என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான பிரவீன் தாம்பே கரீபியன் டி20 லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
    மும்பை கிரிக்கெட் அணிக்காக முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் பிரவீன் தாம்பே. இவர் 41 வயதில் ஐபிஎல் டி20 லீக்கில் அறிமுகம். ஆனால், அதன்பின் அதிக வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலம் எடுத்துள்ளது. ஆனால், டி10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி இல்லை என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால் கொல்கத்தா அணி அவரை நீக்கியது.

    இந்நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விண்ணப்பம் செய்தார். அவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பிரவீன் தாம்பே கூறுகையில் ‘‘நான் உடற்தகுதியாக இருந்த போதிலும் பிசிசிஐ என்னை விளையாட அனுமதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் மற்ற லீக்குகளில் விளையாடக்கூடாது. நான் இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் லீக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளேன். இதனால் டிரின்பாகோ அணி என்னை ஏலம் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வேன்’’ என்றார்.

    கரீபியன் பிரிமீயர் லீக் ஆகஸ்ட் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாட இருக்கும் முதல் இந்தியா வீரர் இவராவார்.
    143 ஆண்டுகால வரலாற்றில் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டி நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்தது 3-வது முறையாகும்.
    முதல் உலகப்போர் மற்றும் ஸ்பேனிஸ் புளூ காரணமாக 2411 நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி  நடந்தது. அதாவது 1914 மார்ச் 3-ம்தேதி முதல் 1920 டிசம்பர் 16 வரை போட்டி நடைபெறவில்லை.

    அதன் பிறகு இரண்டாம் உலகப்போர் காரணமாக 2481 நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்டது. அதாவது 1939 ஆகஸ்ட் 22 முதல் 1946 மார்ச் 28 வரை நடைபெறவில்லை.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 117 நாட்களுக்கு பிறகு உலக அளவில் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. கடைசியாக கடந்த மார்ச் 13-ம்தேதி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடந்தது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆசியன் புளூ (1957-58), ஆங்காங் புளூ (1968-69), இந்தியா- பாகிஸ்தான் போர் (1965 மற்றும் 1971), வளைகுடா போர் (1990,1991) லண்டன் குண்டுவெடிப்பு (2005), மும்பை தாக்குதல் (2008), லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் (2009) உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. அப்போது அந்தந்த நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கிரிக்கெட் தடைபடவில்லை.

    ஆனால் கொரோனா நோய் தொற்றால் மட்டுமே உலகம் முழுவதும் போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது 117  நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
    எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் எம்எஸ் டோனிக்கு இன்று 39-வது பிறந்த நாள்.

    இவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
    எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி அனிருத் அசத்தியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர்.

    பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக  ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக் உடன் ரஜினி பெயர் திரையில் தோன்றும்.

    ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் மரணம்... மாசு மரணம்... என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.
    இன்று எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்எஸ் டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்... மாசு மரணம்... என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் 2020-21 மத்திய ஒப்பந்தத்தில் உள்ள 18 வீரர்களின் ஆண்டு வருமானத்தை விட ஐபிஎல்-லில் ரோகித் சர்மாவின் சம்பளம் இரண்டு மடங்கு அதிகமாம்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிடும். கடந்த மே மாதம் 2020-21 -ம் ஆண்டுக்கான ஏ, பி, சி. வளர்ந்து வரும் வீரர்கள் என நான்கு பிரிவுகளாக வீரர்களை பிரித்து பட்டியலை வெளியிட்டது. ‘ஏ’ பிரிவில் மூன்று வீரர்களும், ‘பி’ பிரிவில் 9 வீரர்களும், ‘சி’ பிரிவில் ஆறு வீரர்களும், வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் மூன்று வீரர்களும் இடம் பிடித்தனர்.

    ‘ஏ’ பிரிவில் ஒரு வீரருக்கு தலா இந்திய பண மதிப்பில் 60,92,050 ரூபாய் சம்பளமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பி’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 41,54,193 ரூபாய் சம்பளமும், ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 30,36,398 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    18 வீரர்களின் ஒரு வருடத்திற்கான ஒட்டுமொத்த சம்பளம் 7.4 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வருடத்திற்கு 15 கோடி ரூபாய் வாங்குகிறார்.

    ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஒப்பந்த வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட ரோகித் சர்மா இரண்டு மடங்கு சம்பளம் வாங்குகிறார்.
    வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐசிசி கூட்டத்தில் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
    ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது.

    இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

    ஐபிஎல் குறித்து முடிவு எடுக்க முடியாத அளவிற்கு ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகர் தடைபோட்டு வருவதாக பிசிசிஐ அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஷசாங்க் மனோகர் கடந்த வாரம் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் ஐசிசி கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அப்போது டி20 உலக கோப்பையை தொடரை ஒத்திவைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்கள் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒயிட்பால் கிரிக்கெடிற்கு தயாராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு உறுதியாகியுள்ளது.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எதிராக ஆதாயம் தரும் இர்டை பதவி வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுளளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் வீராட் கோலி. விளையாட்டு மட்டுமின்றி விளம்பரம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருவாய் ஈட்டுபவராக இருக்கிறார்.

    விராட் கோலி இரு நிறுவனங்களின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிறுவனம் லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட்,  ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் வைத்துள்ளது. இதன் காரணமாக வீராட் கோலி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயினிடம் இதுதொடர்பாக  புகார் அளித்து உள்ளார். இவர் ஏற்கனவே தெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் மீது இதே மாதிரியான புகாரை தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயின் கூறியதாவது:-

    விராட் கோலி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். ஒருவேளை இது உண்மையானால் கோலிக்கு இதுபற்றி பதிலளிக்க அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்திருக்கும் சச்சினை சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார்.

    தெண்டுல்கரின் சாதனையை தற்போது 70 சதங்களுடன் (டெஸ்டில் 27 சதம், ஒரு நாள் போட்டியில் 43 சதம்) உள்ள இந்திய கேப்டன் விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்று ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ஹாக், ‘‘தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் நிச்சயம் முறியடிக்க முடியும். தெண்டுல்கர் விளையாடத் தொடங்கியபோது இருந்ததை விட இப்போது வீரர்களின் உடல்தகுதி பராமரிப்பு சிறப்பாக உள்ளது. உடல்தகுதியை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க தரம்வாய்ந்த நிபுணர்கள் உதவுகிறார்கள்.

    பிராட் ஹாக்

    அது மட்டுமின்றி வீரர்களுக்கு உதவுவதற்கு கிரிக்கெட் வாரியமே நிறைய உடல்தகுதி நிபுணர்களையும், டாக்டர்களையும் கைவசம் வைத்துள்ளது. ஏதாவது சிறிய காயம் என்றாலும் வீரர்கள் உடனே சுதாரித்து விடுகிறார்கள். காயப்பிரச்சினையால் ஒரு வீரர் தவற விடும் ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். 

    மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கோலியால் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விட முடியும் என்றே நினைக்கிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரிலயா கிராண்ட்பிரியில் மெர்சிடஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் முதல் இடத்தை பிடித்த நிலையில், ஹாமில்டன் ஏமாற்றம் அளித்தார்.
    கொரோனா அச்சத்தால் 3 மாதங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் ஒரு வழியாக நேற்று தொடங்கியது. இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

    ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் அரங்கேறிய இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்சிடஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீட்டர் இலக்கை 1 மணி 30 நிமிடம் 55.739 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றார்.

    அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரைவிட 2.7 வினாடி மட்டுமே பின்தங்கிய பெராரி அணியைச் சேர்ந்த சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ) 2-வதாகவும், லான்டோ நோரிஸ் (இங்கிலாந்து) 3-வதாகவும் வந்தனர்.

    எதிர்பார்க்கப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது கார் ரெட்புல் அணி வீரர் அலெக்ஸ் அல்பானின் கார் மீது மோதியதால் 5 வினாடி பெனால்டி விதிக்கப்பட்டது. இதனால் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளார். அடுத்த சுற்று போட்டியும் இதே இடத்தில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
    பேட்மிண்டன் ஜாம்பவான்களில் ஒருவரான சீனாவின் லின் டான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    பீஜிங்:

    பேட்மிண்டன் உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கொடி நாட்டியவர், லின் டான் (சீனா). இடக்கையால் மட்டையை சுழட்டும் அவர் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 முறையும், ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 6 முறையும் பட்டத்தை கைப்பற்றி வியப்பூட்டினார். இவற்றோடு சேர்த்து ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை, தாமஸ் கோப்பை, சுதிர்மன் கோப்பை, சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிசுற்று போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார். ‘சூப்பர் கிராண்ட்ஸ்லாம்’ என்று அழைக்கப்படும் இந்த 9 பிரதான பேட்மிண்டன் போட்டிகளிலும் தனது 28 வயதுக்குள் மகுடம் சூடி உலகின் மிகச்சிறந்த வீரராக விளங்கினார். வேறு எந்த வீரரும் இச்சாதனையை செய்ததில்லை. அத்துடன் நீண்ட காலம் ‘நம்பர் ஒன்’ வீரராகவும் வலம் வந்தார். இதுவரை 666 வெற்றிகள் குவித்துள்ளார்.

