என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 சீசன் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 8 அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் கடந்த மாதம் 21-ந்தேதி, 22-ந்தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்குள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் ஆறு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பின் மூன்று கொரோனா பரிசோதனைக்குப்பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில தினங்களாக கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய வெயின் பிராவோ, பொல்லார்டு, அந்த்ரே ரஸல், ரஷித் கான், இம்ரான் தாஹிர் உள்பட ஐபிஎல்-லில் இடம் பிடித்துள்ள வீரர்கள் துபாய் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடர் முடிந்த கையோடு ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள இரண்டு அணிகளின் 21 வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.

    முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் முதல் ஒருவார போட்டிகளில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்தில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் இருப்பதால் மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியது. இந்நிலையில் 36 மணி நேர கோரன்டைன் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்றிரவு ஐக்கிய அரபு அமீரகம் சென்றடையும் இருநாட்டு வீரர்களும் 36 மணி நேரத்திற்குப்பிறகு நேரடியாக போட்டியில் கலந்து கொள்வார்கள்.
    ரியல் மாட்ரிட் அணிக்கு முக்கியமான கட்டத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்த காரேத் பேலே டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்கிறார்.
    கால்பந்து போட்டியில் முக்கிய வீரர்களில் ஒருவராக வேல்ஸ் நாட்டின் காரேத் பேலே-வையும் கருதலாம். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.

    ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய எதிரி அணியான பார்சிலோனாவுக்கு எதிராக 251 போட்டிகளில் விளையாடி 105 கோல்கள் அடித்துள்ளார். 68 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார். இவருடைய துணையுடன் 13 கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ளது. இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக், இரணடு லா லிகா, ஒரு  கோபா டெல் ரே ஆகியவை அடங்கும்.

    காரேத் பேலே கடந்த சில மாதங்களுக்கு மேலான அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால் களத்தில் இறங்கும் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்க வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்ல இருக்கிறார். அவருக்கு வருடத்திற்கு 35.59 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 
    கொரோனா வைரஸ் பாதித்த இக்கட்டான நிலையில, ஐபிஎல் தொடரை நடத்த ஏற்பாடு செய்ததற்கு ஒவ்வொருவரும் பராட்ட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் முடிவடைவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டி நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் பிசிசிஐ-யின் விடா முயற்சியின் காரணமாக நாளை மறுநாள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் தொடங்க இருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டியுள்ளது.

    பெரும்பாலான வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க விரும்பவில்லை. போட்டியில் விளையாடுவதற்காக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த காலக்கட்டத்தில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ததற்காக ஒவ்வொருவரும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு வளையம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் இதுபோன்ற விசயங்களை நினைத்திருக்க மாட்டீர்கள். நேராக வருவீர்கள். தொடரில் விளையாடுவீர்கள். ஆனால் தற்போது நமது சொந்த நிர்வாகம் நமக்காக இங்கே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய விவரங்களுடன் அவர்கள் செயல்படுத்திய விஷயங்கள், அவர்களின் வேலையை இன்னும் பாராட்ட வைக்கின்றன.

    தற்போதைய பாதுகாப்பு வளையத்தில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். இந்த நேரத்தில் இந்த தொடர் நடத்த ஏற்பாடு செய்த விதம், மிகமிக கடினமானது. அவர்கள் எடுத்த முயற்சிக்கு பாரட்டுகள் தெரிவித்தாக வேண்டும். நாம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி, ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்தத் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்தத் தொடர் முடிந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டது, விராட் கோலி 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    பாபர் அசாம் 3-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 4-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 6-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 8 இடத்திலும், டி காக் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    3-வது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பேர்ஸ்டோவ் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    பிபா கால்பந்து தரவரிசையில் கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெல்ஜியம் தொடரந்து முதல் இடத்தை வகிக்கிறது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது கிளப் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்றது.

    இதனால் நாடுகள் அளவிலான தரவரிசை கடந்த ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. பிரான்ஸ் 2-வது இடத்தையும், பிரேசில் 3-வது இடத்தையும், இங்கிலாந்து 4-வது இடத்தையும், போர்ச்சுக்கல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐரோப்பா நேசன்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி போர்ச்சுக்கல் இரண்டு இடம் முன்னேறியுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி 14-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15-வது இடத்திலும் உள்ளது. டென்மார்க் 16-வது இடத்திலும் உள்ளது. உலககோப்பையை நடத்த இருக்கும் கத்தார் 55-வது இடத்தில் உள்ளது. இந்தியா 109-வது இடத்தில் உள்ளது.
    ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வது கடினம் அல்ல என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 லீக் தொடர் நாளைமறுநாள் (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வது கடினமாக இருக்காது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நீங்கள் எந்த அணி சாம்பியன் கோப்பையை வெல்லும் என்று தேர்வு செய்தால், உறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் எனச் சொல்லலாம். ஏனென்றால், டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் ஒரு ஓவரில் சூழ்நிலை மாறும்.

