என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 92 ரன்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் சாதனைப் பட்டியலில் தவான் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 195 ரன்கள் அடித்தது. பின்னர் சேஸிங் செய்த டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தவான் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    பஞ்சாப் அணிக்கெதிராக 92 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    விராட் கோலி

    டேவிட் வார்னர் 49 அரைசதம், 4 சதம் என 53 முறை 50-க்கும் மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். தவான் 43 அரைசதம், 2 சதம் என 45 முறை அடித்து 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 39 அரைசதம், 5 சதம் என 44 முறை 50-க்கு மேல் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 39 அரைசதம், 3 சதத்துடன் 42 முறை அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.

    ரெய்னா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
    சென்னை ஆடுகளத்திற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டனர் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பை வான்கடே, சென்னை சேப்பாக்கம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடக்கிறது.

    ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் சென்னையி சேப்பாக்கத்திலும் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்திலும் விளையாடி வருகின்றன.

    மும்பை வான்கடே மைதான ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவும், சென்னை மைதான ஆடுகளங்கள்  பேட்டிங் செய்ய கடினமாகவும் உள்ளது. சென்னை ஆடுகளம் மிகமிக ஸ்லோவாக இருப்பதால் கடைசி 10 ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சோதனையாக இருந்து வருகிறது.

    மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை 150 ரன்களுக்கு கீழ் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளது இந்த நிலையில் சேப்பாக்கம் ஆடுகளங்கள் விளையாட முடியாதது அல்ல என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்த்தனே கூறுகையில் ‘‘உங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுகளங்கள் தேவை என்பது நியாயமானது அல்ல என நினைக்கிறேன். ஏன் ஐபிஎல் போட்டி சுவாரஸ்யமானது என்றால், போட்டி நடைபெறும்  ஒவ்வொரு இடமும் வித்தியாசமாக இருப்பதால் அது சமமான போட்டியாக அமைகிறது.

    சேப்பாக்கம் ஆடுகளம்

    சேப்பாக்கம் ஆடுகளங்கள் சற்று ஸ்லோவாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் 150 அல்லது 160 ரன்கள் கடந்த  சில போட்டிகளில் அடித்துள்ளோம்.

    அவைகள் விளையாட முடியாத வகையிலான ஆடுகளங்கள் இல்லை. சரியான போட்டிக்கான ஆடுகளங்கள். தொடர்ச்சியாக எங்களுடைய அணுகுமுறை சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், சென்னைக்கு ஏற்ப எங்கள் வீரர்கள் மாறிக்கொண்டனர். சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம். போட்டியில் அது ஒரு பகுதி’’ என்றார்.
    முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

    சென்னை:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். 49 வயதான அவர் சுழற்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார்.

    டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    முரளிதரன் தற்போது ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருந்து வருகிறார். அவரது மனைவி மதிமலர் சென்னையை சேர்ந்த டாக்டர் ஆவார்.

    இந்தநிலையில் சென்னையில் தங்கி இருந்த முரளிதரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர் நடத்திய பரிசோதனை அடிப்படையில் அவருக்கு இருதய ரத்த நாளத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களை தவறாக கேஎல் ராகுல் கையாண்டார் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 195 ரன்கள் விளாசியது. இருந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் 49 பந்தில் 92 ரன்கள் விளாச 18.2 ஓவரிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    195 ரன்கள் அடித்தும் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு பந்து வீச்சாளர்களை கேஎல் ராகுல் தவறாக கையாண்டதே காரணம் என ஆஷிஷ் நெஹ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘டி20 விளையாட்டில் ஒவ்வொரு வீரர்களும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் சிறப்பாக பந்து வீச வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும். சிறப்பாக பீல்டிங் செய்ய வேண்டும் என விரும்புவீர்கள்.

    உங்களுக்கு நல்லது அல்லது கெட்ட நாட்கள் இருக்கும். விளையாட்டில் இது பொதுவான விசயம்தான். ஆனால் குறைந்த பட்சம், அதை உங்களால் செய்ய முடியும் என்ற  குறிப்பிட்ட விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்.

    அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களுக்கு தொடக்கத்திலேயே ஓவர்கள் வழங்கக் கூடாது. மெரிடித் 10 ஓவர்களுக்கு பின் வந்தார். முதல் ஓவரிலேயே ஸ்மித்தை அவுட்டாக்கினார். ஷாமி கூட நான்கு ஓவர்களை நான்கு மாறுப்பட்ட ஸ்பெல்லில் வீசினார். அர்ஷ்தீப் உடன் போட்டியை தொடங்க தயார் செய்து இருந்தனர். ஆகவே, போட்டியை நீங்கள் தொடக்கத்தில் கட்டுப்பாட்டில் வைக்க இருந்தீர்களா? அல்லது போட்டியின் இறுதியிலா?.

    சில யுக்திகளை பயன்படுத்துவதற்கான கேஎல் ராகுல் கூட தொடக்க வீரராக களம் இறங்காமல் இருக்கலாம். மாறாக சக்சேனா, ஷமி அல்லது ஷாருக்கான என யாரை வேண்டுமென்றாலும் களம் இறக்கலாம். ஆகவே, கேப்டனாக கேஎல் ராகுல், அனில் கும்ப்ளே உடன் உட்கார்ந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஏனென்றால், ஒரு யுக்திடன் போட்டியில் களம் இறங்க வேண்டும். டெல்லிக்கு எதிரான அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    பந்து வீச்சு திட்டத்தில் குழப்பம் அடைந்து விட்டனர். நான்கு வெவ்வேறு பந்து வீச்சாளருடன் தொடங்கினர். பெரும்பாலும் குறைபாடு உள்ள அணிகளே இவ்வறு செயல்படும். ஆகவே, மிகப்பெரிய தவறை செய்து விட்டனர்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது.
    சென்னை:

    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

    மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.

    டி வில்லியர்ஸ்

    தோல்வி அடைந்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது. சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியே என்றார்.
    இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    அவருடன் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
    பிரித்வி ஷா, ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட்டுக்கு 62 பந்தில் 100 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 36 பந்தில் 69 ரன்னில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 12.4 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

    அரை சதமடித்த மயங்க் அகர்வால்

    கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

    இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் இறங்கினர்.

    இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 59 ஆக  இருக்கும்போது பிரித்வி ஷா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தவான் அரை சதமடித்து அசத்தினார். அவர் 49 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரியுடன் 92 ரன் எடுத்து அவுட்டானார். அப்போது டெல்லி அணி 3 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் ரிஷப் பண்டுடன், ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை நிதானமாக சேர்த்தனர். கடைசி 4 ஓவர்களில் டெல்லி வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது.

    17வது ஒவரில் டெல்லி அணிக்கு ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் கிடைத்தது. 18வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

    இறுதியில், டெல்லி அணி 18.2 ஓவரில் 198 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. ஸ்டோய்னிஸ் 27 ரன்களுடனும், லலித் யாதவ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    மயங்க் அகர்வால் 69 ரன்களும், கேஎல் ராகுல் 61 ரன்கள் அடிக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது.
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் அடித்த பஞ்சாப், முதல் விக்கெட்டுக்கு 62 பந்தில் 100 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 25 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 69 ரன்னில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 12.4 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் ரன் வேகத்தில் தளர்வு ஏற்பட்டது. கேஎல் ராகுல் 45 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

    ரபடா, கிறிஸ் வோக்ஸ்

    கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
    மிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
    ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார். 
    18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.

    205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ்  ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். என்றாலும் ராணா 11 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், ஷுப்மான் கில் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

    3  விக்கெட்வீழ்த்திய ஜேமிசன்

    அடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 25, மோர்கன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினர். ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த தவறிவிட்டனர். அந்த்ரே ரஸல் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது.

    ஆர்சிபி அணியின் ஜேமிசன் 3 விக்கெட்டும், சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    கடந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுள்ளோம், முதல் ஆறு ஓவர் மிகவும் முக்கியமானது என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் மும்பையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. தீபக் ஹூடா, 5. நிக்கோலஸ் பூரன், 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. சக்சேனா, 9. முகமது ஷமி, 10. மெரிடித், 11. அர்ஷ்தீப்

    டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி:

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. லலித் யாதவ், 7. கிறிஸ் வோக்ஸ், 8. அஷ்வின், 9. ரபடா,  10.  அவேஷ்  கான், 11. லுக்மான் மெரிவாலா.
    விராட் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் மேக்ஸ்வெல் 78 ரன்களும், ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் விளாசினர்.
    ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 9 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்கோர் 11.1 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் வெளியேறினார்.

    டி வில்லியர்ஸ்

    அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். இவரும் மேக்ஸ்வெல்லும் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரில் துவம்சம் செய்துவிட்டார். 18-வது ஓவரில் 17 ரன்களும், 19-வது ஓவரில் 18 ரன்களும், கடைசி ஓவரில் 21 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

    டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.
    மெஸ்சி இரண்டு கோலும், கிரிஸ்மான் மற்றும் டி ஜாங் தலா ஒரு கோலும் அடிக்க அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

    இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68-வது மற்றும் 72-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 4-0 என முன்னிலைப் பெற்றது.

    மெஸ்சி

    13 நிமிடத்திற்குள் நான்கு கோல் அடித்து அத்லெடிக் கிளப்பிற்கு அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    ×