என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய 6 மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது. பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

    மேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பாகவும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.

    சுதந்திர தினத்தன்று (கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.

    ஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எம்எஸ் டோனியை அதிக அளவில் பார்க்க இயலாது. இந்நிலையில் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வீர்கள், ரசிகர்களுக்கு டோனி மீண்டும் பிட்சில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது. நான் சொல்ல தேவையா?.

    லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்தேன. என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்கிளின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.
    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவ் சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, முதல் பேட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெள்றி பெற்றது.

    தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி மன்செஸ்டரில் தற்போது நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் ஓவரிலேயே இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் முதல் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார்.

    இதனால் ரன் கணக்கை தொடங்குவதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது இங்கிலாந்து. 3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. மோர்கன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார. அடுத்து வந்த பட்லர் 8 ரன்னில் வெளியேறினார்.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு பேர்ஸ்டேவ் உடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாம் பில்லிங்ஸ் 58 பந்தில் 57 ரன்கள் அடித்தார். பேர்ஸ்டோவ் 126 பந்தில் 112 ரன்கள் விளாசினார்.

    இதனால் இங்கிலாந்து அணி 250 ரன்களை கடக்கும் வாய்ப்பை பெற்றது. கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 53 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இல்லை எனில் தொடரை இழக்கும்.
    பயோ- செக்யூர் வளையத்திற்கு இருப்பது பிக் பாஸ் வீட்டில் தங்குவது போன்று உள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகுந்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறையின்படி ஐபில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பிசிசிஐ பயோ-செக்யூர் வளையத்தை உருவாக்கியுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்த பின்னர், இந்த வளையத்திற்குள் செல்வார்கள். அதன்பின் எக்காரணம் கொண்டும் போட்டி முடியும் வரை வெளியில் வர இயலாது. வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே செல்வது கடினம்.

    ரசிகர்களை சந்திப்பது, ஓட்டலில் சாப்பிடுவது போன்ற விசயத்தில் பாதுகாப்பை மீற இயலாது. பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர்கள் போட்டியில் இருந்து வெளியேறும் வரை வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாது. அதுபோன்று பயோ செக்யூர் பாதுகாப்பு உள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘பயோ-செக்யூர் வளையம் ஒவ்வொருவருக்கும் புதிய விசயம். அதிகமான சவால்களை கொண்டது. ஒவ்வொரு நடவடிக்கையிலும் முன்னேற்றம் காண இது சிறந்த வாய்ப்பு. நான் என்னையே மகிழ்விக்கிறேன். நேர்மறையாக வழியை எடுத்துக் கொண்டேன். தனக்குத்தானே எப்படி பேசிக் கொள்வதில்தான் மொத்தமும் அடங்கியுள்ளது. நீங்கள் உங்களுடைய சிறந்த நண்பர் அல்லது எதிரியாக முடியும்.

    உங்களை சுற்றி 10 நபர்களை வைத்திருக்க முடியும். அவர்கள் உங்களுடைய நண்பர்கள் இல்லை என்றால், அதில் ஒரு நன்மையும் இல்லை. நான் சந்தோசமாக ரெஸ்டாரன்ட் செல்வேன். மக்களை பார்ப்பேன். தற்போது அப்படி நடக்காது. ஆகவே. ரசிகர்கள் இதை எவ்வாறு எடுக்கப் போகிறார்கள்?. இது ஐபிஎல் தொடரில் எவ்வாறு செல்ல இருக்கிறது என்பது போன்ற ஏராளமான விசங்கள் உள்ளது. வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்றால், மற்ற வீரர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் சக வீரர்களுடன் அதே ஓட்டலில் மட்டும் தங்க முடியும். இது ஒவ்வொருவரையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

    இது மனரீதியான பரிசோதனைக்கு மிகவும் சிறந்தது. இது ஏறக்குறை பிக் பாஸ் போன்றது’’ என்றார்.
    சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இணைந்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதற்கான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 14-ந்தேதி (நேற்று முன்தினம்) மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சாஹர் சமூக இணையதளத்தில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். அதில் டிரென்ட் போல்ட், சவுரப் திவாரி, ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் சிலர் இடம்பிடித்திருந்தனர். அந்த படத்தில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் இடம்பெற்றிருந்தது ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

    அப்போதுதான் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வலைப்பயிற்சி பவுலராக சென்றுள்ளது தெரிய வந்தது. கிரேட் சச்சின் தெண்டுல்கரின் மகன் அணியிடம் இடம் பெற முடியாமல் வலைப்பயிற்சி பவுலராக மட்டுமே செல்ல முடிந்தது ஏமாற்றமே.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த்ரே ரஸல்தான் தற்போதைய நிலையில் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அந்த்ரே ரஸல் 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 ஆட்டங்களில் 510 ரன்கள் குவித்தர். ஸ்டிரைக் ரேட் 204.81 ஆகும். அத்துடன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்நிலையில் தற்போதைய நிலையில் அந்த்ரே ரஸலை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறுகையில் ‘‘அந்த்ரே ரஸல் போன்று யாராலும் பந்தை சிறப்பாக அடிக்க முடியாது. அவரிடம் அதிகமான வலிமை உள்ளது. அவருடைய சிக்ஸ் மிகப்பெரியதாக இருக்கும். அவருடன் போட்டியிடும் அளவிற்கு மற்ற பேட்ஸ்மேன்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில் அவர்தான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்.

