என் மலர்
விளையாட்டு
- ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற் எட்வினா ஜேசன்.
- எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி பஹ்ரைனில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய வீராங்கனை எட்வினா ஜேசன் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் பந்த தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் பெண்கள் மெட்லி ரிலே போட்டியில் அவரது இறுதி ஓட்டம் இந்திய அணியை வெள்ளிப் பதக்கத்திற்கு வெல்ல உதவியது.
இந்நிலையில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை இன்று வழங்கினோம்.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம். அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டியதாக உதயநிதி கூறினார்.
- முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
- 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 19 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கில்- சூர்யகுமார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார்.
- அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் களமிறங்கிய இருவரில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசி அசத்தினார்.
இந்த தொடரின் தொடர் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஐசிசி-யின் பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். முதன் முறையாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் தனது 38 வயதில் (38Y, 73D) டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் No.1 இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோகித் (38Y 182D) ODI பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை தன்வசமாக்கியுள்ளார்.
மேலும் அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அவர் 268 போட்டிகளில் விளையாடி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் குறைந்த போட்டியில் நம்பர் ஒன் இடத்தை எம் எஸ் தோனி பிடித்துள்ளார். அவர் வெறும் 38 போட்டிகள் விளையாடிய போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த வரிசையில் அடுத்ததாக சுப்மன் கில் (41 போட்டி), சச்சின் டெண்டுல்கர் (102 போட்டி), விராட் கோலி (112), ரோகித் சர்மா (268 போட்டி) ஆகியோர் உள்ளனர்.
- கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார்.
- காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை அனாஹெத் வீழ்த்தியுள்ளார்.
கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் அனாஹெத், மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தின் டின்னே கில்லிஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அனாஹெத் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட்களில் கில்லிஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் 43-வது இடத்தில் உள்ள வீராங்கனை அனாஹெத் 7-வது இடத்தில் உள்ள வீராங்கனையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் முதல் 10 வீராங்கனைக்கு எதிரான முதல் வெற்றியாகும்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 20-ம் நிலை வீராங்கனை பிரான்சின் மெலிசா ஆல்வ்ஸையும் இவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார்.
- சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் ஒரு அரை சதம் விளாசினார். இதனால் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.
அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
- சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன
- இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
- 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் நேற்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சத் பூஜையின் போது ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமாரின் தாயார் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் நடந்த டி20 தொடரில் 2 போட்டிகள் மழையால் தடைப்பட்டது.
- ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 தொடரில் 2 போட்டிகள் மழையால் தடைப்பட்டது. ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவரில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓவர்டென் 42 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 33.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 56, ரவீர்ந்திரா 54 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 1-ந் தேதி நடக்கவுள்ளது.
- சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.
அந்த வகையில் 2012 - டிரா 1-1, 2016 - இந்தியா வெற்றி 3-1, 2018 - டிரா 1-1, 2020-ல் இந்தியா வெற்றி 2-1 என வரலாறு உள்ளது. இந்த வரலாறு தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.
- முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 139 ரன்னில் சுருண்டது.
ராவல்பிண்டி:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி லாகூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
- ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது.
- இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
வாஷிங்டன் டி.சி.
கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட மெலிசா புயல் ஜமைக்காவை கடுமையாக தாக்கி உள்ளது.
ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜமைக்காவை சக்திவாய்ந்த மெலிசா புயல் புரட்டிப் போட்டதையடுத்து Pray For Jamaica எனப் அந்நாட்டின் தடகள வீரர் உசேன் போல்ட் பதிவிட்டுள்ளார்.
இந்த புயலால் அவரது வீடு சேதமாகியது குறிப்பிடத்தக்கது.
- இதன் ஆண்கள் பிரிவில் அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார்.
- பெண்கள் பிரிவில் யாஷினி (எஸ்.கே.அகாடமி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னை:
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் 7-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதன் ஆண்கள் பிரிவில் அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 11-9, 11-5, 11-7, 12-10 என்ற கணக்கில் உமேசை தோற்கடித்தார். பெண்கள் பிரிவில் யாஷினி (எஸ்.கே.அகாடமி) 9-11, 11-6, 12-10, 11-9, 11-6 என்ற கணக்கில் நித்யா ஸ்ரீயை (சென்னை அச்சீவர்ஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மற்ற பிரிவுகளில் பாலமுருகன், அனன்யா (19 வயதுக்குட்பட்டோர்) அக்ஷய் பூசன், அனன்யா (17), தன்மய் ராகவ், வர்னிகா (15), அஸ்வஜித், அம்பதி பூஜா (13), சித்தார்த் ஆதித்யன், பிரத்திகா (11), விக்னேஸ்வரன் (வெடரன்ஸ்), அருண்குமார் (கார்ப்பரேட்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.






