என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 வெள்ளி பதக்கம் வென்ற எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய உதயநிதி
- ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற் எட்வினா ஜேசன்.
- எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி பஹ்ரைனில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய வீராங்கனை எட்வினா ஜேசன் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் பந்த தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் பெண்கள் மெட்லி ரிலே போட்டியில் அவரது இறுதி ஓட்டம் இந்திய அணியை வெள்ளிப் பதக்கத்திற்கு வெல்ல உதவியது.
இந்நிலையில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை இன்று வழங்கினோம்.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம். அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டியதாக உதயநிதி கூறினார்.






