என் மலர்tooltip icon

    உலகம்

    300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்- உசேன் போல்ட் உருக்கம்
    X

    300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்- உசேன் போல்ட் உருக்கம்

    • ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது.
    • இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

    வாஷிங்டன் டி.சி.

    கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட மெலிசா புயல் ஜமைக்காவை கடுமையாக தாக்கி உள்ளது.

    ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஜமைக்காவை சக்திவாய்ந்த மெலிசா புயல் புரட்டிப் போட்டதையடுத்து Pray For Jamaica எனப் அந்நாட்டின் தடகள வீரர் உசேன் போல்ட் பதிவிட்டுள்ளார்.

    இந்த புயலால் அவரது வீடு சேதமாகியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×