என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர் கொள்கிறது.
இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. அதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இரு அணி வீரர்கள்:
சென்னை: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (கேப்டன்), ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியுஸ் சாவ்லா, லுங்கி ங்கிடி
மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட்,
ராகுல் சாஹர், பேட்டின்சன், டிரண்ட் போல்ட், பும்ரா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அபுதாபி:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது.
சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறாததால், டோனி எத்தனையாவது வீரராக களம் காண்பார் என்பது பற்றிய விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “நான் இன்று மைதானத்தில் இல்லை என்பதை நம்பமுடியவில்லை என்றாலும் எனது வாழ்த்துக்கள் உங்களுடன் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வாழ்துக்கள்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதற்காக சென்னை மற்றும் மும்பை அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
துபாய்:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையடுத்து, கொரோனா நடைமுறையை பின்பற்றி இரு அணி வீரர்களும் தாங்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதியில் இருந்து போட்டி நடைபெற உள்ள ஷேக் சயத் மைதானத்திற்கு தற்போது புறப்பட்டு சென்றனர்.
போட்டி நடைபெற உள்ள மைதானத்திற்கு பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலியும் புறப்பட்டு சென்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விலகல் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு என்ற போதிலும் அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது சாதகமான அம்சமாகும்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். ரெய்னா ஆடும் 3-வது பேட்டிங் வரிசைக்கு அம்பத்தி ராயுடுவை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. இங்குள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் ஜடேஜா, இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா ஆகியோரின் பவுலிங் முக்கிய பங்கு வகிக்கும்.
4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடைசி நேரத்தில் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா விலகியது கொஞ்சம் சறுக்கல் தான். ஆனாலும் சாதுர்யமாக பந்து வீசக்கூடிய பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அணியை தூக்கி நிறுத்தி விடுவார்கள்.
மும்பை அணியின் அசுர பலமே, அவர்களின் பேட்டிங் தான். கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் கடந்த சீசனில் அமர்க்களப்படுத்தினர். இந்த ஆண்டும் அவர்கள் தான் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள்.
ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மிரட்டுவார்கள். இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி வலுமிக்கதாக திகழ்வதால் சென்னை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல்.-ல் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் மும்பையும், 11-ல் சென்னையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு மும்பையுடன் மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியது. இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்ததும் அடங்கும்.
கடந்த சீசனில் அடைந்த தோல்விகளுக்கு இந்த ஆண்டு வட்டியும், முதலுமாக முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 6 மாதங்கள் போட்டிகள் இன்றி முடங்கிய பெரும்பாலான வீரர்கள் புத்துணர்ச்சியுடன் துடிப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குதூகலப்படுத்த காத்திருப்பதால் அடுத்த 2 மாதங்களுக்கு இனி ‘சரவெடி’ தான்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, மிட்செல் சான்ட்னெர் அல்லது இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர்.
மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், மெக்லெனஹான் அல்லது பேட்டின்சன் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கேப்டன் டோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
அபுதாபி:
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேப்டன் டோனியின் பயிற்சி முறை, தயாரான விதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் இருக்கிறார். புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார். அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் எங்களது பயிற்சி சிறப்பாக தொடங்கவில்லை. இருப்பினும் அமைதியுடன் செயல்பட்டு நிலைமையை நன்றாக சமாளித்து இருக்கிறோம்.
எப்போதுமே தொடரின் முதல் ஆட்டம் பதற்றமும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும். அதுவும் சென்னை-மும்பை ஆட்டம் என்றால் நெருக்கடி அதிகமாகிவிடும். ஆனால் அதை அனுபவித்து, ரசித்து விளையாடுவோம்.
இந்த ஐ.பி.எல். போட்டியை வித்தியாசமான வியூகங்களுடன் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. உள்ளூர் மைதானத்திற்குரிய சாதகமான விஷயங்கள் என்று எதுவும் இந்த முறை இருக்காது. எல்லாமே வெளியூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் போன்று தான் இருக்கும். 3 மைதானங்களிலும் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு தக்கபடி சரியான கலவையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது முக்கியம். இதுதான் ஒவ்வொரு அணிகளுக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு பிளமிங் கூறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார்.
டோக்கியோ:
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது டோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஓய்வு பெற்று விட்டார். எனினும், ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது, டோனி ஐ.பி.எல். தொடரில் வெற்றிகளை குவிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். சுமார் 438 நாட்களுக்கு பிறகு டோனி நாளை கிரிக்கெட் களம் காண உள்ளார்.
ஐ.பி.எல். வரவலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை அணி தான் என்றும் டோனி 4வது இடத்தில் களமிறங்கினால் அதிக ரன்களை குவிப்பது உறுதி என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நாளை நடைபெறும் முதல் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி சார்பில் டோனி விளையாடி அசத்த உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பல தடைகளை தாண்டி நாளை (இன்று) தொடங்குகிறது. ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது ஆரம்பித்திலேயே பட்டைய கிளப்ப வேண்டும் என நிகழ்ச்சியாளர்கள் விரும்புவார்கள். அதுபோலதான் ஐபிஎல் நிர்வாகம் விரும்ப அதற்கு ஏற்ப அமைந்ததுதான் ஐபிஎல் ‘எல் கிளாசிகோ’.
