என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: யாஷினி, அபினந்த் சாம்பியன்
    X

    மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: யாஷினி, அபினந்த் சாம்பியன்

    • இதன் ஆண்கள் பிரிவில் அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார்.
    • பெண்கள் பிரிவில் யாஷினி (எஸ்.கே.அகாடமி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சென்னை:

    தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் 7-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இதன் ஆண்கள் பிரிவில் அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 11-9, 11-5, 11-7, 12-10 என்ற கணக்கில் உமேசை தோற்கடித்தார். பெண்கள் பிரிவில் யாஷினி (எஸ்.கே.அகாடமி) 9-11, 11-6, 12-10, 11-9, 11-6 என்ற கணக்கில் நித்யா ஸ்ரீயை (சென்னை அச்சீவர்ஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    மற்ற பிரிவுகளில் பாலமுருகன், அனன்யா (19 வயதுக்குட்பட்டோர்) அக்ஷய் பூசன், அனன்யா (17), தன்மய் ராகவ், வர்னிகா (15), அஸ்வஜித், அம்பதி பூஜா (13), சித்தார்த் ஆதித்யன், பிரத்திகா (11), விக்னேஸ்வரன் (வெடரன்ஸ்), அருண்குமார் (கார்ப்பரேட்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    Next Story
    ×