என் மலர்
விளையாட்டு
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.
பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ரன்னில் அவுட்டானார்.
சிவம் துபே 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார்.

பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளாசினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை.
படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.
மும்பையில் நேற்று இரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது.
தொடக்க வீரர் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடி 60 பந் தில் 95 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருவரும் முதல் விக்கெட் ஜோடியாக 12.2 ஓவரில் 115 ரன் எடுத்தனர்.
வருண் சக்கரவர்த்தி, சுனில் நரின், ஆந்த்ரே ரஸல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கம்மின்ஸ் 34 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 6 சிக்சர்), ஆந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 24 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
சி.எஸ்.கே. வேகப்பந்து வீரர் தீபக் சாஹர் 29 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நிகிடி 3 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 45 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. சி.எஸ்.கே. பெங்களூர் டெல்லி ஆகிய 3 அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னிலை வகிக்கிறது.
வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன்களை நல்ல முறையில் குவித்தோம். அதே நேரத்தில் எதிர் அணியை மதிக்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதை நான் எனது வீரர்களிடம் தெரிவித்தேன். மிகப்பெரிய ஸ்கோரை பிடித்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றேன்.
எங்களது திட்டம் சிறப்பான முறையில் இருந்தது. 20 ஓவர் முழுமையாக சென்றிருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும்.
கடந்த ஐ.பி.எல். சீசன் போலவே தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
சென்னை அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வருகிற 25-ந் தேதி எதிர்கொள்கிறது.
கொல்கத்தா அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 24-ந் தேதி சந்திக்கிறது.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 4 ரன்களை எடுத்தார். அவர் ஒரு ரன்னை எடுத்தபோது 20 ஓவர் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.
5 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த விராட் கோலியின் சாதனையை ராகுல் முறியடித்தார். ராகுல் 143 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். விராட் கோலி 167 இன்னிங்சில் தான் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார்.








