என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிப்பதற்கு சுதந்திரம் அளிப்பதாகக்கூறி, அப்படி எதையும் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். தற்போது அவர்தான் இருந்து வருகிறார்.

    சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இரண்மு முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    கம்பிர் அளித்த பேட்டியில் ‘‘ஷாருக் கான் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தார்’’ என்றார். கவுதம் கம்பிர் கூறியதை அறிந்த சவுரவ் கங்குலி, தனக்கு அப்படி ஒரு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க முழு சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கான் உறுதியளித்தார். ஆனால் அப்படி எதுவும் அளிக்கப்படவில்லை. அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிறரின் தலையீடு இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அந்த அணியின் கேப்டன் வசம் அணியை விட வேண்டும். உதாரணத்திற்கு சென்னை அணியை டோனிதான் நிர்வகிக்கிறார். இதேபோன்று மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை’’ என்றார்.

    கங்குலியின் தலைமையில் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. ஒருமுறை 100 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது.

    இதனால் கங்குலியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவர் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே வென்றது. இதையடுத்து 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 7 வருடம் விளையாடியது. இதில் 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றது.
    ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியை முகமது முஸ்தாக் அகமது நேற்று ராஜினாமா செய்தார்.
    புதுடெல்லி:

    ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக பீகாரை சேர்ந்த முகமது முஸ்தாக் அகமது கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் வரை உள்ளது. அவர் ஏற்கனவே 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை பொருளாளராகவும், 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை பொதுச்செயலாளராகவும் இருந்தார். ஆக்கி இந்தியா அமைப்பில் அவர் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றது சர்ச்சையை கிளப்பியது. 

    தேசிய விளையாட்டு கொள்கை விதிமுறையின்படி தேசிய விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது. இரண்டு முறை தலா 4 ஆண்டு காலம் பதவி வகித்த பிறகு ஒரு முறை இடைவெளி விட்டு தான் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும். தேசிய விளையாட்டு கொள்கையின் பதவி கால வழிகாட்டுதல் விதிமுறையை மீறி ஆக்கி இந்தியா தலைவராக தேர்வான முகமது முஸ்தாக் அகமதுவை அந்த பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியை முகமது முஸ்தாக் அகமது நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா, ஆக்கி இந்தியாவின் அவசர செயற்குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு பதிலாக சீனியர் துணைத்தலைவராக இருந்த மணிப்பூரை சேர்ந்த ஞானேந்திர நிகோம்பாம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    ஒருங்கிணைந்த அணிக்கு மோகன் பகானின் சீருடையை பயன்படுத்த நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா (ஏ.டி.கே.) அணியும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப்பும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இணைந்தது. இந்த சீசனில் ஒருங்கிணைந்த அணியாக ஐ.எஸ்.எல். போட்டியில் களம் இறங்குகிறது. 

    இதையொட்டி நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் போட்டியில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பெரும்பாலானவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மோகன் பகானின் அணியின் அடையாளமான பச்சை மற்றும் அடர் சிவப்பு நிறம் கலந்த சீருடையையே ஒருங்கிணைந்த அணிக்கு பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

    புதிய அணிக்குரிய லோகோவில் மோகன் பகானின் சின்னமான ‘படகு’ இடம் பெற்றுள்ளது. திறமையான உள்ளூர் வீரர்களுக்கு உதவுவதற்காக மேற்கு வங்காளத்தில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து அகாடமி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஒருங்கிணைந்த கிளப் கூறியுள்ளது.
    71-வது பிறந்த நாளை கொண்டாடும் கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவருமான சுனில் கவாஸ்கருக்கு நேற்று 71-வது வயது பிறந்தது. இதையொட்டி கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில், ‘டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன், டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 3 முறை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன், 2005-ம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த சாதனையாளர், 100 கேட்ச்கள் செய்த முதல் இந்திய பீல்டர்’ என்று அவருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது.

