search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட்
    X
    கிரிக்கெட்

    3-வது முறையாக நீண்ட நாட்கள் கிரிக்கெட் நடைபெறாத சம்பவம்

    143 ஆண்டுகால வரலாற்றில் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டி நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்தது 3-வது முறையாகும்.
    முதல் உலகப்போர் மற்றும் ஸ்பேனிஸ் புளூ காரணமாக 2411 நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி  நடந்தது. அதாவது 1914 மார்ச் 3-ம்தேதி முதல் 1920 டிசம்பர் 16 வரை போட்டி நடைபெறவில்லை.

    அதன் பிறகு இரண்டாம் உலகப்போர் காரணமாக 2481 நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்டது. அதாவது 1939 ஆகஸ்ட் 22 முதல் 1946 மார்ச் 28 வரை நடைபெறவில்லை.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 117 நாட்களுக்கு பிறகு உலக அளவில் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. கடைசியாக கடந்த மார்ச் 13-ம்தேதி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடந்தது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆசியன் புளூ (1957-58), ஆங்காங் புளூ (1968-69), இந்தியா- பாகிஸ்தான் போர் (1965 மற்றும் 1971), வளைகுடா போர் (1990,1991) லண்டன் குண்டுவெடிப்பு (2005), மும்பை தாக்குதல் (2008), லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் (2009) உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. அப்போது அந்தந்த நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கிரிக்கெட் தடைபடவில்லை.

    ஆனால் கொரோனா நோய் தொற்றால் மட்டுமே உலகம் முழுவதும் போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது 117  நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
    Next Story
    ×