என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    மும்பை:

    கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

     

    முககவசம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக அளவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.

    உங்களது கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    கொரோனா உறுதியான டோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தவர் மகேந்திர சிங் டோனி. அவர் தலைமையில் இந்தியா 2 உலக கோப்பையை வென்றுள்ளது.

    சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் டோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை பான்சிங் டோனி மற்றும் தாயார் தேவகிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து இருவரும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.
    லண்டன்:

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மகுடத்துக்கு மோதுகின்றன.

    இந்த நிலையில் இந்த போட்டி நடப்பதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுவதால் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டை சாராத மற்றவர்கள் இங்கிலாந்துக்கு வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    ஐ.சி.சி.


    ஆனாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உறுதிப்பட கூறியுள்ளது. ‘கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடன் வெற்றிகரமாக நடத்துவது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், மற்ற நாட்டு வாரியங்களும் செய்து காட்டியுள்ளன. அதையே தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறோம். எனவே திட்டமிட்டபடி இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும். இது குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.
    ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது டெல்லி அணி.
    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 1 ரன்னில் வெளியேறினார்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இஷான் கிஷனை 26 ரன்னில் வீழ்ந்தார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்துள்ளது.

    டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டும், அவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 விக்கெட் வீழ்த்திய அமித் மிஷ்ரா

    138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா 7 ரன்ன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஸ்மித் ஷிகர் தவானுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 33 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஒவரில் ஹெட்மயர் பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவும் ஹெட்மயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
    மும்பை இந்தியன்ஸ் 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்த போதிலும், மிஷ்ரா விக்கெட்டுகளை சாய்க்க இறுதியில் 137 ரன்களே அடித்தது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    டி காக் 1 ரன்னில் வெளியேற 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 6.6 ஓவரில் 67 ரன்காக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ரோகித் சர்மா 30 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோரில் மந்தநிலை ஏற்பட்டது. ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார் அமித் மிஷ்ரா. அத்துடன் இஷான் கிஷனை (26 ரன்) 7-வது விக்கெட்டாக வீழ்த்தினார்.

    அமித் மிஷ்ரா

    இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்துள்ளது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். அவேஷ் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சேப்பாக்கத்தில் களம் இறங்குகிறது.
    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி


    மும்பை இந்தியன்ஸ் அணி:

    1. டி காக்,  2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு,  7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. ஜெயந்த் யாதவ், 10. பும்ரா, 11. டிரென்ட் போல்ட்.

    டெல்லி அணி

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவன், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட்,  5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. ஷிம்ரன் ஹெட்மையர், 7. லலித்  யாதவ், 8. அஷ்வின், 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, 11. அவேஷ் கான்.
    முதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.
    பஞ்சாப் அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் உத்வேகத்தை அப்படியே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் வெளிப்படுத்தியது சிஎஸ்கே.

    டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே-வுக்கு மீண்டும் ருத்துராஜ் பேட்டிங்கால் ஒரு ஏமாற்றம். இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என மொயீன் அலி 20 பந்தில் 26 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 17 பந்தில் 33 ரன்களும் எடுத்தனர். பவுண்டரியுடன் போட்டியை தொடங்கிய ருத்துராஜ் 10 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்தது ஏமாற்றம்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், கடைநிலை பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை முடிந்த அளவிற்கு (ரெய்னா 18, அம்பதி ராயுடு 27, டோனி 18, சாம் கர்ரன் 13, பிராவோ 20) கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரமான ஸ்கோர் (188 ரன்கள்) எடுத்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 2-வது பந்து வீசுவது அவ்வளவு எளிதானதல்ல. என்றாலும் சிஎஸ்கே பவுலர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். கடந்த போட்டியில் முதலில் களக்கிய தீபக் சாஹர் பந்து வீச்சில் சற்று சறுக்கல். முதல் ஓவரில் 11 ரன்களும், 2-வது ஓவரில் 8 ரன்களும், 3-வது ஓவரில் 13 ரன்களும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி.

