என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு, அதிகப்படியான சோதனை ஆகியவற்றின் மூலம் நோயை கட்டுப்படுத்தியது. என்றாலும் தற்போது பீஜிங் போன்ற முக்கியமான நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

    2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறும் என்று அறிவித்துள்ள சீனா, பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆறு தொடர்கள் (பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இறுதி தொடர் உள்பட) ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான நான்கு தொடர்களையும் நடத்த திட்டமிட்ருந்தது.

    அக்டோபர் மாதம் ஆசிய விளையாட்டு கிளிம்பிங் சாம்பியன்ஷிப், டிசம்பர் மாதம் பேட்மிண்டன் உலக டூர் பைனலும் நடைபெற இருந்தது. அதேபோல் அக்டோபர் மாதம் இரண்டு சைக்கிள் ரேஸ் தொடரும் நடைபெற இருந்தது.
    அயர்லாந்து தொடருக்கான பயிற்சி முகாமுக்கான 24 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் 30 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்தது.

    அதில் இருந்து அதிகாரப்பூர்வ அணியை அறிவித்தது. அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாட இருக்கிறது. முதல் போட்டி ஜூலை 30-ந்தேதியும், 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதியும், 3-வது போட்டி ஆகஸ்ட் 4-ந்தேதியும் நடக்கிறது.

    இதற்கான 24 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்காத பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

    பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் அயர்லாந்து தொடர் தொடங்குகிறது. இதனால் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் அயர்லாந்து தொடரில் இடம்பெற மாட்டார்கள். என்றாலும் வலுவான ஒருநாள் அணி விளையாடும் என்று இங்கிலாந்து தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளரான பால் கோலிங்வுட் தலைமை பயிற்சியாளராகவும், மார்கஸ் டிரெஸ்கோதிக் துணை பயிற்சியாளராகவும் செயல்பட இருக்கிறார்கள்.

    ஜூலை 16-ந்தேதி ஏஜயஸ் பவுல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. பயிற்சியின் முடிவில் அயர்லாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்படும்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் முதன்முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணி அரிய சாதனையை படைத்துள்ளது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் கால்பந்தில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். நேற்று மான்செஸ்டர் யுனைடெட் அஸ்டோன் வில்லா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என வெற்றி பெற்றது.

    இதற்கு முன் போர்ன்மவுத் அணியை 3-2 எனவும், பிரைட்டன் அணியை 3-0 எனவும், ஷெஃப்பீல்டு அணியை 3-0 எனவும் வீழத்தியிருந்தது.

    இதனால் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் மூன்று கோலிக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு அணி இப்படி வெற்றி பெறுவது இங்கிலீஷ் பிரிமீயர் லீக் வரலாற்றில் இதுவே முதல் முறை.

    அதேபோல் நேற்றைய போட்டியில் பெனால்டி வாய்ப்பு மூலம் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 13 பெனால்டி கோல் அடித்துள்ளது. இதுவும் ஒரு சாதனையாகும்.
    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர், சதம் அடிப்பது எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது  நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 204 ரன்னில் சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்னும், பட்லர் 35 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 20 ஓவர் வீசி  42 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். கேப்ரியலுக்கு  4 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து இருந்தது. பிராத்வைட் 20 ரன்னும், ஹோப் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேம்ப்பெல் 28 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    42 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது ஹோல்டரின் சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் மூலம் தனது 41- வது டெஸ்டில் அவர் புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்துக்கு எதிராக 59 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது. ஹோல்டர் 7-வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.

    ஜேசன் ஹோல்டர்

    போட்டிக்குப் பிறகு 28 வயதான ஹோல்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது பந்து வீச்சு மிகவும் திருப்தி அளித்தது. இதேபோல் பேட்டிங்கிலும் சாதிக்க விரும்புகிறேன். இங்கிலாந்தில் 5 விக்கெட் வீழ்த்தி, சதம் அடிக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது. ஒன்று முடிந்துவிட்டது. அடுத்து சதம் அடிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு அவரது மேனேஜரும், நண்பருமான மிஹிர் திவாகர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐ.பி.எல். போட்டியின் மூலம் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த போட்டி காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டு இருப்பதால் டோனியின் மறுபிரவேசம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் டோனி தனக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் 39 வயதான டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மேனேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, ‘நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும் தெரியும். தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே பேணி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார். தற்போது எவ்வளவு வேகமாக இயல்பு நிலை திரும்புகிறது என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்’ என்று தெரிவித்தார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.3 ஓவரில் 57 ரன்கள் எடுத்துள்ளது.
    சவுத்தாம்டன்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஸ்டோக்ஸ் 43, ஜோஸ் பட்லர் 35, டாம் பெஸ் 31, ரோரி பெர்ன்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். கேப்ரியல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி19.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 20 ரன்னுடனும், ஷாய் ஹோப் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர். இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 147 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராகுல் ஜோரி. இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இவர் கடந்த டிசம்பர் மாதமே ராஜினாமா கடிதத்தை அளித்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் ஏப்ரல் 30-ந்தேதி வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தால் வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டபோது கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் ஜோரி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
    கேப்ரியல், ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சவுத்தாம்ப்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்று அடிக்கடி மழை இடையூறு செய்ததால் முதல் நாளில் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி் டக்அவுட்டில் வெளியேற ரோரி பேர்ன்ஸ் 20 ரன்னுடனும், ஜோ டென்லி 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டென்லி மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையிலும், ரோரி பேர்ன்ஸ் கூடுதலாக 10 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கிராவ்லி 10 ரன்னிலும், ஒல்லி போப் 12 ரன்னிலும் வெளியேறினர். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் பெரிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த முயற்சிக்க, ஹோல்டர் இந்த ஜோடியை பிரித்தார்.