    1987-ம் ஆண்டில் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற போது அவருக்கும், அவரது மனைவிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் நிரந்தரமாக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்து இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக மும்பை வான்கடே ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த இருக்கைகள் அவருக்கு வழங்கப்படவில்லை. கவனக்குறைவு காரணமாக நடந்த இந்த தவறை 9 ஆண்டுக்கு பிறகு உணர்ந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் கவாஸ்கருக்கு மீண்டும் இரண்டு இருக்கைகள் வழங்கப்படும் என்றும், அவ்விரு இருக்கைகளும் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பாக்சில் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கவாஸ்கர் ‘எனது பிறந்த நாளையொட்டி மும்பை கிரிக்கெட் சங்கம் இனிப்பான பரிசை வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 
    இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6), கேப்ரியல் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். ஹோப் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ப்ரூக்ஸ் 39 ரன்களும், ராஸ்டன் சேஸ் 47 ரன்களும், பிளாக்வுட் 12 ரன்களும் சேர்த்தனர்.

    பிராத்வைட் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61 ரன்கள் அடித்தார். கடைநிலை வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 102 ஓவர்ளில் 318 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 114 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தை சொற்ப ரன்களில் ஆல்-அவுட் ஆக்கினால் சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. 
    இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் ஸ்டூவர்ட் பிராட் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் மட்டுமே இடம் பிடித்தனர். ஸ்டூவர்ட் பிராட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ஸ்டூவர்ட் பிராட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

    ஸ்டூவர்ட் பிராட்

    இந்த நிலையில் ‘‘நான் மிகவும் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன். ஏனென்றால் அணியில் இருந்து நீக்கியதை புரிந்து கொள்வது மிகவும் கடினமான முடிவு. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறேன். ஆஷஸ் வெற்றி, தென்ஆப்பிரிக்கா தொடர் வெற்றியை என்னுடைய சட்டை போன்று உணர்கிறேன்’’என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வளையத்தை மீறியதாக பார்முலா 1 கார்பந்தய வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 4 மாதங்களுக்குப்பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள் இன்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வீரர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் உயிர்-பாதுகாப்பு (Bio-Secure) சூழ்நிலையில் விளையாடுகிறார்கள்.

    பார்முலா 1 கார்பந்தயம் கடந்த வாரம் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரியா கிராண் பிரி-யில் மெர்சிடஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் முதல் இடம் பிடித்தார். பெர்ராரி அணியைச் சேர்ந்த லெக்லெர்க் 2-வது இடம் பிடித்தார்.

    பார்முலா 1 கார்பந்தய வீரர்களுக்கான பாதுகாப்பு பப்புள் (Bubble) என்று அழைக்கப்படுகிறது. போட்டோஸ் பப்புள் வளையத்திற்குள் அவரது பெண் தோழி மற்றும் டிரைனர் ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில் இருவரும் பாதுகாப்பு வளைத்தை விட்டு வெளியேறி விதிமுறையை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    போட்டோஸ் அனுமதி பெற்றுதான் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ‘‘அவர் தொடர்ந்து பாதுகாப்பு வளைத்திற்குள்தான் இருந்த வருகிறார். கொரோனா பரிசோதனை நடைமுறையை தொடர்ந்து வருகிறார். மொனாக்கோ போட்டிக்கு முன் பரிசோதனை செய்யப்படும்’’ என்று மெர்சிடெஸ் அணி தெரிவித்துள்ளது.

    பெர்ராரி அணியின் லெக்லெர்க் ரெஸ்டாரன்டில் தனிமனித இடைவெளி இன்றி அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரிடமும் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.
    ஐபிஎல் இல்லாமல் இந்த வருடத்தை நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருந்தால் ஐபிஎல் தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    ஆசிய கோப்பை டி20 தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை குறித்து இன்று முடிவு தெரியும். இந்த நிலையில் ஐபிஎல் இல்லாத இந்த வருடத்தை கடந்து செல்வதை நினைக்கவே கடினமாக உள்ளது என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டி இல்லாமல் இந்த வருடம் கடந்து போவதை நினைக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். 2008-ல் இருந்து கிரிக்கெட் அட்டவணையில் இது ஒரு அங்கமாக உள்ளது. மிகப்பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

    ஐபிஎல் போட்டி நிதி மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. உலகின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். அதனால் ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம். என்னைப் பொறுத்த வரைக்கும் ஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது’’ என்றார்.
    வெளிநாட்டு மண்ணில் முதல் 45 நிமிடங்கள் ரோகித் சர்மாவுக்கு கடினமானதாக இருக்கும், அதன்பின் அவரால் டபுள் செஞ்சூரி கூட அடிக்க முடியும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி ஒயிட்-பால் அணி தொடக்க பேட்ஸ்மேனும், துணைக் கேப்டனுமான ரோகித் சர்மா கடந்த இரண்டு வருடமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து உலக கோப்பையில் ஐந்து சதங்கள் விளாசினார். இதனால் டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களம் இறக்கப்படுகிறார்.

