என் மலர்
விளையாட்டு


சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
சென்னையில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகாக் 39 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி), போல்லார்ட் 22 பந்தில் 35 ரன்னும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முஜிபூர் ரகுமான், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 151 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. அந்த அணி 19.4 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் 13 ரன்னில் தோல்வியை தழுவியது.
தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 22 பந்தில் 43 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் வார்னர் 34 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், ராகுல் சாகர் தலா 3 விக்கெட்டும், பும்ரா, குர்னால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஐதராபாத் அணியின் சோகம் தொடர்கிறது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், பெங்களூரிடம் 6 ரன்னிலும், தோற்று இருந்தது.
ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான ஜானி பேர்ஸ்டோவ் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.
ஐ.பி.எல். போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்த 13-வது வீரர் பேர்ஸ்டோவ் ஆவார். இந்த சீசனில் முதல் வீரராக அவர் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறி இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்த வீரர்கள் வருமாறு:-
1.முசாவிர் கோட்டே (மும்பை)-2008.
2.மிஸ்பா-உல்-ஹக் (பெங்களூர்)-2008.
3.அசுதோகர் (ராஜஸ்தான்)-2009.
4.ஜடேஜா (சென்னை) -2012.
5.சவுரப் திவாரி (பெங்களூர்) -2012.
6.யுவராஜ் சிங் (ஐதராபாத்)- 2016.
7.தீபக் ஹூடா (ஐதராபாத்) -2016.
8. வார்னர் (ஐதராபாத்) -2016.
9.ஜேக்சன் (கொல்கத்தா) -2017.
10.ரியான் பரங் (ராஜஸ்தான்) -2019.
11.ஹர்த்திக் பாண்ட்யா (மும்பை) -2020.
12. ரஷீத்கான் (ஐதராபாத்) -2020.
13.பேர்ஸ்டோவ் (ஐதராபாத்) -2021.
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐதராபாத்தை 6 ரன்னிலும் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.
கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை விழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்னில் தோற்றது. அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 14-ல் பெங்களூர் 12-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் தோற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது டெல்லியா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப், தீபக் சாஹரின் அபார பந்துவீச்சுக்கு (4 விக்கெட்) ஈடுகொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடிய 200-வது ஆட்டம் இதுவாகும். அதாவது ஐ.பி.எல்.-ல் 176 ஆட்டம், சாம்பியன்ஸ் லீக்கில் 24 ஆட்டம் என்று மொத்தம் 200 ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று 39 வயதான டோனியிடம் கேட்ட போது, ‘மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். மேலும் டோனி, ‘இது ஒரு நீண்ட பயணம். வித்தியாசமான சூழல், வெவ்வேறு நாடுகள் என்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு பயணம். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து எனது ஐ.பி.எல். பயணம் தொடங்கியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, துபாயில் எல்லாம் விளையாடி விட்டு மீண்டும் தற்போது சொந்த நாட்டில் விளையாடுகிறேன். ஆனால் எங்களுக்கு மும்பை, சொந்த ஊர் மைதானமாக அமையும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

அதே சமயம் தற்போதைய மும்பை வான்கடே ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எல்லாமே போட்டிக்குரிய தினத்தில் சீதோஷ்ண நிலையை பொறுத்தது. இன்றைய ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் பந்தின் நகர்வு தன்மை நன்றாக இருந்தது. ஆனால் அதிக அளவில் ‘ஸ்விங்’ ஆகவில்லை. பனிப்பொழிவு இல்லாததால் பந்து வீச்சு எடுபட்டது’ என்றார்.
சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கேப்டன் டோனிக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘டோனியின் நீண்ட பயணத்தை பாராட்டியாக வேண்டும். 200 ஆட்டங்களில் ஆடியுள்ள போதிலும், இன்னும் போட்டியிலும், அணிக்காகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளார். சென்னை அணி வளர்ந்து நிற்கிறது. அதோடு சேர்ந்து டோனியும் வளர்ந்துள்ளார். அவருக்கும் அணிக்கும் இடையிலான உறவு அருமையானது. கன கச்சிதமானது. சென்னை சூப்பர் கிங்சின் இதயதுடிப்பாக டோனி இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.


புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இதுவரை 6 முறை 20ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும் (2012, 2016), இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டி நடைபெறும் இடங்களும், தேதி விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறும் இடங்களின் விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.ஐ.) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 இடங்களில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திலும் 20 ஒவர் உலக கோப்பை போட்டி நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, தர்மசாலா ஆகிய இடங்களிலும் போட்டி நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில்தான் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்கிறது. இதற்கான விசா அனுமதியை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கேட்டு இருந்தது.
இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
“பாகிஸ்தான் வீரருக்கான விசா பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எல்லை தாண்டி அனுமதி கிடைக்குமா? என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை” என்றார்.