    அவருடன் இணைந்து விளையாடினாலும் அதிகமாக பேசியது கிடையாது. ஏனென்றால், எனக்கு ஆங்கிலம் எளிதாக பேச வராது. ஆனால், வீரர்கள் அறையில் அவரது பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாடினோம். விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டோம்’’ என்றார்.
    மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாயகரமான வீரர் யார் என்பதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விவரித்துள்ளார்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில ஐபிஎல் 2020 சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்களிடம் ஐபிஎல் ஜூரம் தொற்றிக் கொண்டது. எங்கு பார்த்தாலும் ஐபிஎல் பேச்சுதான். ரசிகர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு அணி வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் அதைப்பற்றிதான் பேசுகிறார்கள்.

    இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகரமான வீரர் யார் என்பதை விவரித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவை விட அபாயகரமான வீரராக மற்ற யாரும் இருக்க முடியாது’’ என்றார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் ரோகித் சர்மா, ஐந்து முறை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2009-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது அந்த அணி கோப்பையை வென்றது. அதன்பின் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார். 188 போட்டிகளில் 4898 ரன்கள் அடித்துள்ளார். 36 அரைசதங்கள் அதில் அடங்கும்.

    2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும்போது மும்பை இந்தியன்ஸ் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
    ஆப்கானிஸ்தானில் டி20 லீக் அணியின் உரிமையாளர் ஆடும் லெவன் அணியில் களம் இறங்கி விளையாடியதால் தடையை சந்தித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஷ்பாகீஜா என்ற டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் காபுல் ஈகிள்ஸ் அணியின் உரிமையாளராக அப்துல் ரத்தீப் அயூபி உள்ளார். 40 வயதான இவர் மிதமான வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தத் தொடருக்கான காபுல் ஈகிள்ஸ் அணியில் வீரர்கள் பட்டியலில் இவர் இடம் பெறவில்லை. என்றாலும், ஸ்பீன் கார் டைகர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட விரும்பினார். இதனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்து ஒரு ஓவர் வீசினார் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

    என்றாலும், 142 ரன்களை சேஸிங் செய்து காபுல் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது. அணி உரிமையாளர் வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத நிலையில், அணியில் சேர்ந்து விளையாடியதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு தடைவிதித்துள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளின்போது காபுல் ஈகிள்ஸ் அணியுடன் இவர் செல்ல முடியாது.
    கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா முகுதுப் பகுதியில ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் உடல்தகுதி பெற்று விளையாட தயாரானார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, ஒரு வருடம் விளையாடவில்லை என்பதால தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் சிறந்த முறையில் ஐபிஎல் தொடருக்கு தயாராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘தற்போது நான் பந்தை அடிப்பதை வைத்து பார்க்கும்போது நல்ல ஷேப் மற்றும் மனநிலையை பெற்றுள்ளேன். நான் களத்தில் இறங்கி எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறேன் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். என்னுடைய எண்ணம் சிறப்பான முறையில் வெளிப்படும் என நினைக்கிறேன்.

    நான் எவ்வளவு தூரம் போட்டியுடன் செல்கிறேன். எவ்வளவு நாட்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது விஷயம் இல்லை. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும்போது, அது மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டும். நான் சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். சிறப்பான விசயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்’’ என்றார்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் ஜேம்ஸ் பேட்டின்சன் புகழாரம் சூட்டியுள்ளா்.
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணி 4 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வந்தார். அந்த அணிக்காக 11 சீசனில் விளையாடி உள்ளார். அவர்தான் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருக்கிறார். 170 விக்கெட்டுகளை (122 இன்னிங்ஸ்) சாய்த்துள்ளார்.

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் மலிங்கா விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அவருக்கு பதிலாக சரியான மாற்று வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்து வீச்சாளரான பேட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்தார். தற்போது அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா உலகில் சிறந்த வேகப்பந்து வீரர் என்று பேட்டின்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்து பயிற்சி பெற்று வருகிறேன். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அனேகமாக 20 ஓவர் போட்டியில் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் பும்ரா ஆவார்.

    இதேபோல் நியூசிலாந்தைச் சேர்ந்த டிரென்ட் போல்டும் சிறப்பாக வீசக்கூடியவர். இவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த அனுபவமாக இருக்கிறது.

    நான் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சில் சில ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன். இதனால் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை பற்றிய சிறிய அனுபவம் எனக்கு இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் என்னால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முடியும்.

    இவ்வாறு பேட்டிசன் கூறியுள்ளார்.
    வீரர்களின் தனிமை காலத்தை 3 நாட்களாக குறைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது
    ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தவார்கள். பின்னர் கொரோனா பரிசோதனை முடிவை பொறுத்தே அவர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்து இருந்தது.

    அதன்படி அனைத்து வீரர்களும் அதை பின்பற்றி தற்போது கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் (பயோ செக்யூர் பபுல்) உள்ளனர்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இந்த போட்டி முடிந்த பிறகுதான் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் துபாய் புறப்பட திட்டமிட்டுள்ளனர்.

    6 நாட்கள் தனிமை காலத்தில் இருந்தால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.லில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாது.

    இதைத்தொடர்ந்து தனிமை காலத்தை 6 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களாக குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஸ்டீவ் சுமித், வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டாய்னிஸ், ஹசில்வுட் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்களும், மோர்கன், பட்லர், ஆர்சர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களும் இன்றைய போட்டிக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள்.

    இதில் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கும், வார்னர் ஐதராபாத் அணிக்காக கேப்டனாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ×