search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயவர்த்தனே
    X
    ஜெயவர்த்தனே

    சென்னை ஆடுகளங்கள் விளையாட முடியாதது அல்ல: ஜெயவர்த்தனே

    சென்னை ஆடுகளத்திற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டனர் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பை வான்கடே, சென்னை சேப்பாக்கம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடக்கிறது.

    ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் சென்னையி சேப்பாக்கத்திலும் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்திலும் விளையாடி வருகின்றன.

    மும்பை வான்கடே மைதான ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவும், சென்னை மைதான ஆடுகளங்கள்  பேட்டிங் செய்ய கடினமாகவும் உள்ளது. சென்னை ஆடுகளம் மிகமிக ஸ்லோவாக இருப்பதால் கடைசி 10 ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சோதனையாக இருந்து வருகிறது.

    மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை 150 ரன்களுக்கு கீழ் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளது இந்த நிலையில் சேப்பாக்கம் ஆடுகளங்கள் விளையாட முடியாதது அல்ல என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்த்தனே கூறுகையில் ‘‘உங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுகளங்கள் தேவை என்பது நியாயமானது அல்ல என நினைக்கிறேன். ஏன் ஐபிஎல் போட்டி சுவாரஸ்யமானது என்றால், போட்டி நடைபெறும்  ஒவ்வொரு இடமும் வித்தியாசமாக இருப்பதால் அது சமமான போட்டியாக அமைகிறது.

    சேப்பாக்கம் ஆடுகளம்

    சேப்பாக்கம் ஆடுகளங்கள் சற்று ஸ்லோவாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் 150 அல்லது 160 ரன்கள் கடந்த  சில போட்டிகளில் அடித்துள்ளோம்.

    அவைகள் விளையாட முடியாத வகையிலான ஆடுகளங்கள் இல்லை. சரியான போட்டிக்கான ஆடுகளங்கள். தொடர்ச்சியாக எங்களுடைய அணுகுமுறை சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், சென்னைக்கு ஏற்ப எங்கள் வீரர்கள் மாறிக்கொண்டனர். சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம். போட்டியில் அது ஒரு பகுதி’’ என்றார்.
    Next Story
    ×