    ரசிகர்களால் ‘சூப்பர் டான்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட லின் டான் 30 வயதை கடந்த பிறகு பெரிய அளவில் சாதிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அரைஇறுதியுடன் வெளியேறினார். திறமையான இளம் வீரர்களின் வருகையாலும், அடிக்கடி காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிப்பாலும் தடுமாற்றம் கண்ட அவர் தரவரிசையிலும் பின்தங்கினார். தற்போது தரவரிசையில் 19-ம் வகிக்கும் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாத நெருக்கடியில் தவித்தார். இதற்கிடையே கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் 36 வயதான லின் டான் பேட்மிண்டனில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் விரும்பிய விளையாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். எனது குடும்பத்தினர், பயிற்சியாளர், அணி உதவியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்னுடன் மகிழ்ச்சியான நேரம் மற்றும் கடினமான தருணங்களில் இருந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. எனக்கு 36 வயது ஆகிறது. உடல் வலியும், காயங்களும் சக வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய அளவுக்கு இனி அனுமதிக்காது. இதனால் ஓய்வு முடிவுக்கு வந்தேன். 2000-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை அங்கம் வகித்த சீனா அணியை விட்டு வெளியேறுவது என்பது கடினமானது’ என்றார்.

    லின் டானின் பிரதான எதிரியான மலேசியாவின் லீ சோங் வெய் மூக்கில் ஏற்பட்ட புற்றுநோயால் கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் 40 முறை மோதி அதில் 28-ல் லின் டான் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரூ.350 கோடி செலவில் உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜெய்ப்பூரில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஏற்கனவே சவாய் மான்சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த நிலையில் அங்கு புதியதாக கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று ரூ.350 கோடி செலவில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.

    100 ஏக்கர் நிலப்பரப்பில் 75 ஆயிரம் இருக்கை வசதியுடன் அமைய உள்ள இது ஆமதாபாத், மெல்போர்னுக்கு அடுத்தபடியாக உலகின் 3-வது பெரிய ஸ்டேடியமாக இருக்கும். ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை பகுதியில் அமைய இருக்கும் இந்த ஸ்டேடியத்தின் கட்டுமான பணி அடுத்த 4 மாதத்துக்குள் தொடங்கப்பட உள்ளது.

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில் இன்று தொடங்குகிறது.
    ஸ்பில்பேர்க்:

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 15-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரியின் மூலம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல பந்தயங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

    இதையடுத்து இந்த சீசனுக்கான பந்தயங்களை முழுமையாக நடத்த இயலாது என்பதை உணர்ந்துள்ள போட்டி அமைப்பாளர்கள் 15 முதல் 18 சுற்றுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 8 சுற்று பந்தயத்தின் போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டது.

    இதன்படி இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது. ஆஸ்திரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பந்தய தூரம் 306.452 கிலோமீட்டர் ஆகும்.

    கொரோனா பீதியால் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. குறைந்த எண்ணிக்கையிலான ஊடகத்தினர் மற்றும் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பாதுகாப்பு குழுவினர் கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சி கிடையாது.

    வீரர்கள், அவர்களின் குழுவினர், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவுகள் வந்திருக்கிறது. இந்த போட்டியையொட்டி ஜூன் 26-ந்தேதியில் இருந்து ஜூலை 2-ந்தேதி வரை மட்டும் மொத்தம் 4,032 தடவை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பார்முலா1 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மெர்சிடஸ் அணிக்காக கார் ஓட்டும் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஏற்கனவே 6 முறை மகுடம் சூடியிருக்கிறார். இந்த சீசனிலும் பட்டம் வென்றால் அதிகமுறை பார்முலா1 பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்து விடுவார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இனவெறிக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருப்பு நிற ஹெல்மெட்டை அணிந்து களம் இறங்குகிறார். அவருக்கு வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து), சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ), மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (நெதர்லாந்து), செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று நடந்த தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த வால்டெரி போட்டாசின் கார் முதல் வரிசையில் இருந்தும், ஹாமில்டனின் கார் 2-வது வரிசையில் இருந்தும் புறப்படும்.

    ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் 10 இடங்களுக்குள் வருவோருக்கு புள்ளிகள் வழங்கப்படும். டாப்-3 இடங்களை பிடிப்போருக்கு 25, 18, 15 வீதம் புள்ளி கிடைக்கும். அனைத்து சுற்றுகளின் முடிவில் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்கள் பார்முலா1 சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்வார்கள்.
    ×