    இந்தியாவில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடினார். நியூசிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டதால் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வருடம் இறுதியில் இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அப்போது தொடக்க வீரராக களம் இறங்க இருக்கிறார்.

    புதுப்பந்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ‘‘ஆட்டம் தொடங்கிய 30 முதல் 45 நிமிடங்கள் வரை அவருக்கு சற்று கடினமானதாக இருக்கும். அதை ரோகித் சர்மா சமாளித்து விட்டால் டபுள் செஞ்சூரி கூட அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ‘‘தற்போது அவரது ஆட்டத்தை முன்பைவிட தற்போது சிறப்பாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது உள்ள ரோகித் சர்மா இதற்கு முன் நாம் பார்த்தவர் கிடையாது. எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் கூட உலக கோப்பையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பந்து லேசாக மூவ் ஆகும்போது, பின்னால் வந்து பந்தை தடுத்து ஆடினார். தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக 8 முதல் 10 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து நின்று அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கண்டிசனை அவர் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த வீரராவார். அதன்பின் உடனடியாக ஸ்டிரைக் ரேட்டை 130 வரை உயர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உள்ளது’’ என்றார்.
    சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு, அதிகப்படியான சோதனை ஆகியவற்றின் மூலம் நோயை கட்டுப்படுத்தியது. என்றாலும் தற்போது பீஜிங் போன்ற முக்கியமான நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

    2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறும் என்று அறிவித்துள்ள சீனா, பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆறு தொடர்கள் (பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இறுதி தொடர் உள்பட) ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான நான்கு தொடர்களையும் நடத்த திட்டமிட்ருந்தது.

    அக்டோபர் மாதம் ஆசிய விளையாட்டு கிளிம்பிங் சாம்பியன்ஷிப், டிசம்பர் மாதம் பேட்மிண்டன் உலக டூர் பைனலும் நடைபெற இருந்தது. அதேபோல் அக்டோபர் மாதம் இரண்டு சைக்கிள் ரேஸ் தொடரும் நடைபெற இருந்தது.
    அயர்லாந்து தொடருக்கான பயிற்சி முகாமுக்கான 24 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் 30 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்தது.

    அதில் இருந்து அதிகாரப்பூர்வ அணியை அறிவித்தது. அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாட இருக்கிறது. முதல் போட்டி ஜூலை 30-ந்தேதியும், 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதியும், 3-வது போட்டி ஆகஸ்ட் 4-ந்தேதியும் நடக்கிறது.

    இதற்கான 24 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்காத பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

    பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் அயர்லாந்து தொடர் தொடங்குகிறது. இதனால் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் அயர்லாந்து தொடரில் இடம்பெற மாட்டார்கள். என்றாலும் வலுவான ஒருநாள் அணி விளையாடும் என்று இங்கிலாந்து தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளரான பால் கோலிங்வுட் தலைமை பயிற்சியாளராகவும், மார்கஸ் டிரெஸ்கோதிக் துணை பயிற்சியாளராகவும் செயல்பட இருக்கிறார்கள்.

    ஜூலை 16-ந்தேதி ஏஜயஸ் பவுல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. பயிற்சியின் முடிவில் அயர்லாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்படும்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் முதன்முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணி அரிய சாதனையை படைத்துள்ளது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் கால்பந்தில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். நேற்று மான்செஸ்டர் யுனைடெட் அஸ்டோன் வில்லா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என வெற்றி பெற்றது.

    இதற்கு முன் போர்ன்மவுத் அணியை 3-2 எனவும், பிரைட்டன் அணியை 3-0 எனவும், ஷெஃப்பீல்டு அணியை 3-0 எனவும் வீழத்தியிருந்தது.

    இதனால் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் மூன்று கோலிக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஒரு அணி இப்படி வெற்றி பெறுவது இங்கிலீஷ் பிரிமீயர் லீக் வரலாற்றில் இதுவே முதல் முறை.

    அதேபோல் நேற்றைய போட்டியில் பெனால்டி வாய்ப்பு மூலம் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 13 பெனால்டி கோல் அடித்துள்ளது. இதுவும் ஒரு சாதனையாகும்.
    ×