என் மலர்
விளையாட்டு
- இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
இது ஓர் அற்புதமான உணர்வு. இந்தியாவிற்கு நான் கொடுக்கும் சரியான பிறந்தநாள் பரிசு இது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.
இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கேப்டன் சூர்யகுமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
- டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தனர்.
துபாய்:
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது..
எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்தனர். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இந்திய வீரர்கள் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு அணி வீரர்களும் கை குலுக்காததால் No Handshake எனும் வார்த்தை டிரெண்டாகி வருகிறது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்தது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இறுதிக்கு முன்னேறியது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடி உடன் மோதியது.
இதில் சாத்விக்-சிராக் ஜோடி முதல் செட்டை 21-19 என போராடி கைப்பற்றியது.
இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய தைவான் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-17 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
- 11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது.
- சூப்பர் 4 சுற்றின் முடிவில் சீனா, இந்தியா ஆகியவை முதல் இரு இடங்களைப் பிடித்தன.
ஹாங்சோவ்:
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் சீனா, இந்தியா ஆகியவை முதல் இரு இடங்களைப் பிடித்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனா மற்றும் இந்தியா மோதின
தொடக்க முதலே அதிரடியாக ஆடிய சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்தில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
- 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
- ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நாட்டிங்காம்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருது பில் சால்டுக்கு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்தது.
- இந்தியாவின் லக்ஷயா சென் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் லீ ஷிபெங் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய லீ ஷிபெங் 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். லக்ஷயா சென் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.
- இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறியது.
இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும், சஹீ்ப்சதா ஃபர்ஹான் 40 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரப் 11 ரன்களிலும், சுபியாஜ் முக்கீம் 10 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.
குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, பும்ரா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.
இதன்மூலம், 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்கை நோக்கி இந்தியா பேட்டி செய்ய களமிறங்குகிறது.
- இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா, தலா ஒரு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.
அட்டகாசமான வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கும் இந்திய அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணி பந்து வீச,பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.
- டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
- தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.
கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.