    பென் ஸ்டோக்ஸ் 43 ரன்னிலும், பட்லர் 35 ரன்னிலும், ஆர்சர் ரன்ஏதும் எடுக்காமலும் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 157 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது. ஹோல்டர் ஐந்து விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    கேப்ரியல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டென்லி

    டொமினிக் பெஸ் ஒருபக்கம் தாக்குப்பிடித்து நின்றாலும், மறுமுனையில் மார்க் வுட் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன்  (10) ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 67.3 ஓவரில் 204 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. பெஸ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து கடைசி இரண்டு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டும், கேப்ரியல் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார். இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனதும் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது.

    இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் பெற்றிருந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லாததால் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

    கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை, ஐபிஎல் 2020, டி20 ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று பேசும்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உரிமத்தை பாகிஸ்தான் இலங்கையிடம் கொடுத்துவிட்டு, 2022 தொடரை நடத்தும் உரிமத்தை விரும்பினால் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பென் ஸ்டோக்ஸ் vs ஜேசன் ஹோல்டர் இடையிலான போட்டி என்றும் கூறும் நிலையில், தனக்கு போதுமான பாராட்டு கிடைக்கவில்லை என்று ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டரும், இங்கிலாந்து அணிக்கும் பென் ஸ்டோக்ஸும் கேப்டனாக உள்ளனர்.

    இருவரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹோல்டர் முதல் இடத்திலும், பென் ஸ்டோன்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தத் தொடர் இரண்டு ஆல்ரவுண்டர்களுக்கு இடையிலான போட்டி என்றே கூறப்படுகிறது.

    ஆனால் தனக்கு தகுதி இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் போன்று பாராட்டு ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘தனிப்பட்ட பாராட்டு அல்லது ஐசிசி தரவரிசை ஆகியவற்றை நான் உண்மையிலே விரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் எப்போதுமே சிறந்த வீரராக பேசப்படுகிறார். ஆகவே அவர் நல்ல கிரிக்கெட் வீரர். ஆனால், ஐசிசி தரவரிசை நான் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்று சொல்கிறது. எனது தகுதிக்கு ஏற்ற வகையில் நான் பாராட்டுக்களை பெறாமல் இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?.

    அந்த விஷயத்தையே பிடித்துக் கொண்டிருக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அவர்களுடைய பக்கத்தில் அவர்களை பற்றி எழுதுகிறார்கள். நான் இங்கே கிரிக்கெட் விளையாட மட்டுமே வந்துள்ளேன். பென் ஸ்டோக்ஸ் போன்ற போட்டியாளர்களை நேருக்கநேர் எதிர்கொள்ளும்போது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும்’’ என்றார்.
    உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட், தனது மகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்தது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
    உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடியில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனைகள் புரிந்து தன்னிகரற்ற தடகள வீரராக திகழ்ந்தார்.

    உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றுள்ளார். 2008, 2012, 2016 ஆகிய 3 ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர், 200 மீட்டரில் தங்கம் பதக்கம் வென்று சாதனைகள் படைத்தார். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

    உசைன் போல்டின் நெருங்கி பெண் தோழி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் 17-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் அறிந்து அந்நாட்டு பிரதமர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உசைன் போல்ட் வெளியிட்டுள்ளார். 
    அவரது குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு ‘ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    பெண் தோழியின் 21-வது பிறந்த நாள் அன்று பெயரை வெளியிட்டுள்ள உசைன் போல்ட், ‘‘என்னுடைய பெண் தோழி காசி பென்னெட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். சிறந்த நாளை அவருடன் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டால் பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என 3 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே டெஸ்ட் போட்டியில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதற்காகவும், கால நேரத்தை குறைக்கவும், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டெஸ்டை நான்கு நாட்களாக குறைக்க 
    ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) பரிந்துரை செய்துள்ளது. 

    2023-ம் ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இதனை அறிமுகம் செய்யவும், ஐ.சி.சி. உத்தேசித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    143 ஆண்டுகால டெஸ்ட் போட்டியை 5 நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்கலாம் என்ற ஐ.சி.சி.யின் யோசனைக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், லாங்கர், நாதன் லயன் உள்ளிட்ட பல வீரர்கள் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், (பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டனுமான கங்குலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான்கு நாள் டெஸ்ட் போட்டியை பி.சி. சி.ஐ. விரும்பவில்லை. நான்கு நாள் போட்டிக்கு நான் பெரிய ரசிகர் கிடையாது. ஏனென்றால், நான்கு நாட்கள் நடத்தப்பட்டால், பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் முடிவுகள் ஏற்படாது. என்னைப் பொறுத்த வரை டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பது தேவையில்லை. 

    கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வடிவிலான ஆட்டமாக டெஸ்ட் இருக்கிறது. 5 நாட்கள் நடத்தப்படுவதால்தான் அது சுவாரஸ்யமாக இருக்கிறது.


    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். 

    தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஒரே ஒரு நான்கு நாள் டெஸ்ட் போட்டி பரிசோதனை முறையில் நடத்தப்பட்டது.
    ×