    ஆனால், ஏற்கனவே இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளதால் நெருக்கடியை சமாளிக்கும் திறமையை பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். நாக்அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதை விட லீக் போட்டிகளில் விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இதனால் கடினமான சூழ்நிலையை எப்படி கடக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் இந்த வருடமும் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்காது என நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் இடது கை பேட்ஸ்மேனான ரெய்னா இல்லாதது, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அளவில் கவலை அளிப்பதாக இருக்கும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - 2-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தனிமைப்படுத்துதல், பயோ-செக்யூர் ஆகியவற்றை சிறப்பாக எதிர்கொள்ள எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒரு வாரம் சிறப்பு முகாமை சேப்பாக்கம் மைதானத்தில் மேற்கொண்டனர்.

    ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அப்போது ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பினார். மேலும், இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக் கேப்டனான சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

    இந்நிலையில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் கவலை அளிப்பதாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ளார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடுவார். அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அது சிஎஸ்கே அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடது கை பேட்ஸ்மேன்கள தேவை. அல்லது லெக்-ஸ்பின்னரை சிறப்பாக விளையாட வேண்டும். இதனால் சென்னை அணி சாம் கர்ரன், ஜடேஜா, வெயினி் பிராவோ ஆகியோரை கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். வாட்சன், எம்எஸ் டோனி நீண்ட நேரம் களத்தில் நிற்கமாட்டார்கள்.’’ என்றார்.
    விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 லீக்கில் பாபர் அசாம் 73 பந்தில் 114 ரன்கள் விளாச சோமர் செட் எளிதாக வெற்றி பெற்றது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி டி20 லீக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரரான பாபர் அசாம் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சோமர்செட் - கிளாமோர்கன் அணிகள மோதின.

    சோமர்செட் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய பாபர் அசாம். அவர் 73 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 114 ரன்னகள் குவித்தார். அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் சோமர்செட் அணி ஸ்கோர் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாமின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிளாமோர்கன் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 15.5 ஓவர்கள் தாக்குப்பிடித்து 117 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் வெற்றி பெற்றது.

    9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 114 ரன்கள் விளாசிய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் ஆகியோரின் சதத்தால் 302 ரன்னை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா தொடரை வென்றது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேர்ஸ்டோவ் (112) சதத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

    பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 73 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. டேவிட் வார்னர் (24), ஆரோன் பிஞ்ச் (12), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (4), லாபஸ்சாக்னே (20), மிட்செல் மார்ஷ் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    6-வது விக்கெட்டுக்கு அலேக்ஸ் கேரி உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழிந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். 47.3 ஓவரில் 285 ரன்கள் எடுத்திருக்கும்போது மேக்ஸ்வெல் 90 பந்தில் 4 பவுண்டர, 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். 293 ரன்கள் எடுத்திருக்கும்போது அலேக்ஸ் கேரி 114 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 106 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் ஸ்டார்க் 3 பந்தில் 11 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. டி20 தொடரை 1-2 என இழந்ததற்கு பழிதீர்த்தது.
    ஐபிஎல் சாம்பியன் கோப்பையை மூன்று முறை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் டி20 லீக் நாளைமறுநாள் (சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் - மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் அணிகளில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். நீங்கள் அவர்களிடம் இருந்து எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது. அனைத்து வகையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். நாங்கள் சிறந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    கடந்த வரும் தொடர் முழுவதும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினேன். தற்போதும் அதை தொடர்வேன். அணி தேவைக்கேற்ப அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைப்பேன்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
    கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய 6 மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது. பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

    மேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பாகவும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ். டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.

    சுதந்திர தினத்தன்று (கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.

    ஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எம்எஸ் டோனியை அதிக அளவில் பார்க்க இயலாது. இந்நிலையில் டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வீர்கள், ரசிகர்களுக்கு டோனி மீண்டும் பிட்சில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கிறது. நான் சொல்ல தேவையா?.

    லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளை பார்த்து நேரத்தை செலவழித்தேன. என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உள்பட பலவவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்கிளின் டிஎன்ஏ-வில் ஒரு பகுதியாக இருக்கிறது. அது திரும்புவதற்காக நாங்கள் பெருமூச்சுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.
    ×