என் மலர்
விளையாட்டு
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 4 ரன்களை எடுத்தார். அவர் ஒரு ரன்னை எடுத்தபோது 20 ஓவர் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.
5 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த விராட் கோலியின் சாதனையை ராகுல் முறியடித்தார். ராகுல் 143 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். விராட் கோலி 167 இன்னிங்சில் தான் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார்.








சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா காரணமாக இருந்தார். அவர் 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.
38 வயதான அமித் மிஸ்ரா ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 164 விக்கெட் (152 இன்னிங்ஸ்) கைப்பற்றி உள்ளார். அவர் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். மலிங்கா 170 விக்கெட்டுகளுடன் (122 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.
தற்போது மலிங்காவை அமித் மிஸ்ரா நெருங்கி உள்ளார். அவருக்கு இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. மலிங்கா ஓய்வு பெற்று விட்டதால், இந்த சீசனிலேயே அமித் மிஸ்ரா, மலிங்காவை முந்தி முதல் இடத்தை பிடிப்பார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய டாப்-5 வீரர்கள் வருமாறு:-
1. மலிங்கா-170 விக்கெட்.
2. அமித் மிஸ்ரா -164 விக்கெட்.
3. பிராவோ -156 விக்கெட்.
4. பியூஸ் சாவ்லா -156 விக்கெட்.
5. ஹர்பஜன் சிங் -150 விக்கெட்.
மும்பை:
கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.94 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக அளவில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும்.
உங்களது கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.






