40 நாட்கள் ஏதுவாக கிடைத்தால் கூட இந்தியாவில் இந்த போட்டியை நடத்தி விடுவோம் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியுமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக இந்தியாவில் நடத்துவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

    இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியமில்லை என்றால் அடுத்தபடியாக வெளிநாட்டில் நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். எங்கு நடத்த போகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளிநாடு சென்றால் அணி நிர்வாகத்துக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் அதிகம் செலவாகும். நமது பணத்தை அன்னிய செலாவணியாக மாற்றுவதற்கும் அதிக பணம் பிடிக்கும். எனவே எல்லா விஷயங்களையும் நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனாலும் இந்த போட்டியை நடத்துவதில் நாங்கள் மிகவும் முனைப்புடன் இருக்கிறோம்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) என்ன முடிவு எடுக்கபோகிறது என்பது இன்னும் எங்களுக்கு தெரியாது. மீடியாக்கள் மூலமாக வெவ்வேறு விஷயங்களை கேள்விப்பட்டு வருகிறோம். ஐ.சி.சி., போர்டு உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வமாக சொல்கிற வரை என்ன நடக்கும் என்பது தெரியாது. மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டவை தான் ஐ.பி.எல். போட்டியில் பெரிய அணிகளாக உள்ளன. தற்போது இந்த நகரங்களில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில் இங்கு கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும் என்று சொல்ல முடியாது. இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்துகிறோம் என்று சொல்வது எளிதான காரியம் அல்ல.

    இவ்வாறு கங்குலி கூறினார்.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் மழை காரணமாக இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் மட்டுமே விளையாடி 35 ரன்கள் எடுத்துள்ளது.
    சவுத்தாம்டன்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

    மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியின் ரோரி பெர்ன்ஸ், டொமினில்க் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2-வது ஓவரின் 4-வது பந்தில் சிப்லி அவுட்டானார்.

    இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பெர்ன்ஸ் 20 ரன்னும், ஜோ டென்லி 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    பாகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்று இருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

    கொரோனா பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்துசெய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மண்டியிட்டு பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவர், இரண்டு நடுவர்கள் மேலும், பெஞ்ச் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என அனைவரும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் ‘Black Lives Matter’ லோகா பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.

    ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17-ந்தேதி மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

    மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. ஜோ டென்லி, 4. கிராவ்லி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பட்லர், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. மார்க் வுட், 10, ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. டொமினிக் பெஸ்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜான் கேம்ப்பெல், 2 கிரேக் பிராத்வைட், 4. ஷமர்த்  ப்ரூக்ஸ், 5. ஷாய் ஹோப், 6. ராஸ்டன் சேஸ், 7. பிளாக்வுட், 8. டவ்ரிச், 9. ஜேசன் ஹோல்டர், 10, அல்ஜாரி ஜோசப், 11. கேமர் ரோச், 11. கேப்ரியல்.

    முதல் ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரில் ரோரி பேர்ன்ஸ் ரன் எடுக்கவில்லை. 2-வது ஓவரை கேப்ரில் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் 4-வது பந்தில் சிப்லி க்ளீன் போல்டானார்.

    இங்கிலாந்து 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
    ×