‘எல் கிளாசிகோ’ என்றால் என்ன எனப் பார்க்கிறீர்களா?. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் லா லிகா கால்பந்து லீக்கில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிதான் எல் கிளாசிகோ. உலகம் முழுவதும் இந்த போட்டிக்கென தனி ரசிகர்கள் பாட்டாளமே உண்டு.
அது போலத்தான் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி. ரசிகர்கள் போட்டி நடக்கும் நேரத்தில் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தை ரசிக்க தொடங்கி விடுவார்கள்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தது குறித்து ஆராய்வோம்.
இரண்டு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. மற்ற அணிகளை வந்து பார் என்று மார்தட்டும் சென்னை அணியால் மும்பை அணிக்கெதிராக மட்டும் அடிபணிந்து விடுகிறது. இதுவரை 28 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் 17 முறை மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. 11 முறைதான் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 2013, 2015, 2019 இறுதிப் போட்டிளும் அடங்கும்.
கடந்த சீசனில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியுள்ளது. இந்த நான்கிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. குவாலிபையர் 1-ல் குறைந்த ரன்கள் அடித்து, மும்பையை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
ஒட்டுமொத்த தோல்விக்கும் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழிதீர்க்க துடிக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதார் ஜாதவ், ஜடேஜா, எம்.எஸ். டோனி, டு பிளிஸ்சிஸ், வெயின் பிராவோ போன்றோர் பேட்டிங்கில் அசத்தக்கூடியர்.
கடந்த சீசனில் ஷேன் வாட்சன் தொடக்கத்தில் சொதப்பினார். போட்டிகள் செல்ல செல்ல அதிரடியை வெளிப்படுத்தினார். அம்பதி ராயுடுக்கு 2018 சீசன் போன்று கடந்த சீசன் அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சிறப்பான விளையாடததால் மிடில் ஆர்டர் வரிசைக்கு இறக்கப்பட்டார். அதன்பின் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஜோடி அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றது.
சிறப்பான தொடக்கம் கொடுக்கப்பட்டால் தல டோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடுவார். இதனால் முதல் மூன்று பேர் குறிப்பிடத்தகுந்த ரன்கள் அடித்தால் சென்னை அணிக்கு பிரச்சினை இருக்காது.
சின்ன தல ரெய்னா இல்லாதது சென்னைக்கு மிப்பெரிய இழப்பாகும். சுழற்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த ரெய்னா இடத்தை நிரப்புவது யார்? என்பதை பொறுத்துதான் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.
வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஹசில்வுட், சாம் கர்ரன், வெயின் பிராவோ, கேம். எம். ஆசிஃப் போன்ற வீரர்களை கொண்டுள்ளது. தீபக் சாஹர் தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசக்கூடியர். கடந்த சீசனில் 17 போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். வெயின் பிராவோ மிடில் ஓவர்களை பார்த்துக் கொள்வார். இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக அமைந்து விட்டால் வேகப்பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருக்காது.
சுழற்பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் அசத்திய ஆர். சாய் கிஷோர் உள்ளனர். ஹர்பஜன் சிங் இல்லாதால் இம்ரான் தாஹிர்தான் சுழற்பந்து வீச்சு யுனிட்டை வழிநடத்திச் செல்வார். கடந்த சீசனில் இம்ரானி தாஹிர் 17 போட்டிகளில் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார். ஒரு ஓவருக்கு 6.69 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, சாய் கிஷோர் ஆகிய மூன்று பேரில் இரண்டு பேருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு. சுரேஷ் ரெய்னா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். தற்போது ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு பந்து வீச்சிலும் சற்று பலம் குறைந்து காணப்படும்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரராக குயின்டன் டி காக், ரோகித் சர்மா ஆகியோரை களம் இறக்க இருக்கிறது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த கிறிஸ் லின்னும் வந்து சேர்ந்துள்ளார். இந்த மூன்று பேருமே மேட்ச் வின்னர். போட்டி நடக்கும் அன்றைய தினம் அவர்களுடையதாக இருந்தால் தனி நபராக அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று விடுவார்கள். இதனால் தொடக்க வீரர்களுக்கு பிரச்சினை இல்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் எப்போதுமே சிறப்பாக விளையாடியது கிடையாது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாதித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த இரண்டு மோசமான சாதனைகளையும் தவிர்க்க நினைக்கும்.
மிடில் ஆர்டர் வரிசையில் சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் சிறப்பாக விளையாடும் போட்டியில் வெற்றியை தேடிக்கொடுத்து விடுவார்கள்.
சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், குருணால் பாண்ட்யா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். பெரும்பாலும் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்க வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சில் பும்ரா, மிட்செல் கிளேனகன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, டிரென்ட் போல்ட், நாதன் கவுல்டர்-நைல் போன்றோர் உள்ளனர். பும்ரா அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். மலிங்கா இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு என்பதில் எந்த சந்தேகம் இல்லை. மலிங்கா இடத்தை டிரென்ட் போல்ட் நிரப்புவார் என மும்பை இந்தியன்ஸ் நம்புகிறது.
மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐ.பி.எல். போட்டி நாளை மறுதினம் தொடங்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தமிழக ரசிகர்கள் ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் 8 நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையை மையமாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் கலரை பிடித்தமானதாக கொண்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே எம்எஸ் டோனி கேப்டனாக உள்ளார். இந்த அணிக்கு உலகளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
சென்னையை தவிர்த்து மற்ற அணிகளுக்கான சொந்த மைதானங்களில் விளையாடும்போதும் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த அணிக்கு பிடித்தமான கலர் ‘ப்ளூ’ ஆகும். ஹிட்மேன் ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் சென்னையை போன்று அதிக ரசிகர்களை கொண்டது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் 13-வது சீசன் நாளைமறுதினம் (சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ என்ற ஹேஸ்டேக்கை தமிழ்நாடு, இந்தியா அளவில் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யாவின் வொர்க் லோடு குறித்து மனதில் வைப்பது அவசியம், கிறிஸ் லின் தொடக்க வீரராக களம் இறங்கமாட்டார் என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு சிறந்த பினிஷராக உள்ளனர். கடைசி நேரத்தில் ஒரு ஓவருக்கு 20 ரன்களுக்கு மேல் தேவை என்றாலும் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கக்கூடிய தகுதி பெற்றவர்கள். மேலும், பந்து வீச்சிலும் அசத்தக்கூடியவர்கள்.
ஹர்திக் பாண்ட்யா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் களம் இறங்க இருக்கிறார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் வொர்க் லோடு குறித்து மனதில் வைப்பது அவசியம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்ட்யா காயத்திற்குப் பிறகு விளையாட வந்துள்ளார். நாங்கள் அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வலைப் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பாண்ட்யா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இது அணிக்கு அதிக எனர்ஜியை கொண்டு வரும்.
ஹர்திக் பாண்ட்டியாவை நாங்கள் முன்னதாக மாறுபட்ட ரோலில் பயன்படுத்தினோம். அதேபோன்றுதான் தற்போதும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் மற்ற சில வீரர்களையும் நாங்கள் அதில் ஈடுபடுத்த முடியும். அதற்கான வாய்ப்பு வரும்போதெல்லாம், நாங்கள் அவர்களிடம் போட்டியை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்வோம்.
இது ஹர்திக் பாண்ட்யா மட்டும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இது அவரின் பொறுப்புகளில் ஒன்று. ஆகவே, எங்கள் முகாமில் உள்ள வீரர்களை மாறுபட்ட வழிகளில் பயன்படுத்தி சவாலான ரோலை செய்ய வைக்க முயற்சி செய்ய விரும்புகிறோம். அதை நாங்கள் தொடர்ச்சியாக செய்ய இருக்கிறோம்’’ என்றார்.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 சீசன் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 8 அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் கடந்த மாதம் 21-ந்தேதி, 22-ந்தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்குள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் ஆறு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பின் மூன்று கொரோனா பரிசோதனைக்குப்பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய வெயின் பிராவோ, பொல்லார்டு, அந்த்ரே ரஸல், ரஷித் கான், இம்ரான் தாஹிர் உள்பட ஐபிஎல்-லில் இடம் பிடித்துள்ள வீரர்கள் துபாய் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடர் முடிந்த கையோடு ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள இரண்டு அணிகளின் 21 வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் முதல் ஒருவார போட்டிகளில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே அவர்கள் இங்கிலாந்தில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் இருப்பதால் மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியது. இந்நிலையில் 36 மணி நேர கோரன்டைன் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றிரவு ஐக்கிய அரபு அமீரகம் சென்றடையும் இருநாட்டு வீரர்களும் 36 மணி நேரத்திற்குப்பிறகு நேரடியாக போட்டியில் கலந்து கொள்வார்கள்.
ரியல் மாட்ரிட் அணிக்கு முக்கியமான கட்டத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்த காரேத் பேலே டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்கிறார்.
கால்பந்து போட்டியில் முக்கிய வீரர்களில் ஒருவராக வேல்ஸ் நாட்டின் காரேத் பேலே-வையும் கருதலாம். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய எதிரி அணியான பார்சிலோனாவுக்கு எதிராக 251 போட்டிகளில் விளையாடி 105 கோல்கள் அடித்துள்ளார். 68 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார். இவருடைய துணையுடன் 13 கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ளது. இதில் நான்கு சாம்பியன்ஸ் லீக், இரணடு லா லிகா, ஒரு கோபா டெல் ரே ஆகியவை அடங்கும்.
காரேத் பேலே கடந்த சில மாதங்களுக்கு மேலான அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால் களத்தில் இறங்கும் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்க வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு செல்ல இருக்கிறார். அவருக்கு வருடத்திற்கு 35.59 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.