    தீபக் சாஹர் சறுக்கினால் என்ன? நான் இருக்கிறேன் என சுட்டிப்பையன் சாம் கர்ரன் மனன் வோரா (14), சஞ்சு சாம்சன் ஆகியோரை அட்டகாசமாக பந்து வீசி வெளியேற்றி பிள்ளையார் சுழி போட்டார்.

    அச்சுறுத்திய பட்லர் (49), ஷிவம் டுபே ஆகியோரை ஜடேஜா ஒரே ஓவரில் சாய்க்க, ஆட்டம் சிஎஸ்கே பக்கம் 50 சதவீதம் திரும்பியது. டேவிட் மில்லர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் ஆகியோரை மொயீன் அலி அடுத்தடுத்த ஓவரில் வீழ்த்த ராஜஸ்தான் 143 ரன்னில் சரணடைந்தது.

    முதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.

    ருத்துராஜ் கெய்க்வாட் மூன்று போட்டிகளிலும் சொதப்பியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மாற்றப்படலாம். மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் தேவையில்லை, அணியின் ஸ்கோர் உயர்ந்தால் போதும் என ஆடுவது அணிக்கு கூடுதல் பலம். குறிப்பாக மொயீன் அலி, டு பிளிஸ்சிஸ் அதிரடியாக விளையாடுவது சிஎஸ்கே-வுக்கு யானைப்பலம். ரெய்னா, அம்பதி ராயுடு முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டால் சிஎஸ்கே-வுக்கு பேட்டிங்கில் கவலையே இல்லை.

    பந்து வீச்சில் சாம் கர்ரன் பவர்பிளேயில் விக்கெட் கைப்பற்றியது, மிடில் ஓவர் பவுலர்களுக்கு சாதகம். தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகியோரில் யாராவது ஒருவர் பவர்பிளேயில் விக்கெட் வீழ்த்தினால், அதன்பின் சிஎஸ்கே-வை எதிர்த்து ரன்கள் குவிக்க கடினமானதாகிவிடும். டெத் ஓவர்களில் பிராவோ 30 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கமாட்டார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

    ஜடேஜா

    பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஜடேஜா (2), மொயீன் அலி (3) ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருப்பது, இனிமேல் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நம்பிக்கையை தல டோனிக்கு கொடுத்துள்ளது.

    மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இருந்து கொல்கத்தா, பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்திற்கு வந்துள்ளது. அந்த அணி ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, திரிவேதி, மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், அந்த்ரே ரஸல் என பேட்டிங் பட்டாளத்தை வைத்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படியும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் இவர்களை கட்டுப்படுத்த சிறப்பாக வியூகம் வகுப்பார்கள்.

    பந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், பிரசித், அந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங் உள்ளனர். வான்கடே மைதானத்தில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடியவர். வருண் சக்ரவர்த்தி மாயாஜால பந்து வீச்சாளர். ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர்களை எதிர்த்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது சவாலாக இருக்கும்.

    சென்னை அணி வீரர்கள்

    மொத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்து போட்டியின் வெற்றித் தோல்வி அமையும். என்றாலும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 23 முறை மோதியுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளில் 14 முறை சிஎஸ்கேவும், 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
    பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ருத்துராஜ் 10 ரன்னில் வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 
     
    தொடர்ந்து ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

    ஆனால் சென்னை அணியினர் நேர்த்தியாக பந்து வீசி அசத்தினர். அதனால் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழுந்தது.

    49 ரன் அடித்த ஜோஸ் பட்லர்

    ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்புடன் ஆடி 49 ரன்களில் அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

    கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியாவும், ஜெய்தேவ் உனத்கட்டும் போராடினர். இருவரும் இணைந்து 42 ரன்கள் சேர்த்தனர். டெவாட்டியா 20 ரன்னில் அவுட்டானார். உனத்கட் 24 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 2வது வெற்றி ஆகும்.

    சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், சேத்தன் சகாரியா 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ருத்துராஜ் 10 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. என்றாலும் டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது சிஎஸ்கே 9.2 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் சிஎஸ்கே வீரர்கள் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. என்றாலும் ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது.

    சேத்தன் சகாரியா

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேத்தன் சகாரியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
    நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்த சூழ்நிலைக்கு அது சரியாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    சிஎஸ்கே வீரர்கள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

    1. ருத்து ராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. ஷர்துல் தாகூர், 9. தீபக் சாஹர், 10. பிராவோ, 11. அம்பதி ராயுடு, 

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

    1. பட்லர், 2. மனன் வோரா, 3. சஞ்சு சாம்சன், 4. ஷிவம் டுபே, 5. டேவிட் மில்லர், 6. ரியான் பரக், 7. ராகுல் டெவாலட்டியா, 8, கிறிஸ் மோரிஸ், 9. ஜெய்தேவ் உனத்கட், 10. சேத்தன் சகாரியா, 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.
    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 92 ரன்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் சாதனைப் பட்டியலில் தவான் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 195 ரன்கள் அடித்தது. பின்னர் சேஸிங் செய்த டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தவான் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    பஞ்சாப் அணிக்கெதிராக 92 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    விராட் கோலி

    டேவிட் வார்னர் 49 அரைசதம், 4 சதம் என 53 முறை 50-க்கும் மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். தவான் 43 அரைசதம், 2 சதம் என 45 முறை அடித்து 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 39 அரைசதம், 5 சதம் என 44 முறை 50-க்கு மேல் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 39 அரைசதம், 3 சதத்துடன் 42 முறை அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.

    ரெய்னா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 5-வது இடத்திலும், ரோகித் சர்மா 39 அரைசதம், ஒரு சதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
    சென்னை ஆடுகளத்திற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டனர் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பை வான்கடே, சென்னை சேப்பாக்கம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடக்கிறது.

    ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் சென்னையி சேப்பாக்கத்திலும் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்திலும் விளையாடி வருகின்றன.

    மும்பை வான்கடே மைதான ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவும், சென்னை மைதான ஆடுகளங்கள்  பேட்டிங் செய்ய கடினமாகவும் உள்ளது. சென்னை ஆடுகளம் மிகமிக ஸ்லோவாக இருப்பதால் கடைசி 10 ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சோதனையாக இருந்து வருகிறது.

    மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை 150 ரன்களுக்கு கீழ் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி கண்டுள்ளது இந்த நிலையில் சேப்பாக்கம் ஆடுகளங்கள் விளையாட முடியாதது அல்ல என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்த்தனே கூறுகையில் ‘‘உங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுகளங்கள் தேவை என்பது நியாயமானது அல்ல என நினைக்கிறேன். ஏன் ஐபிஎல் போட்டி சுவாரஸ்யமானது என்றால், போட்டி நடைபெறும்  ஒவ்வொரு இடமும் வித்தியாசமாக இருப்பதால் அது சமமான போட்டியாக அமைகிறது.

    சேப்பாக்கம் ஆடுகளம்

    சேப்பாக்கம் ஆடுகளங்கள் சற்று ஸ்லோவாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் 150 அல்லது 160 ரன்கள் கடந்த  சில போட்டிகளில் அடித்துள்ளோம்.

    அவைகள் விளையாட முடியாத வகையிலான ஆடுகளங்கள் இல்லை. சரியான போட்டிக்கான ஆடுகளங்கள். தொடர்ச்சியாக எங்களுடைய அணுகுமுறை சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், சென்னைக்கு ஏற்ப எங்கள் வீரர்கள் மாறிக்கொண்டனர். சில நேரங்களில் தவறுகள் நடக்கலாம். போட்டியில் அது ஒரு பகுதி’’ என்றார்.
    ×