என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஷ்ரேயாஸ் நலம் பெற பிராத்தனை செய்த சூர்யகுமாரின் தாயார்- வைரலாகும் வீடியோ
    X

    ஷ்ரேயாஸ் நலம் பெற பிராத்தனை செய்த சூர்யகுமாரின் தாயார்- வைரலாகும் வீடியோ

    • 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் நேற்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சத் பூஜையின் போது ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமாரின் தாயார் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×