என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர்.
டி காக் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் நிதானமாக ஆடினர். அகர்வால் 25 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ராகுலுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். ராகுல் அரை சதமடித்து அசத்தினார்.
கடைசி கட்டத்தில் கிறிஸ் கெயில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். ராகுல் 60 ரன்னுடனும், கெயில் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 17.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.





சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை பெற்று உள்ளது. அந்த அணியில் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷான், போல்லார்ட், பும்ரா, ராகுல் சாகர், போல்ட் போன்ற வீரர்கள் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் டெல்லியிடம் மும்பை தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற முனைப்பு காட்டும். மும்பையின் பேட்டிங்கில் இன்னும் வலுவான தன்மை வரவில்லை. ஆனால் பந்து வீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. பேட்டிங்கில் முன்னேற்றம் காண்பது அந்த அணிக்கு அவசியமாகும்.
பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) வெற்றி பெற்றது. அதன்பின் மூன்று ஆட்டத்தில் (சென்னை, டெல்லி, ஐதராபாத்) தொடர்ச்சியாக தோற்றது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு பஞ்சாப் திரும்புமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, ஷாருக்கான், முகமது சமி, அர்ஷ்தீப் சிங் போனற வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் பேட்டிங், சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக மோசமாக இருந்தது. முறையே 106 ரன்னுக்கு 120 ரன்னும் எடுத்தது.
இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஷிவம் துபே 46 ரன்னும், ராகுல் திவேதியா 40 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறித்தனர்.
படிக்கல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். பெங்களூரு 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. படிக்கல் 101 ரன்னும், கோலி 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
ராஜஸ்தான் 3-வது தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
தேவ்தத் படிக்கலின் ஆட்டம் ஒரு சிறந்த இன்னிங்ஸ். கடந்த ஆண்டு முதல் சீசனிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒருவர் செல்வது சிறப்பாக உள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் என்பது பார்ட்னர்ஷிப் பேட்டிங்கை பற்றியது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்க முடியாது. ஒருவர் சிறப்பாக விளையாடும் போது அவருக்கு பேட்டிங் வாய்ப்பைதருவது எனக்கு முக்கியம். இன்று எனது பங்களிப்பு வேறுபட்டு இருந்தது. அதை நான் தேர்ந்தெடுத்தேன்.
சதத்தை பற்றி நானும் படிக்கல்லும் பேசினோம். அவர் என்னிடம் ஆட்டத்தை முடிக்கவிடுங்கள். இன்னும் நிறைய (சதம்) வரும் என்றார். உடனே நான் அவரிடம், இப்படி சொன்ன பிறகு நீ சதம் அடிக்க வேண்டும் என்றேன். அவர் சதத்துக்கு தகுதியானவர். இது குறை பாடற்ற இன்னிங்ஸ் ஆகும்.
பந்து வீச்சாளர்களில் எங்களுக்கு பல தனித்துவமான பெயர்கள் இல்லை. ஆனால் எங்களிடம் திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
கடைசி கட்ட ஓவர்களில் தனித்து நிற்கும் அணியாக இருக்கிறோம். உண்மையில் நாங்கள் 30 முதல் 35 ரன்களை கட்டுப்படுத்தினோம்.
படிக்கலின் ஆட்டம் மிகச்சிறந்ததாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை ஆக்ரோஷமான, நம்பிக்கையாக பந்துவீச்சு முக்கியமானது என்றார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது. சிவம் துபே 46 ரன்னும், ராகுல் டெவாட்டியா 40 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூர் சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பெங்களூர் அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர் படிக்கல், விராட் கோலி.
நேற்றை ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மொத்தம் 6,021 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், 3வது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், 4வது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், 5வது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர்.
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற மல்யுத்தத்தில் நடத்தப்படும் கடைசி தகுதி சுற்று இதுவாகும். இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவுக்கு முன்னாள் ஆசிய சாம்பியனான அமித் தன்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் மூத்த வீரர் சுஷில்குமாருக்குரிய வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டது. 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியவரான 37 வயதான சுஷில்குமாரிடம் அணித் தேர்வில் பெயர் பரிசீலிக்கப்படாதது குறித்து கேட்ட போது, தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது. இந்திய மல்யுத்த சங்கத்திடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் பேசுவேன்’ என்றார்.
மல்யுத்த சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பிரீ ஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் ஆசிய தகுதி சுற்று மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சந்தீப் மானின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அடுத்த நிலையில் உள்ள அமித் தன்கருக்கு வாய்ப்பு வழங்குவது என்று தேர்வு கமிட்டி முடிவு செய்திருக்கிறது. இதே போல் 97 கிலோ பிரிவில் சத்யவார்ட் காடியன், 125 கிலோ பிரிவில் சுமித், கிரேக்கோ ரோமன் பிரிவில் சச்சின் ராணா (60 கிலோ), ஆஷூ (67 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), சுனில் (87 கிலோ), தீபன்ஷூ (97 கிலோ), நவீன் குமார் (130 கிலோ), பெண்கள் பிரிவில் சீமா (50 கிலோ), நிஷா (68 கிலோ), பூஜா (76 கிலோ) ஆகியோர் பங்கேற்பார்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






