என் மலர்

  செய்திகள்

  பும்ரா, ட்ரென்ட் போல்ட்
  X
  பும்ரா, ட்ரென்ட் போல்ட்

  பும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான வெற்றிக்கு பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோரின் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது முக்கிய காரணமாகும்.
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 150 ரன்கள் அடித்தது.

  பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. முதலில் பேர்ஸ்டோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐதராபாத் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், டெத் ஓவர்களில் ட்ரென்ட் போல்ட், பும்ரா சிறப்பாக பந்து வீச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 137 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா நான்கு ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். போல்ட் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

  பும்ரா குறித்து ட்ரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘பும்ரா போன்ற பந்து வீச்சாளர் ஒருவர் செயல்படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த ஸ்பெல் முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்பதில், மிகவும் தெளிவாக உள்ளார்.

  ஆனால், டெத் ஓவர்களில் என்னுடைய தனிப்பட்ட முறையில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் என்னுடைய வேலையை மிகவும் எளிதாக்கி விடுகிறார். சரியான அணியுடன் இந்தத் தொடர் முழுவதும் இந்த உத்வேகத்தை அப்படியே கொண்டு செல்வோம் என்று நம்புகிறோம்’’ என்றார்.
  Next Story
  ×