search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை தொடர் ரத்து
    X
    ஆசிய கோப்பை தொடர் ரத்து

    கங்குலி சொன்னது சரியே.... ஆசிய கோப்பையை ஒத்திவைத்தது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டிருந்தது.

    இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் பெற்றிருந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லாததால் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

    கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை, ஐபிஎல் 2020, டி20 ஆசிய கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று பேசும்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உரிமத்தை பாகிஸ்தான் இலங்கையிடம் கொடுத்துவிட்டு, 2022 தொடரை நடத்தும் உரிமத்தை விரும்பினால் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×